(கவிப்பேரரசர் கண்ணதாசன் பாராட்டிய கவிதை)
மேகத்தை | ஒத்தகரும் | கூந்தல்; | பாயும் |
மீன்அம்பை | ஒத்தஇரு | கண்கள்; | காதல் |
வேகத்தை | தூண்டுகிற | பார்வை; | வட்ட |
வெண்ணிலவைப் | போலமுகத் | தோற்றம்; | உற்ற |
சோகத்தை | மாற்றுகிற | வனப்பு; | இன்பச் |
சுனைத்தேக்கம் | இன்னமுதக் | கூட்டு; | மோக |
தாகத்தை | மீட்டுகிற | இளமை; | கொண்ட |
தளிர்மேனி; | இளமொட்டு; | நங்கை | நல்லாள்! |
ஓவியந்தான்! | உயிரின்பக் | கவிதை | யேதான்! |
ஒளிகுன்றா | சுடர்மணிதான்! | ஒப்பே | இல்லாக் |
காவியந்தான்! | கற்பனையால் | காணக் | கிட்டாக் |
காரிகைத்தான்! | கனிக்கொத்து! | கன்னற் | சாறு! |
மேவியதேன்! | எழிற்குன்று | மென்மைத் | தண்பூ! |
மீட்டாத | புதுயாழ்தான்! | இளைஞன் | தன்னை |
ஆவியிலே | கலந்துய்ய | மணந்தாள்; | அந்தோ! |
அன்றிரவே | அவனிறந்தான் | விதவை | யானாள்! |
கோவில்லை; | அவள்கணவன் | இல்லை | ; அந்தக் |
கோதைக்கு | வாழ்வில்லை; | இன்ப | மில்லை; |
பூவில்லை; | பொட்டில்லை; | மஞ்சள் | இல்லை; |
புதுவண்ணப் | பூப்போட்ட | சேலை | இல்லை |
தேவில்லை; | அவள் | தெய்வம | இல்லை; |
தெளிவில்லை; | ஒளியில்லை; | தெம்பும் | இல்லை; |
சாவில்லை; | அதுகிட்டும்; | அதுதான் | சொந்தம் |
சாகாமல் | யார்வாழ்ந்தார் | உண்டா? | இல்லை! |
நிலவுநிற | ஆடையவள் | உடுத்தி | னாலும் |
நீங்காத | ஆசைஅலை | புரட்சி | செய்யும்! |
உலவாமல், | உரத்தகுரல் | பேச்சில் | லாமல் |
ஓடாமல், | ஆடாமல், | ஒடுங்கி | னாலும் |
செலவாகும் | பருவத்தைத் | தேக்கி | வைத்தால் |
தீராத | வேதனைதான்; | இளமைக் | கோலம் |
வளமற்றுப் | போகவில்லை | வாட | வில்லை |
வாதனைக்கு | அளவில்லை, | வாழ்வா? | சாவா? |
ஒருமணந்தான் | ஒருபெண்ணுக் | கிருக்க | வேண்டும் |
ஒருமணத்தின் | பயனெதையும் | அவள்கண் | டாளா? |
திருமணந்தான் | அவள் | கண்டாள்; | பலன்என் |
தீராத | வேதனைதான் | கண்டாள்; | இந்த |
ஒருமணத்தின் | முறையிங்கே | தகர்ந்தா | லென்ன? |
ஓர்ந்திடுவீர் | நாட்டோரே! | உணர்வைப் | பாரீர்! |
மறுமணத்தின் | முறையிங்கே | வேண்டும் | வேண்டும் |
மறுத்திடிலோ | மங்கையினை | பழிதான் | தீண்டும்! |
உள்ளத்தால் | பண்பட்ட | வயதா | னாலும் |
ஓதறியாத் | துன்பங்கள் | ஏற்றல் | கிட்டும். |
வெள்ளையினால் | ஆடையினைக் | கட்டிக் | கொண்டால் |
விரகமென்ன | நீங்கிடுமா? | தரையில் | போட்ட |
துள்ளுகிற | மீனைப்போல் | வாழ்வில் | இன்பம் |
துய்த்துய்யத் | தவிக்கின்ற | இளமை | தன்னைக் |
கள்ளத்திற் | கிடம்விட்டுக் | கருக்கி | டாதீர்! |
காசினியீர்! | கருணையுடன் | விளக்கம் | காண்பீர்! |
பட்டுவிட | வில்லையவள்; | பட்டு | மேனிப் |
பளபளப்பு | மாறவில்லை; | கன்னிக் | கோலம் |
கெட்டுவிட | வில்லையவள்; | கற்பு | விற்கக் |
கீழிறங்க | வில்லையவள்; | இல்வாழ் | வின்பம் |
விட்டுவிட | வில்லையவள்; | வாழ்ந்தா | லென்ன? |
வேரறுந்த | பேரெல்லாம் | ஆடும் | போது |
தொட்டுவிடக் | கூடாதா | இல்ல | றத்தை |
துயர்துடைக்கக் | கூடாதா | நாட்டீர் | சொல்வீர்! |
தடுத்திட்டான் | மணமான | அவள்தன் | அண்ணன் |
தப்பென்றாள் | குழந்தைக்கை | அவள்தன் | அண்ணி! |
விடுத்திட்டாள் | புராணத்துக் | குப்பை | தந்த |
வீம்புமொழி | அர்ச்சனையை | அவள்தன் | அத்தை |
கெடுத்திட்டாள் | பெற்றதாய் | ஏற்க | வில்லை |
கேட்பானேன் | தந்தையினை | உற்றார் | மற்றார் |
மடுத்திட்டார்; | பள்ளத்தில் | உணர்ச்சி | வெள்ளம் |
மாய்கிறது | சாய்கிறது | மதிப்பார் | யாரோ? |
பூப்போல | அவள்மலந்தாள் | வாடை | கொண்டாள் |
பொல்லாத | விதவையெனும் | சொல்லால் | உள்ளம் |
தீப்போல | சுடர்விட்டுக் | கொந்த | ளிக்க |
திகைக்கின்றாள்; | தேம்புகிறாள்; | தௌவில் | லாத |
பாப்போல | குழம்புகிறாள்; | பவளச் | செவ்வாய் |
பசி | கொண்டு | துடிக்கின்றாள் | அவளைப் |
காப்போர்யார்? | வாழ்வீப்பீர்! | தவறோ | சொல்வீர்! |
கட்டாயம் | விதவைமணம் | வேண்டும்! | வேண்டும்! |
மங்காதா | புராணத்து | மடமைச் | செய்கை |
மடியாதா | விதவையெனும் | மாறாத் | தீச்சொல்! |
பொங்காதா | மறுமலர்ச்சி! | புதுமை | எண்ணம் |
பொலியாதா | நாட்டிடத்தில்; | இளமை | வேகம் |
திங்காதா | உள்ளத்தை; | கண்டும் | ஏனோ |
தெரியாதார் | போல்நடித்தீர் | என்னே | மிச்சம்! |
தங்காதா | மறுமணத்தின் | வேட்கை; | எங்கும் |
தளிராதா | முற்போக்கு; | அந்நாள்! | எந்நாள்? |