காமனுக்கும் எனக்கும் இல்லை வம்பு

கண்ணுறக்கம்போச்சுதடிகள்ளியே– உன்னைக்
காணத்தினம்துடிக்கிறேனேதுள்ளியே!
காத்திருக்கச்சொன்னாயேகன்னியே– நீஏன்
கண்டுகொள்ளவில்லையடிஎன்னையே!
ஆத்தங்கரைதோப்பினிலேகிள்ளையே– உன்னை
அணைத்திடவேஏங்குறேனேமுல்லையே!
பார்த்தவிழிபூத்ததடிவள்ளியே– என்னைப்
பார்த்தமலர்சிரிக்குதடிஎள்ளியே!
ஜோடிப்புறாகிளைதனிலேகொஞ்சுது– மான்கள்
சேர்ந்திணைந்துபுறாயினத்தைமிஞ்சுது!
நாடிமலர்தேடிவண்டுஉண்ணுது– உன்னை
நான்நினைத்தேன்மனதென்னவோபண்ணுது
காமனுக்கும்எனக்குமில்லைவம்பு – ஏனோ
கனைதொடுத்துவீசுறானேஅம்பு!
மாமனென்மேல்உனக்கிலையோஅன்பு – தனியே
வாடுகிறேன்;நீதருவாய்தெம்பு!
குயிலும்தன்துணையெண்ணிப்பாடும் – அந்தக்
குரல்கேட்டுப்பெண்குயிலும்நாடும்!
மயில்கடைமேகத்திற்காடும்– எனது
மனமோநீவரும்பாதைதேடும்!
பிடிவாதம்விட்டுவாஇங்கே- உன்னைப்
பார்க்காமல்வாழ்வதுநான்எங்கே!
வடிவழகேதேடுகிறேன்எங்கும் – நீயும்
வந்தால்தான்என்னுயிரும்தங்கும்
Back to Top