Skip to content
உறவாட | வாகண்ணா | இரவோடும் | முன்னாலே |
ஒருகோடி | இன்பம் | இங்கே! | |
உறங்காமல் | விரகமொடு | உனக்காகக் | காத்திருப்பேன் |
வரவேண்டும் | வாவா | கண்ணா! | |
தரவேண்டும் | நீஇன்பம் | பெறவேண்டும் | நானதனை |
வரம்,வேண்டிக் | கேட்கிறேன் | கண்ணா! | |
பொறுப்பேனோ | மனமில்லை | மறுத்துநீ | போவாயோ |
வெறுத்துயிரை | விடுவேன் | கண்ணா! | |
கண்ணுக்குத் | தெரியாத | இமையாக | நீயிருப்பாய் |
காத்திருப்பேன் | வாவா | கண்ணா! | |
கருமைநிற | மானாலும் | காரிருளில் | நானறிவேன் |
கண்மறைந்து | ஏய்க்காதே | கண்ணா! | |
தென்றலெந்தன் | தோள்தொடவே | உனையெண்ணி | நான்மலர்ந்தேன் |
திண்டாட | விடலாமா | கண்ணா! | |
பெண்பாவம் | பொல்லாது | என்னைநீ | கொல்லாதே |
பொறுமையெனக் | கிலையே | கண்ணா! | |
Back to Top