ஏக்கம்

மன்னவனே!என்னுளத்தைக்கொள்ளைகொண்ட
மாதவனே!காமனெனவந்ததேவே!
சின்னவளைப்பார்வைவலைதன்னால்சுற்றி
சிறைபடுத்திஉன்வலையில்போட்டகண்ணா!
பெண்னெனக்குப்பெருநிதியாய்க்கிடைத்ததென்னா!
பேதையெனைச்சீதையாக்கவந்தராமா!
உன்னைநினைத்துருகுவதுஎந்தன்வேலை
ஓடிவரக்கூடாதாஇந்தவேளை!
வரும்தென்றல்காற்றுனதுபெருமைசொல்லும்
வளர்பச்சைதத்தையதும்அதையேசொல்லும்
பெரும்ஒளிசேர்கதிருமுந்தன்புகழைச்
பிறைநிலவும்மணமலரும்அதையேசொல்லும்
கரைபுரளும்காட்டாற்றுவெள்ளம்போலே
காரிகையென்காதலுணர்வெல்லைதாண்டி
வருவதினைஅறியாயோவாவாகண்ணா!
வாழ்வெனக்குத்தரவேண்டும்மன்னாவாவா!
நீலநிறகண்பார்த்துப்பூத்துப்போச்சு!
நின்றுஎதிர்பார்த்துக்கால்ஓய்ந்துபோச்சு!
மீளமுடியாதமனம்தவித்துப்போச்சு!
மெல்லியலென்மேனிதுரும்பாகிப்போச்சு!
வாழநினைத்திருந்துமனம்ஏங்கிப்போச்சு!
வரவிலையேல்நின்றுவிடும்உடலில்மூச்சு!
பாழ்மனத்தைத்தாங்கவுடன்வந்தாலாச்சு!
பதைத்திறந்துஉயிர்போனால்உனக்கேஆச்சு!
Back to Top