ஊட்டிகுளிர் ஊட்டு

காமினிகண்மணிநாமினிஓரணி
மாதுநீநீகனிதா!
தேடிநீகூடுநீஆடுநீபாடுநீ
நாடிநீஓடிநீவா!
காவிலேகனியொடுகனியிலேசாரெடு
தேனிலேஊறவிடுதா!
பூவிலேநிறமெடுமின்னிலேபொன்னெடு
நாவிலேதமிழெடுதா!
சந்தனச்சேரெடுதன்தனம்பூசிடு
வெந்தனல்போக்கிடுவா!
முந்திபடுதென்றலைமுந்தவிடுதூதுவிடு
அந்திபடுமுன்னமேவா!
ஊட்டிகுளிர்ஊட்டிவிடுஊடலினைஓட்டிவிடு
வாட்டுதுயர்நீக்கிவிடுவா!
பாட்டுமிளிர்ராகமாககூட்டுசதிதாளமாக
ஆட்டுவிக்கமுன்னெழுந்துவா!
அன்பெனும்துடுப்பெடுஆசைகடல்கடந்திடு
வெம்பிடாமலென்னைநம்பிவா!
தன்பொழில்குமுதமேஅமுதமேபைங்கிளி
தயங்கிடாமலென்னைத்தேடிவா!
Back to Top