(மத்திய & மாநில முன்னாள் அமைச்சர்)
அறந்தாங்கியில் பெருமைக்குரிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் ஜமால் மைதீன். தமிழ்ப்பற்றின் காரணமாகவும், திராவிட இயக்க ஈடுபாட்டின் விளைவாகவும் தனது பெயர் அறந்தைத் திருமாறன் என்கின்ற அளவில் பிரபலப்படுத்தப்பட்டு அறந்தையின் உமறுப் புலவராகத் திகழ்பவர் கவிமாமணி அறந்தைத் திருமாறன் அவர்கள். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளாக நான் இச்சகோதரரை அறிவேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக என் உடன் பிறவாச் சகோதரராக, உற்ற தோழராக அரசியலில் உடன் பயணம் செய்யும் தோன்றாத் துணைவராக ஏற்றத்தாழ்வுகளிலும் தோளோடு தோள்நின்று இணை பிரியாமல் பாடுபட்டு வருபவர். |
பேரறிஞர் அண்ணாவை அண்ணனாகவும், அரசியல் ஆசானாகவும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை எல்லாமுமாகவும் இனிய தலைவராகவும் ஏற்று அவர்களின் பசுமையான நினைவுகளை நெஞ்சில் பதிய வைத்து வாழ்பவர் இக்கவிஞர். |
அறந்தாங்கியிலும் சென்னையிலும் மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளிலும் இவர் கவிதை பாடக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். படிப்படியாக தனது பொதுவான படிப்பறிவாலும் பட்டறிவாலும் புத்திக் கூர்மையாலும் இயற்கையாகக் கவிபாடத் தொடங்கி புகழ்பெற்ற இவர் ஒரு பிறவிக் கவிஞர் |
கவியரசர் கண்ணதாசன் |
“நண்பா அறந்தைத்திருமாறன் அவர்களது கவிதை யாப்புமுறை தவறாமல் அமைந்துள்ளது. எண்சீர் விருத்தம். ஓசையோடு இலங்குகிறது. சுவையான கவிதை சுகமான தமிழ்” என்று கவியரசர் கண்ணதாசன் எடுத்துக் கூறியுள்ளது வசிஸ்ட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்ட பெற்ற போன்றது. |
உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் | |||
“வீட்டிலும் | தமிழ்ப்பணி | வெளியிலும் | தமிழ்ப்பணி” |
என இவர் தமிழ்ப்பணியைப் போற்றியுள்ளார். | |||
பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் அவர்கள் | |||
“சிறந்ததைக் | கவிதை | செய்தார் | |
செரிந்ததைக் | கவிதை | செய்தார்” | |
எனக்கூறி சிறப்பித்துப் புகழ்ந்துள்ளார். | |||
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் | |||
மண்பதையினில் | அறந்தை | யாரின் | |
பாக்களோ | நிலைத்தே | ஓங்கும். | |
கோலத்தின் | அழகைப் | போலும் | |
கொள்கையின் | முடிவைப் | போலும் | |
ஞாலத்தில் | திருமா | றன்நன் | |
நடைக்கவி | வாழ்க | ||
என்று வாழ்த்தி ஆசி வழங்கியுள்ளார். | |||
புகழ்மிக்க இப் பெருங்கவிஞர்கள் அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட கவிமாமணி திரு. அறந்தைத் திருமாறன் அவர்களது அமுதத் தேனருவி எனும் இக்கவிதைகளின் திரட்டு தேனில் கலந்த பலாச் சுவையாய் இனிக்கிறது. | |||
எழுபது கவிதைகள் அத்தனையும் முத்துக்கள். பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பொருட்களில் பல்வேறு சுவையுடன் அமைந்துள்ள பஞ்சாமிர்தம் இவர் தம் கவிதை நூல். | |||
பேரரறிஞர் அண்ணாவின் புகழை இமயத்தில் ஏற்றும் கவிஞரின் வரிகள் இதோ. | |||
கூரம்பு | குத்தீட்டி | படைக்க | லன்கள் |
கொண்டெதிரே | வருகின்ற | பகைவன் | கூட |
பேரன்பு | கொண்டவனாய் | மாறிப் | போவான் |
பேரறிஞர் | அண்ணாவின் | பேச்சுக் | கேட்டால் |
*** | |||
கூன்விழுந்த | தமிழகத்தை | நிமிரச் | செய்தார் |
குருட்டுமுறை | ஐதிகத்தைக் | கொளுத்திப் | போட்டார் |
*** | |||
நாடெல்லாம் | தமிழன்போய் | வாழு | கின்றான் |
நாடில்லை | தமிழனுக்குத் | தமிழ்நா | டென்று |
நயமுடனே | தமிழ்நாடன் | றாக்கித் | தந்தார் |
*** | |||
பிறப்பைப்பற்றி: | |||
காஞ்சிநகர் | வீதியிலே | பலகை | தன்னில் |
கடுஞ்சொல்லால் | எழுதியதை; | அகழ்வார் | தாங்கும் |
பூஞ்சோலை | நிலம்போல | தாங்கிக் | கொண்ட |
புனிதரதால் | அரசியலில் | இமயம் | என்பேன். |
சுட்டுவிரல் | நீட்டுகிற | அண்ணா | சொல்லில் |
சொக்காதார் | யாரதனால் | இமயம் | என்பேன். |
என்பது போன்ற வலிமை மிக்க அண்ணாவின் அடையாளங்களைச் சுட்டும்விதம் கொட்டும் அருவியோ சொற்களின் ஓட்ட நயமோ என வியக்க வைக்கிறது. | |||
மீட்டாத புதுயாழ் | |||
கோவிலை; | அவள்கணவன் | இல்லை; | அந்தக் |
கோதைக்கு | வாழ்வில்லை; | இன்ப | மில்லை; |
பூவில்லை; | பொட்டில்லை | மஞ்சள் | இல்லை; |
புதுவண்ணப் | பூப்போட்ட | சேலை | இல்லை |
*** | |||
காரிகைதான், | கனிக்கொத்து, | கன்னற் | சாறு. |
*** | |||
மோகதாகத்தை | மீட்டுகிற | இளமை | கொண்ட |
தளிர்மேனி: | இளமொட்டு: | நங்கை | நல்லாள். |
*** | |||
தளிராதா | முற்போக்கு | ||
விதவைக்கு | மறுமணம் | எந்நாள்? | |
அந்நாள்தான் | நன்னாள்! | ||
*** | |||
என்கிற கவிஞரின் மனிதாபிமானம் நிறைந்த சிந்தனை வரிகள் மனிதகுலம் திருந்தவும் மாறிடவும் எழுதப்பட்டவை இவை அன்றோ. | |||
மான்நின்றாள்: | நான்சென்றேன் | விழிவீச் | சாலே |
மதிமறந்து | நான்நின்றேன்: | இதழ்வி | ரித்தாள் |
ஏன்சென்றேன் | ஏன்நின்றேன் | அறியா | னாகி |
ஈதேனில் | வீழ்ந்ததுபோல் | நிலையம் | கொண்டேன். |
என்பது போன்ற காதலுணர்வை உணர்த்தும் விதம் கன்னலா கனிச்சாறா என சுவை கூட்டுகிறது. | |||
பாறைக் | குள்ளே | தேரை | தூங்குது |
பட்டுப் | பூச்சியில் | நூலும் | தூங்குது |
பஞ்சுக் | குள்ளே | ஆடை | தூங்குது |
பகுத்தறி | விற்குள் | புதுமை | தூங்குது |
என்று, ஒன்றுக்குள் ஒன்று தூங்குவது பற்றி சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை அள்ளி விதைத்திருக்கிறார். | |||
‘எழுத்தசையைச் சீர்தளையை எதுகையோடு & மோனைகளை அழுத்தமுடன் கற்றறியேன்’ என்கிறார் கவிஞர். ஆனால் இவரது கவிதைகள் அனைத்தும் இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு எதுகை மோனையுடனும. | |||
உவமைகளுடனும், சொல் அலங்காரத்துடனும் இயல்பாக அமைந்து படிக்கப்படிக்கச் சுவையூட்டுகிறது. சுவை கூட்டுகிறது. | |||
எல்லாக் கவிதைகளும் இனிய கற்கண்டுகள். ஒவ்வொன்றாய் எடுத்துச் சுவைத்து விவரித்தால் பக்கங்கள் கூடிடும் அதிகமாக. எனவே தந்தமிழ்ப் பற்று நிறைந்த அனைவரின் கரங்களிலும் தவழ வேண்டிய, படித்துச் சுவைக்க வேண்டிய அமுதத்தேனருவி இந்நூல். தமிழ்த்தாயின் மணி மகுடத்தில் சூட்டப்பட்ட கூடுதல் வைரக்கல் இந்தக் கவிதை நூல். | |||
திரு.அறந்தைத்திருமாறன் சிறந்த கவிஞர் மட்டுமின்றி சிறந்த பண்பாளர், பாசம் நிறைந்த சகோதரர். இன்சொல் நிறைந்தவர். இனிமை நிறை முகத்தினர். புன்சிரிப்போடு திகழ்பவர். பூப்போன்ற இதயத்தவர். அனைவருக்கும் நல்லவர். அன்பிற்சிறந்தவர். | |||
வாழ்க நம் கவிமாமணி அறந்தைத்திருமாறன். இதுபோல் மேலும் தருக பல கவிதை நூல்கள் |
அன்புடன்
(சு.திருநாவுக்கரசர்)