Skip to content
மொட்டுக் | குள்ளே | மணமும் | தூங்குது |
முக்கனிக் | குள்ளே | சுவைகள் | தூங்குது |
கொட்டைக் | குள்ளே | மரமும் | தூங்குது |
குமுறும் | இடியில் | மின்னல் | தூங்குது |
முட்டைக் | குள்ளே | குஞ்சு | தூங்குது |
மேகத் | துக்குள் | மழைநீர் | தூங்குது |
கொட்டுது | அருவிமின் | சாரம் | தூங்குது |
குழலுக் | குள்ளே | நாதம் | தூங்குது |
| | | |
மண்ணுக் | குள்ளே | வைரம் | தூங்குது |
மலையின் | முகட்டில் | மணிகள் | தூங்குது |
பண்ணுக் | குள்ளே | இசையும் | தூங்குது |
பாட்டுக் | குள்ளே | பொருளும் | தூங்குது |
மாம்பழத் | துள்ளே | வண்டு | தூங்குது |
மதியும் | ரவியும் | அரைநாள் | தூங்குது |
கருப்பைக் | குள்ளே | குழந்தை | தூங்குது |
கல்லுக் | குள்ளே | சிலைகள் | தூங்குது |
| | | |
பாலையில் | லெரிபொருள் | பதுங்கித் | தூங்குது |
பனியிம | யத்தில் | ஆறு | தூங்குது |
ஆழியி | லுப்பு | அடங்கித் | தூங்குது |
ஆலைக் | கரும்பி | லினிப்பு | தூங்குது |
பாலில் | வெண்ணை | நெய்யும் | தூங்குது |
பவளம் | முத்து | கடலில் | தூங்குது |
நூற்களி | லுலகறி | வெல்லாம் | தூங்குது |
நோக்க | மறந்தவிஞ் | ஞானம் | தூங்குது |
| | | |
சேரிக் | குள்சுகா | தாரம் | தூங்குது |
சிந்தனைக் | குள்ளே | கருத்து | தூங்குது |
போருக் | குள்ளே | வெற்றி | தூங்குது |
புரட்சிக் | குள்ளே | விடியல் | தூங்குது |
ஏழ்மைக் | குள்ளே | ஏக்கம் | தூங்குது |
ஏக்கத் | துக்குள் | எழுச்சி | தூங்குது |
எழுச்சிக் | குள்ளே | விழிப்பு | தூங்குது |
விழிப்புக் | குள்ளே | மலர்ச்சி | தூங்குது |
| | | |
பாறைக் | குள்ளே | தேரை | தூங்குது |
பட்டுப் | பூச்சியில் | நூலும் | தூங்குது |
பஞ்சுக் | குள்ளே | ஆடை | தூங்குது |
பகுத்தறி | விற்குள் | புதுமை | தூங்குது |
மூளையில் | ஆயிரம் | சிந்தனை | தூங்குது |
முயற்சியில் | லாதவர் | செயல்கள் | தூங்குது |
இத்தனை | தூக்கமும் | விழிக்குமே | ஓர்நாள் |
இதயமி | லாதவர் | விழிப்பது | எப்போ |
Back to Top