Skip to content
வாடாதே | மனிதா; | உனைத் | தாழ்த்திப் |
வஞ்சகர்க்கு | அஞ்சாதே; | துணிந்து | நில்லு! |
மூடாதே | முயற்சிதனை; | விதையின் | ஓட்டை |
முட்டியுடைத் | திளந்தளிரும் | துளிர்க்கும் | பாரு! |
நாடாது | தோல்வியுனை; | கல்பி | ளந்து |
நாட்டிடுதே | மரம்வேரை | இதனைத் | தேரு! |
ஓடாதே! | உனைப்பழிப்போர் | ஓய்ந்து | போவார்! |
ஓய்வின்றி | நேர்மையுடன் | உழைத்தால் | வெல்வாய் |
பணமிருந்தால் | பத்துப்பேர் | புகழ்வார்; | உன்னைப் |
பாராட்டி | இந்திரன்சந் | திரனென் | பார்கள்! |
பணமில்லா | நிலைகண்டால்; | பார்க்கா | தார்போல் |
பாதைதனை | மாற்றியவர் | மறைந்து | போவார்! |
குணம்நாடிப் | பார்ப்பவர்கள் | எவரும் | இல்லை |
குறைகூறிப் | பழித்திகழப் | பலபே | ருண்டு! |
இனங்கண்டு | முன்னேறு; | உனக்குப் | பின்னால் |
எவரெவரோ | துதிபாடி | வந்து | நிற்பார்! |
அச்சத்தை | விட்டொழிநீ; | மடமை | நீக்கு |
ஆளுமையைப் | பெற்றிடுநீ; | உலகில் | உன்னை |
துச்சமென | இகழ்ந்தவர்கள் | புகழக் | காண்பாய் |
தூய்மை | அறச் | செயல்கள்உனை | உச்சம் |
நிச்சயமாய் | நல்லதுசெய் | நலிந்தோர் | வாழ |
நிலைத்தசெயல் | செய்துபார்; | உலகம் | போற்றும்! |
கொச்சைபட | உன்புகழை | நசுக்கிப் | போட்ட |
கொடியவர்கள் | தலைதாழ்ந்து | வணங்கி | எற்பார்! |
உன்னை | நீநம்பு; | உன்செய | லைநம்பு |
உன்னாற்றல் | வலிமைதனை | உலகே | மெச்சும்! |
தன்னையறி, | துணிந்தியங்கு; | செயலை | நாட்டு! |
தானாக | முன்னேற்றம் | உன்னை | நாடும்! |
பின்னிருந்து | குழிபறிக்கும் | நரிகள் | கூட்டம் |
பிடரிதலை | கால்படவே | ஓடும் | காண்பாய்! |
எண்ணரிய | சாதனைகள் | செய்யத் | தானே |
இவ்வுலகில் | நீபிறந்தாய்; | பழிக்கஞ் | சாதே! |
போர் | நடத்து; | சூழ்ச்சி; | பழி; |
புறமுதுகிட் | டோடப்பகை | நொறுக்கிப் | போடு! |
யாருனக்கு | வழிகாட்டி; | நேர்மை | நீதி |
நியாயம்;உழைப் | பென்றாலோ, | அதுவே | வெல்லும்! |
தேருதலை | நீயுனக்கே | தேற்றிக் | கொள்ளு! |
தேம்பியழு | வார்;பழித்தோர்; | தொலைந்தே | போவார்! |
ஆறுதலைப் | பெறுமனிதா; | ஆறு | தேரு |
அருகிருக்கு | வெற்றி;இதைத் | தடுப்பார் | யாரு! |
Back to Top