Skip to content
கண்ணும் | கண்ணும் | காணும் | போது |
கவிதை | பேசுது! | கணைகள் | வீசுது! |
காந்தம் | பிறக்குது! | கதவு | திறக்குது! |
காதல் | துளிர்க்குது | கதையே | மாறுது! |
| | | |
| | | |
பெண்ணை | ஆணைப் | பிணைக்குது! | இணைக்குது! |
பேதம் | மறக்குது! | வேதம் | துறக்குது! |
துடிக்குது! | முடிக்குது! | துள்ளிக் | குதிக்குது! |
வெடிக்குது | வெறுக்குது! | விளங்க | மறுக்குது! |
| | | |
| | | |
நெறியை | மீறுது! | நிலைமை | மாறுது! |
உலகைத் | துருப்பென | ஒதுக்கிப் | போடுது! |
மதியை | அழிக்குது! | மனதை | மயக்குது! |
சொந்தம் | இழக்குது! | சுகமே | நினைக்குது! |
| | | |
| | | |
உள்ளம் | உடைக்குது! | ஊமை | யாக்குது! |
உணர்வைத் | தூண்டுது! | உணவை | மறக்குது! |
கலகம் | விளைக்குது! | கனவில் | மிதக்குது! |
இன்பம் | தேடுது! | இறகு | முளைக்குது! |
| | | |
| | | |
பொறுமை | இழக்குது! | பெருமை | குலைக்குது! |
உரிமை | மீறாது! | உறவை | உதறுது! |
வறுமை | வளமை | வாழ்வை | மறக்குது! |
வசைவோர்! | இசைவோர்! | ஒன்றென | எண்ணுது! |
| | | |
| | | |
உயரப் | பறக்குது! | ஊஞ்சலில் | ஆடுது! |
துயரம் | நொறுக்குது! | துணிச்சல் | பெருக்குது! |
உயிரில் | நுழையுது! | ஒளிந்து | சிரிக்குது! |
நெஞ்சைப் | பிழியுது! | நெருப்பாய் | எரிக்குது! |
| | | |
| | | |
கட்டும் | கயிராய்! | காலன் | விடமாய்! |
தூண்டில் | முள்ளாய்த் | தொடருது | படருது |
கிட்ட | அழைக்குது! | கிறுக்கைப் | பெருக்குது! |
முட்டா | ளாக்குது! | மோகம் | ஊட்டுது! |
| | | |
| | | |
வீரப் | போர்பல | விளைக்குது! | அழிக்குது! |
“வெறி”யைத் | தூண்டுது! | வெல்லுது! | கொல்லுது! |
வெற்றியில் | சிரிக்குது! | கண்ணீர் | இனிக்குது! |
வீழ்ச்சியில் | சிரிக்குது! | கண்ணீர் | கரிக்குது! |
| | | |
| | | |
அண்ணலும் | நோக்கிட | அவளும் | நோக்கிட |
கண்ணின் | பிரசவம் | கம்பன் | காவியம்! |
மும்தாஜ் | ஷாஜகான் | விழிகளும் | நோக்கிட |
தாஜ்மகால் | பிறந்தது! | உலகம் | வியந்தது! |
| | | |
| | | |
கண்ணொடு | கணணினை | நோக்கிட | வாய்ச்சொல் |
காணுமோ | பயனெதும்; | வள்ளுவர் | கேட்டார்! |
அமரா | வதிஅம் | பிகாபதி | கண்மொழி |
காதலை | வளர்த்தது! | வாய்ச்சொல் | அழித்தது! |
| | | |
| | | |
ரோமியோ | சூலியட் | லைலா | மஜ்னு |
காவியம் | வந்தது | கண்வழி | தந்தது! |
அனார்கலி | “கண்”-”வாள்” | சலீமைத் | தாக்கிட |
அக்பரை | பகைத்தது! | அழிவை | விளைத்தது! |
| | | |
| | | |
சாம்ராஜ் | யங்கள் | எழுந்ததும் | விழுந்ததும் |
சரித்திரக் | கண்வழிச் | சாதனை! | வேதனை! |
கண்கள் | கண்களைக் | காண்பது | தவறோ! |
கண்களில் | வலிமை | தந்தவர் | எவரோ! |
Back to Top