Skip to content
பஞ்சத்தை | ஓட்டிடுவார்; | மக்கள் | மீளப் |
பகுத்தறிவை | ஊட்டிடுவார்; | துணிவைத் | தந்து |
அஞ்சுநிலை | போக்கிடுவார்; | விழிப்பு | தந்து |
அவலநிலை | நீக்கிடுவார்; | அடிமை | ஆண்டான் |
கெஞ்சுநிலை | துறத்திடுவார்; | கீழும் | மேலும் |
கெடுப்பவனின் | வேரறுப்பார்; | கொடியோர் | நாட்டில் |
மிஞ்சுநிலை | தடுத்திடுவார்; | அவரைத் | தானே |
மேதினியில் | மனிதரிலே | தெய்வம் | என்போம்! |
கொத்தடிமை | ஒழித்தவரை; | கொடுமை | கண்டு |
குமுறியெழும் | குணத்தவரை; | ஏழை | வாழ |
நித்தமுழைக் | கின்றவரை; | நேர்மை | நீதி |
நிலைக்கவழி | செய்பவரை; | உலகே | மெச்சும் |
வித்தையிலே | வல்லவரை; | நாடு | ஓங்க |
விடியலினைத் | தந்தவரை; | காலந் | தோறும் |
முத்தமிழே; | ஆருயிரே; | அமுதே | என்று |
மூவுலகும் | தலைவணங்கும் | மறுப்பா | ருண்டோ? |
பசித்திருப்போர் | நிலையறிந்து | அதனைப் | போக்க |
பாதைவழி | தேடியவர் | புத்த | ரென்போம்! |
கசிந்துருகிப் | பயிர்வாட | தானும் | வாடும் |
கருணைமனங் | கொண்டவர்தான் | ராம | லிங்கர்! |
நசிந்துடலில் | நோயுற்ற | உயிருக் | காக |
நற்புதுமை | நிகழ்த்தியவர் | ஏசு | நாதர்! |
புசித்திடவே | புறாகேட்ட | வேட | னுக்குப் |
பொன்னுடலைச் | “சிபி” | தந்தார்! | உண்டோ |
சாந்தியொற்று | மையமைதி | சமத்து | வத்தைத் |
தாரணிக்குத் | தந்து | “நபி” | நெறியில் |
மாந்தரது | மடமையிருள் | போக்க | வந்த |
மணிவிளக்கு | சாக்ரட்டீஸ் | லிங்கன் | கமால் |
காநதி, | பெரி | யார்அண்ணா | திருவள் |
காட்டும்வழி | நடந்துநல் | அறிவை | ஆள்வோர் |
ஏந்துசுடர் | ஒளியினிலே | உலகே | உய்யும்! |
ஏதுயினி | மானுடத்திற் | கிடர்பா | டேது? |
Back to Top