பெண் விழிப்பு

பெண்ணுக்கும்ஆணுக்கும் சமத்துவந்தான்
பேசுகிறோம் இந்நாளில்; ஆனால், அந்நாள்
பெண்ணிழிவு பேசியுமே அடிமை யாக்கி
பிழைகூறி வழிமாறி பழிகள் தூற்றி
பெண்ணைப்போய்பேயென்றும்மாயம்செய்யும்
பிசாசென்றும் காட்டேரிகூனிஎன்றும்
கண்ணெதிரே வருகின்ற உரிமை போக்கி
கடைக்கோடி அடுப்படியில் ஒதுக்கி வைத்தார்!
பெண்ணுக்குவீட்டிலேயும்வெளியிலேயும்
பேசுவதற்கு உரிமையிலை; நாணம் அச்சம்
பெண்ணிற்கு மட்டுமென கதவுப் பக்கம்
போயொதுங்க; உணர்வொடுங்க; அடிமை செய்தார்
வண்ணமலர் வான்நிலவு உயிரோ வியம்
வடிவழகு என்றேட்டில் எழுதி வைப்பார்!
பெண்ணடக்கிஆண்டிடுவார்;ஆண்மைஎன்பார்!
பேதமையால்அழித்திட்டார்;மடமைகாத்தார்!
பெண்ணின்றிஆணுக்குஇன்பம்ஏது
பிரசுகங்கள்,பிரசவங்கள்எவரால்கிட்டும்
பெண்ணின்றிஆண்வர்க்கம்தோன்றப்போமோ
பிள்ளைவளர்க்கின்றபாசம் யாரின் பாசம்;
பெண்வெறுக்கும் ஜடாமுடிசேர் முனிவர் கூட
பெண்துறவி சீடர்துணை கொண்ட துண்டு
கண்ணிரண்டு ஆடவர்க்கு உண்டு என்றால்
கண்ஒன்று பெண்ணென்று கண்டார் இன்று
வாளேந்தி பரியேறி போர்வென் றாண்ட!
வரலாறு பெண்ணுக்கும் உண்டு; நல்ல
கோலேந்தும் வீரமங்கை வேலு நாச்சி
குன்றிலுயர் மங்கம்மா ஜான்ஸி உண்டு
வேலேந்தி ஆண்வர்க்கம் அடிமை கொண்ட
ஆரவல்லி சூரவல்லி அமுத வல்லி
சூளேந்தி ஆண்டதுவும் உண்டு; அந்த
துடிப்புத்தான் பெண்ணுரிமை விடிவின் உச்சம்!
அடிமைப்பெண்ணைச்சந்தைப்பொருளாய்விற்றார்
ஆடுமாடொப்பஇழிநிலையில் வைத்தார்
கொடுமையிது கொடுமையென அண்ணல் நபிதான்
கொடுஞ்செயலின் வேரறுத்தார் வெற்றிகண்டார்
மிடிமையொடு மடமையற பெரியார் காந்தி
பாரதிபா ரதிதாசன் கலைஞர் அண்ணா
படித்தபகுத் தறிவாளர் திரண்டு வெற்றிப்
படிமுகத்தில் பெண்ணுயர்த்தி வைத்தார்; வென்றார்!
படிப்பதிலும்நடிப்பதிலும்விண்ணாராய்ந்து
பறப்பதிலும்பட்டங்கள்சட்டம்ஆளத்
துடிப்பதிலும்கல்விகேள்வி வேலை வாய்ப்பில்
தொய்வின்றி விழிப்போடு விளையாட் டினிலும்
பிடிப்போடு சமமாக உயர்ந்தார் பெண்கள்,
புதுப்புரட்சி செய்கின்ற காலம் கண்டோம்!
அடிப்படையில் ஆண்பெண்கள் சமமென்றாச்சு!
ஆர்ப்பரித்து எழுந்ததுகாண்; பெண்வி ழிப்பு!
Back to Top