தந்தை பெரியார்

ஈரோட்டுப்பாசறையாய்இருளோட்டும்ஒளிப்பிழம்பாய்
வேரோடுபுராணத்தைவீழ்த்தவந்தவீரர்யார்?
நால்வருணகுலாச்சாரம்இதிகாசஐதிகத்தின்
வாலறுத்தகொடுவாளாம்வரலாற்றுநாயகர்யார்?
கடவுள்பெயர்சொல்லிக்கண்மூடிவாழ்ந்தவரை
உடைவாளைக்கையேந்தஒருங்கிணைத்ததளபதியார்?
விட்டவிதிதலையெழுத்துகடவுள்செயல்என்றவரை
தட்டிவிட்டெழுப்பியேதலைநிமிரச்செய்தவர்யார்?
அரசாங்கஅதிகாரிஅருகினிலேசெல்வதற்கும்
அஞ்சிக்கிடந்தவரைஅரசாளச்செய்தவர்யார்?
ஜாதியெனும்கொடுமையினைத்தகர்த்தெறிந்துசமன்செய்து
நீதியங்கேநிலைத்தோங்கநெத்தியடிகொடுத்தவர்யார்?
ஆதியிலேஜாதியில்லைபாதியிலேவந்ததென்று
வாதிட்டுவெற்றிகண்டவரலாற்றுத்தலைமகன்யார்?
காட்டோரம்வயலோரம்கண்காணாத்தூரத்தில்
வீடுகட்டித்தனித்திருந்தவிதிமுறையைத்தூளாக்கி
நாட்டுக்குள்வீடுகட்டிநலமனைத்தும்பெற்றுயர
தீட்டுக்குத்தீட்டுதந்ததிராவிடத்துப்பெரியார்யார்?
பள்ளியிலேகல்லூரிப்படிப்பினிலேஇடந்தந்து
வல்லவராய்உயர்ந்தோங்கவழிகாட்டிநின்றவர்யார்?
தீண்டாமைஎனும்தீமைதீக்கிரையாய்மாண்டிடவும்
மூடப்பழக்கமெலாம்மூள்நெருப்பில்வெந்திடவும்
கொத்தடிமைநிலையெல்லாம்கூண்டோடுஅழிந்திடவும்
சித்தமெலாம்பகுத்தறிவுச்சிந்தனையாய்ப்பூத்தவர்யார்?
எட்டாதபாதாளம்இருந்திட்டமக்களினை
எட்டுகிறபடிக்குயர்த்திஏற்றமிகத்தந்தவர்யார்?
சாத்திரத்தைக்கோத்திரத்தைக்காத்திருந்தசூதரிடம்
சூத்திரனும்சமமென்றுசூலுரைத்தபகலவன்யார்?
ஓடுகிறஇரத்தத்தில்உள்மூச்சில்உணர்வுகளில்
வேற்றுமைஇல்லையெனவிளக்கத்தைத்தந்தவர்யார்?
வீட்டுக்குள்பெண்பூட்டிவிலங்கிட்டுஅடிமையென
கூட்டுக்குள்அடைத்தவரைக்குலைநடுங்கச்செய்தவர்யார்?
பெண்ணுக்குச்சமஉரிமைபேச்சுரிமைதந்தவர்யார்?
கண்ணுக்குச்சமமென்றகண்ணியத்தைத் தந்தவர்யார்?
வீதியிலேபொதுக்கூட்டமேடையிலேபயமின்றி
பாதிப்பேர்பெண்கள்வரப்பாதைதிறந்தவர்யார்?
வறுமையிலேவாழ்ந்தவர்கள்வளமேகாண
வழிகாட்டிநின்றவர்யார்?மடமைஎன்னும்
சிறுமையிலேஉழன்றோரைஅறிவுஊட்டி
சிந்திக்கவைத்தவர்யார்?சேரன்சோழன்
பெருமையெலாம் மறந்தார்க்குநினைவுஊட்டி
பீடுபெறச்செய்தவர்யார்?கல்விகேள்வி
நறுமணத்தைஅனைவரையும்நுகரச்செய்து
நாட்டினிலேஎழுச்சியினைத்தந்தவர்யார்?
பாம்பென்றும்பாம்பைவிடக்கொடியதென்னும்
பார்ப்பனரைத்தாக்கியதார்?பூநூல்பற்றி
வீம்புபலபேசியதார்?பிள்ளையாரை
விபத்துக்காளாக்கியதார்?ராமர்தன்னை
தேம்பியழவிட்டதுயார்?வேரோடாங்கே
தென்னைதனைவீழ்த்தியதார்?வைக்கம்சென்று
தீண்டாமைஒழித்ததுயார்?கள்ளுண்பாரைத்
திருத்தியதார்ஈவேராபெரியாரன்றோ!
Back to Top