கண்டதும் காதல்

பூவாடை எனைமயக்கத் திரும்பிப் பார்த்தேன்
பொன்னோடைஎழில்மேனிபொலிவுகூட்டும்
பாவடைதாவணியின்பருவமங்கை
பார்வையிலேசுருக்கிட்டுஎனையிழுத்தாள்!
மாவாட்டும்கற்குழவியாகிஎந்தன்
மனஞ்சுழல உணர்வுந்தஆர்வத்தாலே
நாவாட நான்துணிந்தேன்; அவளோமெல்ல
நடைபெயர்ந்தாள்;நான்தொடர்ந்தேன்;கடலோபக்கம்
பார்வையிலேஎனையிழந்தேன்;கன்னலாளின்
பசப்பினிலேநினைவிழந்தேன்;கொவ்வைச்செந்தேன்
கோர்வையிதழ்ச்சிவப்பினிலேசெயலிழந்தேன்
குலைக்கனியாம்கன்னத்தைமார்பைக்கண்டு
ஊர்வெளியைச்சூழ்நிலையைமறந்தேபோனேன்!
உளறுமொழிகிறுக்கனைப்போல்புலம்பலானேன்!
கூர்விழியாள் கடற்கரையை அடைந்த போது
குமுறுமுணர்வோடங்குநானும்சேர்ந்தேன்!
நான்பார்த்தேன்;மான்பார்த்துத்திரும்பிக்கொண்டாள்!
நான்பார்க்காப்பாவனையில்திரும்பும்போது
மான்பார்த்தாள்;நேர்க்கோட்டில்விழிகள்சேர
மணிபார்த்தேன்இரவெட்டு;நிலவோநல்ல
தேன்வார்த்துஒளிகொட்டும்;அலைகள்தாவும்
திசைஎங்கும்இன்பமோஇன்பம்என்றே
தானார்த்துக்காதலர்கள்இளமைவேகம்
தணித்திருந்தார்;நாங்களங்கேதனித்திருந்தோம்
Back to Top