Skip to content
முன்னேற்றம் | தந்திடுமே | முயற்சி; | அதனை |
முறையாக | மேற்கொண்டால் | உயர்ச்சி; | நல்ல |
எண்ணோட்டம் | வேண்டுமடா | உனக்கு; | இதுவே |
எப்போதும் | உனைஉயர்த்தும் | கணக்கு; | அறிவுக் |
கண்ணோட்டம் | கரையேற்றும் | பாரு! | ஆழ்ந்த |
கருத்தோட்டம் | மதிப்புயுர்த்தும் | சீரு! | என்றும் |
தன்னோட்டம் | தடம்மாறாப் | போக்கு; | முயன்று |
தாங்கிப்பார் | வாழ்வுயரும் | வறுமை | நீங்கும்! |
பாடுபடு | பலனுண்டு; | மண்ணை | வெட்டி |
பகுத்துப்பார் | தங்கமொடு | வைரம் | உண்டு! |
கேடுவிடு; | பிறர்வாழத் | தொண்டு | செய்நீ! |
கேட்காத | போதுமிறை | அருள்கி | டைக்கும்! |
ஆடுவிட | காடுகெடும்; | நாணல் | இட்டால் |
ஆறுகெடும்; | இதுபோன்ற | செயல்கள் | நீக்கு! |
ஈடுபடு; | ஊறுபடா | செயல்கள் | செய்நீ! |
எப்போதும் | வாழ்வினிக்கும் | இன்பம் | தேங்கும்! |
அறுவடைதான் | வேண்டுமெனில் | விதைக்க | வேண்டும் |
அறுபடையான் | விதைவிதையான் | வினைதான் | தீர்ப்பான்! |
உருப்படியாய் | ஓர்ந்துபார் | ஓலம் | வேண்டாம் |
உன்னுழைப்பு | நேர்மைதான் | உயர்த்திக் | காட்டும்! |
ஒருவிடையும் | காணாத | கேள்வி | உண்டா! |
ஒவ்வொன்றாய்க் | கேட்டுப்பார் | நிகரே | நீதான்! |
வரும்பொருளாய் | இறைவனத்தில் | ஏற்றம் | சேர்ப்பான்! |
வற்றாத | வளவாழ்வு | அமையும் | காண்பாய்! |
தொட்டால்தான் | செயல்துலங்கும்; | தூர | நின்று |
துதிபாடிப் | பயனில்லை; | இனிப்பு | தன்னை |
எட்டவைத்துப் | பார்த்திருந்தால் | சுவைதான் | உண்டா! |
இப்போதே | எழுவிழிநீ | செயலை | நோக்கு! |
அட்டியில்லை | வெற்றியினை | அடைந்தே | தீர்வாய்! |
அதைத்தடுக்க | எவருண்டு | புதுமை | செய்நீ |
பெட்டியிலே | அடைபட்டுக் | கிடந்தி | டாதே |
புறப்படுநீ | சிறப்புடனே | ஏற்றம் | காண்பாய்! |
மூழ்கினவன் | முத்தெடுப்பான்; | நூல்கள் | தன்னை |
முறையாகப் | பயின்றவன்தான் | வெற்றி | காண்பான் |
ஏழ்மையினைக் | தகர்த்தெறிநீ | ஏற்றம் | கொள்வாய் |
இன்சொல்நற் | பண்புழைப்பு | கொள்வாய் | வெல்வாய் |
ஆள்வதற்கு | ஆற்றல்கொள்; | ஆமை | யாநீ! |
ஐந்தடங்கி | ஒடுங்கிடாதே; | அடிமை | நீக்கு |
தாழ்ந்துழலும் | எண்ணத்தை | அறுத்து | வீசு |
தலைநிமிரு; | எழுகதிராய்; | தயக்கம் | ஏனோ |
கோபுரம்போல் | நீஉயரு; | கொள்கை | மாறாக் |
குணக்குன்றாய் | வாழ்ந்திடுநீ; | பயிர்கள் | வாழ்த்தும் |
காவிரிபோல் | வளங்கூட்டு; | வானம் | தந்த |
கருணைமிகு, | மழையாகு, | எளியர் | ஏழை |
ஆவியுள்ள | வரைமறவா | உதவி | செய்நீ |
அரும்பசிக்கு | உணவளிநீ; | தெய்வம் | வாழ்த்தும் |
தீயவர்கள் | உறவுவிடு; | நல்லோர் | நாடு |
திருவருளும் | அறம்பொருளும் | சிறக்கும் | காண்பாய் |
Back to Top