கதிரும் | கதிரால் | கடலைப் | புணர்ந்திட |
கார்முகில் | பிறந்ததுவே | மழைதரும் | |
கார்முகில் | எழுந்ததுவே! | ||
கதிரின் | ஒளியைத் | தடுத்திடும் | குடையாய் |
மேகம் | முகிழ்ந்ததுவே | மண்மேல் | |
மேகம் | பறந்ததுவே! | ||
ஓடிடும் | மேகமும் | மேகமும் | மோதிட |
ஓஙகி | ஒலித்ததுவே | இடியொலி | |
வாங்கி | ஒலித்ததுவே! | ||
கூடிடும் | தோகை | மயில்கள் | இணைந்துமே |
ஆடிக் | களித்தனவே | இன்பம் | |
கூடிக் | களித்தனவே! | ||
வானம் | பொழிந்தது | பூமிகு | ளிர்ந்தது |
வயல்கள் | நிரம்பினவே | ஏரிகள் | |
வயிறு | நிரம்பினவே! | ||
தானமும் | தவமும் | தர்மம் | தழைத்திட |
வானம் | பொழிந்ததுவே | வெம்மை | |
வஞ்சம் | அழிந்ததுவே! | ||
காளைகள் | பூட்டினர் | கழனிகள் | ஓட்டினர் |
உழவர் | நடந்தனரே | உழைக்கும் | |
உழவர் | நடந்தனரே! | ||
கலயங் | களேந்தினர் | கழனியில் | கன்னியர் |
கஞ்சி | கொணர்ந்தபடி | புல்வெளிப் | |
பஞ்சில் | நடந்தபடி! | ||
ஆடியும் | பாடியும் | ஓடியும் | உழைத்தனர் |
அன்பில் | நனைந்தபடி | தமிழரின் | |
பண்பில் | நிலைத்தபடி! | ||
ஊற்றையும் | சேற்றையும் | நாற்றையும் | இணைத்தே |
பயிரை | வளர்த்தனரே | நாட்டின் | |
உயிரை | வளர்த்தனரே! | ||
பாடிடும் | பூங்குயில் | இன்னிசை | தென்றலில் |
ஆடி | வளர்ந்ததுவே | பயிரும் | |
நாடி | வளர்ந்ததுவே! | ||
புதையல் | போலவே | கதிரின் | கருவரப் |
பொதிகள் | கட்டினவே | பயிரின் | |
வயிறும் | முட்டினவே! | ||
உதய | மாகும்ஒளி | உலகில் | நீள்வபோல் |
கதிரும் | நீண்டதுவே | அங்கே | |
கருணை | ஆண்டதுவே. | ||
ஞானம | நிறைந்தவர் | தானடங் | கினர்போல் |
நாணி | இருந்ததுவே | கதிர்தலை | |
கோணி | இருந்ததுவே! | ||
கூனல் | கிழவரின் | வானவில் | முதுகென |
குலைகள் | வளைந்தனவே | நெல்மணி | |
ஒலிகள் | எழுந்தனவே! | ||
காணி | கொழித்தது | வீடு | நிறைந்தது |
“பூ”மகள் | தந்தனளே | தந்தனளே | பொன்நிகர் |
நென்மணி | தந்தனளே1 | ||
வயல்கள் | விளைந்தன | விளைந்தன | வயல்கள் |
தைமகள் | தந்தனளே | தைதையென | |
தைமகள் | வந்தனளே1 | ||
வறுமை | ஒழிந்தது | செழுமை | பிறந்தது |
வாழ்வு | மலர்ந்ததுவே | விவசாயி | |
தாழ்வு | மறைந்ததுவே! | ||
தையும் | பிறந்தது | வழியும் | பிறந்தது |
உய்யும் | வழிகாண்போம் | உலகோர் | |
உயரும் | வழிகாண்போம்! | ||
பொங்கலோ | பொங்கல் | பொழிக | என்றுமே |
பொங்கலும் | பொங்கட்டுமே | எங்குமே | |
மங்களம் | தங்கட்டுமே! |
மீட்டாத புதுயாழ்
(கவிப்பேரரசர் கண்ணதாசன் பாராட்டிய கவிதை)
மேகத்தை | ஒத்தகரும் | கூந்தல்; | பாயும் |
மீன்அம்பை | ஒத்தஇரு | கண்கள்; | காதல் |
வேகத்தை | தூண்டுகிற | பார்வை; | வட்ட |
வெண்ணிலவைப் | போலமுகத் | தோற்றம்; | உற்ற |
சோகத்தை | மாற்றுகிற | வனப்பு; | இன்பச் |
சுனைத்தேக்கம் | இன்னமுதக் | கூட்டு; | மோக |
தாகத்தை | மீட்டுகிற | இளமை; | கொண்ட |
தளிர்மேனி; | இளமொட்டு; | நங்கை | நல்லாள்! |
ஓவியந்தான்! | உயிரின்பக் | கவிதை | யேதான்! |
ஒளிகுன்றா | சுடர்மணிதான்! | ஒப்பே | இல்லாக் |
காவியந்தான்! | கற்பனையால் | காணக் | கிட்டாக் |
காரிகைத்தான்! | கனிக்கொத்து! | கன்னற் | சாறு! |
மேவியதேன்! | எழிற்குன்று | மென்மைத் | தண்பூ! |
மீட்டாத | புதுயாழ்தான்! | இளைஞன் | தன்னை |
ஆவியிலே | கலந்துய்ய | மணந்தாள்; | அந்தோ! |
அன்றிரவே | அவனிறந்தான் | விதவை | யானாள்! |
கோவில்லை; | அவள்கணவன் | இல்லை | ; அந்தக் |
கோதைக்கு | வாழ்வில்லை; | இன்ப | மில்லை; |
பூவில்லை; | பொட்டில்லை; | மஞ்சள் | இல்லை; |
புதுவண்ணப் | பூப்போட்ட | சேலை | இல்லை |
தேவில்லை; | அவள் | தெய்வம | இல்லை; |
தெளிவில்லை; | ஒளியில்லை; | தெம்பும் | இல்லை; |
சாவில்லை; | அதுகிட்டும்; | அதுதான் | சொந்தம் |
சாகாமல் | யார்வாழ்ந்தார் | உண்டா? | இல்லை! |
நிலவுநிற | ஆடையவள் | உடுத்தி | னாலும் |
நீங்காத | ஆசைஅலை | புரட்சி | செய்யும்! |
உலவாமல், | உரத்தகுரல் | பேச்சில் | லாமல் |
ஓடாமல், | ஆடாமல், | ஒடுங்கி | னாலும் |
செலவாகும் | பருவத்தைத் | தேக்கி | வைத்தால் |
தீராத | வேதனைதான்; | இளமைக் | கோலம் |
வளமற்றுப் | போகவில்லை | வாட | வில்லை |
வாதனைக்கு | அளவில்லை, | வாழ்வா? | சாவா? |
ஒருமணந்தான் | ஒருபெண்ணுக் | கிருக்க | வேண்டும் |
ஒருமணத்தின் | பயனெதையும் | அவள்கண் | டாளா? |
திருமணந்தான் | அவள் | கண்டாள்; | பலன்என் |
தீராத | வேதனைதான் | கண்டாள்; | இந்த |
ஒருமணத்தின் | முறையிங்கே | தகர்ந்தா | லென்ன? |
ஓர்ந்திடுவீர் | நாட்டோரே! | உணர்வைப் | பாரீர்! |
மறுமணத்தின் | முறையிங்கே | வேண்டும் | வேண்டும் |
மறுத்திடிலோ | மங்கையினை | பழிதான் | தீண்டும்! |
உள்ளத்தால் | பண்பட்ட | வயதா | னாலும் |
ஓதறியாத் | துன்பங்கள் | ஏற்றல் | கிட்டும். |
வெள்ளையினால் | ஆடையினைக் | கட்டிக் | கொண்டால் |
விரகமென்ன | நீங்கிடுமா? | தரையில் | போட்ட |
துள்ளுகிற | மீனைப்போல் | வாழ்வில் | இன்பம் |
துய்த்துய்யத் | தவிக்கின்ற | இளமை | தன்னைக் |
கள்ளத்திற் | கிடம்விட்டுக் | கருக்கி | டாதீர்! |
காசினியீர்! | கருணையுடன் | விளக்கம் | காண்பீர்! |
பட்டுவிட | வில்லையவள்; | பட்டு | மேனிப் |
பளபளப்பு | மாறவில்லை; | கன்னிக் | கோலம் |
கெட்டுவிட | வில்லையவள்; | கற்பு | விற்கக் |
கீழிறங்க | வில்லையவள்; | இல்வாழ் | வின்பம் |
விட்டுவிட | வில்லையவள்; | வாழ்ந்தா | லென்ன? |
வேரறுந்த | பேரெல்லாம் | ஆடும் | போது |
தொட்டுவிடக் | கூடாதா | இல்ல | றத்தை |
துயர்துடைக்கக் | கூடாதா | நாட்டீர் | சொல்வீர்! |
தடுத்திட்டான் | மணமான | அவள்தன் | அண்ணன் |
தப்பென்றாள் | குழந்தைக்கை | அவள்தன் | அண்ணி! |
விடுத்திட்டாள் | புராணத்துக் | குப்பை | தந்த |
வீம்புமொழி | அர்ச்சனையை | அவள்தன் | அத்தை |
கெடுத்திட்டாள் | பெற்றதாய் | ஏற்க | வில்லை |
கேட்பானேன் | தந்தையினை | உற்றார் | மற்றார் |
மடுத்திட்டார்; | பள்ளத்தில் | உணர்ச்சி | வெள்ளம் |
மாய்கிறது | சாய்கிறது | மதிப்பார் | யாரோ? |
பூப்போல | அவள்மலந்தாள் | வாடை | கொண்டாள் |
பொல்லாத | விதவையெனும் | சொல்லால் | உள்ளம் |
தீப்போல | சுடர்விட்டுக் | கொந்த | ளிக்க |
திகைக்கின்றாள்; | தேம்புகிறாள்; | தௌவில் | லாத |
பாப்போல | குழம்புகிறாள்; | பவளச் | செவ்வாய் |
பசி | கொண்டு | துடிக்கின்றாள் | அவளைப் |
காப்போர்யார்? | வாழ்வீப்பீர்! | தவறோ | சொல்வீர்! |
கட்டாயம் | விதவைமணம் | வேண்டும்! | வேண்டும்! |
மங்காதா | புராணத்து | மடமைச் | செய்கை |
மடியாதா | விதவையெனும் | மாறாத் | தீச்சொல்! |
பொங்காதா | மறுமலர்ச்சி! | புதுமை | எண்ணம் |
பொலியாதா | நாட்டிடத்தில்; | இளமை | வேகம் |
திங்காதா | உள்ளத்தை; | கண்டும் | ஏனோ |
தெரியாதார் | போல்நடித்தீர் | என்னே | மிச்சம்! |
தங்காதா | மறுமணத்தின் | வேட்கை; | எங்கும் |
தளிராதா | முற்போக்கு; | அந்நாள்! | எந்நாள்? |
கோதை தரும் போதை
சிந்து | தாளம்தரும் | சந்தம் | மேவுநடை |
தண்ட | கால்கள்தனை | யுடையாள் | – அவள் |
அந்தி | மாலைவரும் | மந்த | மாருதத்தின் |
விந்தை | மேவுசுக | முடையாள் | – பல |
கந்த | மாமலர்கள் | சிந்தும் | நறுமணத்தின் |
சொந்தம் | கூறும்செவ் | வுடலாள் | – அவள் |
முந்து | தென்றல்குளிர் | தந்ததமிழ் | மொழியின் |
சந்தம் | ஏழெனும் | மென் | குரலாள் |
வெல்லும் | சிரிப்பிலவள் | முல்லை | முத்தடுக்கி |
சொல்லிச் | செதுக்கியவெண் | பல்லினாள் | – அவள் |
தேனுகற் | கண்டுமலை | வாழை | நல்மாபலா |
சேர்த்துப் | பிழிந்ததனிச் | சொல்லினாள் | – அவள் |
கடலைக் | கடைந்தநல் | அமுதம் | எடுத்தபோல் |
கனிந்த | பக்குவநற் | பருவத்தாள் | – அவள் |
காமன் | இந்திரனைக் | ககனச் | சந்திரனை |
கலங்கித் | தவிக்க | விடும் | உருவத்தாள் |
மஞ்சம் | தந்திடும்நல் | விஞ்சும் | சுகமனைத்தும் |
கொஞ்சித் | தந்திடுநற் | கோதையாள் | – இவள் |
பஞ்சு | மலரடியில் | அஞ்சு | புலத்தின்வழி |
மிஞ்சத் | தரும் | சுகப் | போதையாள் |
வஞ்சி | இவளுடைய | எஞ்சும் | உடலழகால் |
நஞ்சைத் | தேனாக்கும் | செயலினாள் | – முனிவர் |
அஞ்சித் | தடுமாறி | அலைந்து | நிலைமாறி |
துஞ்சும் | நிலைக் | காக்கும் | மயலினாள் |
முக்கனி
பெண்ணோ அவள் | மின்னோசுடர் | பொன்னோஒளிர் | தேகம்! |
கண்ணோசுகக் | காந்தம் தரும் | கதிரோ அவள் | பார்வை! |
மானோமறி | தானோஅவள் | துள்ளும்நடை | அழகு! |
தேனோகற் | கண்டோஅமிழ் | தூற்றோஅவள் | பேச்சு! |
வண்ணம்பல | கண்ணக்கவர் | வான்வில்அவள் | புருவம்! |
தின்னத்திகட் | டாமுக்கனி | தினைதேன் | அவள் பருவம்! |
எண்ணங்கவர் | கொற்கைத்தனி | எழில்முத்தவள் | பற்கள்! |
பண்ணோடொரு | பரதம்சதிர் | பயிர்க்கும்அவள் | கால்கள்! |
தென்றல்இளம் | காற்றில்அசைந் | தாடும்இவள் | இடைதான்! |
தினமேநறு | மணமேதரு | மலர்தான்அவள் | உள்ளம்! |
நிலவேதவழ் | கருமேகமோ | நீளும்அவள் | கூந்தல்! |
நினைக்குந்தொரும் | மணக்குஞ்சந் | தனமோஅவள் | உறவு! |
வரவும்அவள் | தரவும்அவள் | உறவும்அவள் | தானே! |
நிறைவைத்தரும் | நினைவைத்தரும் | உருவம்அவள் | தானே! |
பாதைதடு | மாற்றும்முனி | வர்க்கும்;இவள் | அங்கம் |
போதையினித் | தேவையிலை | பாவைஇவள் | சங்கம்! |
ஓரம்துளும் | பார்வையதற் | குலகைப்பரி | சிடலாம்! |
வீரர்தனை | வீழ்த்தும்புன் | சிரிப்பிற்கெதைத் | தரலாம்! |
மாயக்காரியோ
இல்லை | இடை;அவள் | நடையில் | தெரியுது! |
ஈக்காற் | றுக்கிவள் | இடையும் | நெளியுது! |
பல்லினை | முத்தும் | பார்த்து | ஏங்குது! |
பவளம் | செவ்விதழ் | நிறத்தில் | மயங்குது! |
மார்பைப் | பார்த்து | மாங்கனி | மலைக்குது! |
மணிமொழி | கேட்டிடத் | தேன்தவ | மிருக்குது! |
கொள்ளை | அழகின் | குவியலோ | இவளுடல்! |
கூறுவ | தெப்படி? | கூப்பிடு | கவிஞரை! |
கண்ண | தாசன் | மருத | காசி |
கவிஞர் | வாலி | பட்டுக் | கோட்டை |
வைர | முத்து | உடுமலைக் | கவிஞர் |
இவர்கள் | பார்வையில் | எப்படி | தப்பினாள் |
செப்படி | வித்தை | மாயக் | காரியோ |
ஈரே | ழுலகிலும் | இவள் | பேரழகியோ |
தந்திர | மந்திர | புன்னகை | மோகினி |
நால்வரில் | எவள்;இவள் | உருவில் | வந்தவள் |
பஞ்சின் | மென்மைப் | பசுந்தளிர் | பாதம் |
அன்ன | நடைபயின் | றசைந்து | குலுங்க |
வஞ்சி | வந்தவள்; | வஞ்ச | மனத்தவள்! |
நஞ்சு | போன்றவள்; | என்று | கம்பரும் |
சூர்ப்பன | கைதனைச் | சுட்டிக் | காட்டினார்! |
அந்த | அழகியோ | இங்கு | வந்தவள்! |
பார்க்கும் | இடமெலாம் | பாவையின் | தோற்றம்! |
பரவசம்; | நவரசம்; | பாய்ந்து | தாக்குதே! |
மலர்ந்த | இவள்முகம் | மதியோ! | ரதியோ! |
மாராப் | புக்குள் | குமுதமோ! | அமுதமோ! |
வளர்ந்த | குழல்கரு | நாகமோ! | மேகமோ! |
வாயிதழ் | உமிழ்நீர் | சுரபியோ! | அமுதமோ! |
கண்க | ளென்ன | கணையோ! | வினையோ! |
காலன் | தூதோ! | ஆலமோ! | சூலமோ! |
பெண்கள் | இவள்முன் | எதிரியோ! | உதிரியோ! |
பேரழ | கில்இவள் | மயிலோ! | புயலோ! |
கள்ளப் | பார்வை | காந்தமோ! | சுடரோ! |
உள்ளம் | உருகுதே! | உணர்வு | துடிக்குதே! |
புன்சிரிப் | பெழிலோ | பொசுக்குதே! | எரிக்குதே! |
போதை | ஏற்றியே | மயக்கிச் | சாய்க்குதே! |
மாலைத் | தென்றல் | மனதை | ஆட்டுதே! |
மதுவோ! | மாதோ! | சிந்தை | மயங்குதே! |
முல்லை | மலர்க்கணை | தொடுத்து | மன்மதன்! |
வில்லை | வளைத்தே | வீசுறான் | ஆயிரம்! |
காமரசக் கடல்
பூவாடை | எனைமயக்கத் | திரும்பிப் | பார்த்தேன் |
பொன்னோடை | எழில்மேனி | பொலிவு | கூட்டும் |
பாவாடை | தாவணியில் | பருவ | மங்கை |
பார்வையிலே | சுருக்கிட்டு | எனையி | ழுத்தாள்! |
மாவாட்டும் | கற்குழவி | யாகி | யெந்தன் |
மனஞ்சுழல | உணர்வுந்த | ஆர்வத் | தாலே |
நாவாட | உளந்துணிந்தேன்; | அவளோ | மெல்ல |
நடைபெயர்ந்தாள்; | நான்தொடர்ந்தேன்; | கடலோ | பக்கம் |
பார்வையிலே | எனையிழந்தேன்; | கன்ன | லாளின் |
பசப்பினிலே | நினைவிழந்தேன்; | கொவ்வைச் | செந்தேன் |
கோர்வையிதழ்ச் | சிவப்பினிலே | செயலி | ழந்தேன் |
குலைக்கனியாம் | கன்னத்தை | மார்பைக் | கண்டு |
ஊர் | வெளியைச் | சூழ்நிலையை | மறந்தே |
உளறுமொழிக் | கிறுக்கனைப்போல் | புலம்ப | லானேன் |
கூர்விழியாள் | கடற்கரையே | அடைந்த | போது |
குமுறுமுணர் | வோடங்க | நானும் | சேர்ந்தேன். |
நான்பார்த்தேன்; | மான்பார்த்துத் | திரும்பிக் | கொண்டாள் |
நான்பார்க்காப் | பாவணையில் | திரும்பும் | போது |
மான்பார்த்தாள்; | நேர்க்கோட்டில் | விழிகள் | சேர |
மணிபார்த்தேன்; | இரவெட்டு; | நிலவோ | நல்ல |
தேன்வார்த்து | ஒளி | கொட்டும்; | அலைகள் |
திசையெங்கும் | இன்பமோ | இன்பம் | என்று |
தான் | ஆர்த்து | காதலர்கள் | இளமை |
தணித்திருந்தார்; | நாங்களங்கே | தனித்தி | ருந்தோம் |
முன்னலையைப் | பின்னலைகள | வாங்கிக் | கொஞ்சி |
முத்தமிடும் | காட்சியினை | எங்கள் | கண்கள் |
கன்னலினை | உண்பதுபோல் | சுவைத்துப் | பார்த்துக் |
கருத்தினைந்த | போதங்கே | மேகம் | ஒன்று |
தண்ணொளியின் | நிலவணைத்துத் | தழுவக் | கண்டு |
தளிருடலை | நான்தழுவத் | துடித்து | நின்றேன் |
மின்னொளிக்கண் | மெல்லிடையாள் | நெருங்க; | நாங்கள் |
மோகமெனும் | காமரசக் | கடலில் | வீழ்ந்தோம்! |
கோயிலுக்குப் போனாள் கோதை!
பன்னீரில் | குளித்தாள்! | பஞ்சுதுகி | லால்தலையை |
தண்ணீர் | சுவடகலத் | தாட்டினாள்! | குழல்மணக்கப் |
புகைகாட்டி | னாள்;கந்தப் | பொடியூட்டி | னாள்;நூறு |
வகைகாட்டி | ஆடிமுன் | வடிவழகை | மெருகிட்டாள்! |
கொடிமுல்லைப் | பூச்சரத்தைக் | கொத்தாகக் | குழல்சொருகி |
விடிவெள்ளி | கார்குழலில் | விழித்திருக்கப் | பூரித்தாள்! |
பொட்டிட்டாள்! | மையிட்டாள்! | பொற்பதுமை | சிரித்துத்தன் |
மொட்டுப்பல் | சீர்பார்த்தாள்! | முகப்பளிங்குக் | கன்னத்தில் |
தன்னழகை | மேலுயர்த்தத் | தளிர்க்கரத்தால் | கருப்பிட்டாள்! |
முன்னழகைப் | பின்னழகை | முடியழகை | ரசித்திட்டாள்! |
நேர்வகிடு | தானெடுத்தாள்! | நெத்திப் | பிறையிட்டாள்! |
வார்குழலில் | ஒன்றிரண்டை | வரிபிரித்துத் | தொங்கவிட்டாள்! |
பதட்டமுடன் | வாலிபர்கள் | பார்த்துக் | களிகொள்ளும் |
உதட்டுக்குச் | சாயமிட்டாள்! | உடுத்திடவே | விதவிதமாய் |
கட்டழகைக் | கூட்டும் | காஞ்சி | புரம்பட்டு |
தொட்ட | இடம்வழுக்கும் | தோகைமயில் | வண்ணத்தில் |
மைசூரு | பெங்களூரு | பனாரஸ் | கொல்லேகால் |
கைசோரும் | மட்டும் | கலைத்துப்பின் | மனம்விரும்பும் |
திருப்புவனம் | பட்டைத் | தேர்ந்து | எடுத்திட்டாள்! |
இருப்பாளே! | பறப்பாளோ! | எனவியக்க | அணிந்திட்டாள்! |
திருப்பிநின் | றுள்ளாடை | சீர்திருத்தி | பூச்செண்டை |
அரும்பும்தன் | பேரழகின் | அணிமாடம் | ஆக்கிட்டாள்! |
காதணிகள், | கையணிகள், | கம்மலொடு | கழுத்துநகை |
போதுமட்டும் | அணிந்தாள்! | பொன்பட்டு | ஆடைமேல் |
கந்தங்கள் | தெளித்தாள்! | காமனுக்கே | மயக்கம்வரும்! |
சித்திரப் | பூப்போட்ட | சிறுகைக் | குட்டையினை |
முத்திரை | மோதிரம்போல் | முன்கொசுவம் | சொருகிட்டாள் |
இந்தவித | மாக | எழிலரசி | புறப்பட்டாள்! |
வீடுவிட்டாள், | வாசல்விட்டாள். | வீதிதொட்டாள். | முகில்கண்டு |
கூடும், | மயில் | மெய்சிலிர்த்துக் | குலுங்குவது |
விண்ணிருந்த | நிலவிறங்கி | வீதிக்கு | வந்ததுவோ! |
பெண்ணணங்கோ! | மாயையோ! | பேரழகோ! | அடடா |
மேனகையோ! | ரம்பையோ! | திலோத்தமையோ! | ஊர்வசியோ |
மோகினியோ! | ரதிதானோ! | மெல்லியலாள் | அபரஞ்சி |
தானோ! | என் | றாடவர்கள் | தடுமாறப் |
மானோ! | இவளென்ன | மண்ணுலவும் | தாரகையோ! |
என்றஞ்சி | வியத்தார்கள்! | இளவட்டக் | காளையர்கள் |
பட்டாடை | கட்டிப் | பார்ப்போரை | மயக்குமிச் |
சிட்டாள், | யார்? | என்றறியச் | சென்றார்பின் |
மொட்டவிழ்ந்து | மணம்பரப்பும் | மோகினியைத் | தொட்டுவிட |
கிட்டவந்தோர் | பலருண்டு! | கிறுக்குப் | பிடித்தவராய் |
வட்டமிடும் | வயோதிக | வாலிபர்கள் | நிறையப்பேர்! |
ஊர்வலமோ! | உற்சவ | மூர்த்தியின் | அலங்காரத் |
தேர்வலமோ! | என்றென்ன | தேவதைகோ | யில்வந்தாள்! |
காற்செருப்புக் | கழற்றினாள்! | காவலர்பா | துகைவாங்கி |
மேற்செருப்பாய் | வைத்தார்கள் | மிகப்பரிந்து | உள்ளழைத்தார்! |
துண்டிப்புக் | கட்டி | திருநீரு | மெய்க்கணிந்த‘ |
சிண்டாளர், | சிகையாளர், | சீர்மிக்க | பூநூலார் |
கொண்டாடி | வரவேற்றார்! | கோலமென்ன? | யாரிவளோ? |
திண்டாடி | னார்பக்தர்! | திகைத்துத் | தவித்தார்கள்? |
ஊதுவார், | கொட்டுவார், | உற்றுற்றுப் | பார்த்தார்கள்! |
ஓதுவார், | பாடுவார், | ஒன்றறியா | மல்விழித்தார்! |
இட்ட | அடிபெயர்த்தாள்! | இங்குகம்பன் | மகனிருந்தால் |
விட்டஇடம் | தொட்டு | மேலுமொரு | காவியத்தை |
கொட்டிக் | குவித்திருப்பான்! | கோயிலிதை | மறைந்திருப்பான்! |
அட்டியின்றி | அம்பிகா | பதிக்கோவை | இரண்டிருக்கும்! |
தட்டொன்று | வாங்கத் | தன்கண் | ணோட்டத்தை |
விட்டாள், | கடைமீது! | வேதசாஸ்த் | திரப்படிக்கு |
தேங்காய், | ஊதுபத்தி, | திருநீரு, | சூரணங்கள். |
பாங்காய் | வெற்றிலை | பழத்தோடு | கற்பூரம் |
பலரெடுத்து | நீட்டினார்கள்! | பாவையோ | மனம்போல |
மலரும் | அதிலிருக்க | மகிழ்ந்தவளாய் | ஓர்தட்டு |
விலைகொடுத்து | வாங்கினாள்! | விழிதரை | யைப்பார்க்க |
தலைகுனிந்து, | தட்டேந்தி, | தளிர்நடை | யுடன்வந்தாள்! |
காணிக்கைச் | செலுத்தினாள்! | கைகுவித்து | வணங்கினாள்! |
மேனிக்கைக் | கரம்உயர்த்தி | வேண்டினாள்; | பக்தியுடன் |
கற்பூரம் | தொட்டாள்; | கண்ணொற்றி | மெய்மறந்தாள் |
பொற்பூரும் | மேனி | புல்லரிக்க | மவுனியாய் |
வினைமறந்து | நின்றாள்! | விழிதிறந்து | மூலவரை |
மீண்டுமொரு | முறைவணங்கி | மேனகை | புறப்பட்டாள்! |
ஆண்டவன் | அருள்பெற்றாள் | ஆங்கு! |
அவளா இவள்?
ஆணை | மயக்கும் | மாயக்காரி! |
அறிவைக் | கெடுக்கும் | பகட்டுக்காரி! |
வாளை | மழுக்கும் | கண்ணுக்காரி! |
வார்த்தை | தனிலே | ஜாலக்காரி! |
காளையை | அடக்கும் | பவுசுக்காரி! |
கட்டழ | கினிலே | சொகுசுக்காரி! |
சேலைக் | கட்டு | மவுசுக்காரி! |
சிரிச்சுப் | பேசும் | விஷமக்காரி! |
நடக்கும் | நடையில் | நாட்டியக்காரி! |
நாக | ரீக | வினையக்காரி! |
கடந்து | போன | முனிவரைக்கூட |
காயப் | படுத்தும் | மோகக்காரி! |
இடக்கு | மடக்கு | பசப்புக்காரி! |
எல்லாம் | தெரிந்த | எடுப்புக்காரி! |
அடக்கி | ஆளும் | சேட்டைக்காரி! |
அதட்டி | மிரட்டும் | ஆணவக்காரி! |
தலுக்கு | பிலுக்கு | மினுக்குக்காரி! |
தந்தி | ரத்திலே | கெட்டிக்காரி! |
குலுக்கி | நடக்கும் | நளினக்காரி! |
கோணப் | புத்தியில் | குதற்கக்காரி! |
வழுக்கும் | பட்டு | மேனிக்காரி! |
வடித்த | சித்திர | அழகுக்காரி! |
உலுக்கி | விட்டு | முதியோர்களையும் |
உசுப்பு | ஏற்றும் | தோற்றக்காரி! |
வண்டு | பறக்கும் | கண்ணுக்காரி! |
வலிய | இழுக்கும் | காந்தக்காரி! |
செண்டு | மிஞ்சம் | தனத்துக்காரி! |
தேனடை | மிஞ்சும் | கொண்டைக்காரி! |
தண்டை | சிலம்பொலி | குனுக்குக்காரி! |
தாமரை | போன்ற | முகத்துக்காரி! |
கண்டவர் | மயக்கும் | மாயக்காரி! |
கடவுள் | படைப்பிலே | கபடக்காரி! |
அமராவதி கதி அதோகதி
தாமரை | கூட | தவமிருக்கும் | – அவள் |
தங்க | முகத்தைப் | பார்ப்பதற்கு! | |
ரோஜா | மலரும் | தவமிருக்கும் | – அவள் |
மேனியின் | நிறத்தைப் | பார்ப்பதற்கு! | |
முத்துகள் | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
முல்லைப் | பல்லைப் | பார்ப்பதற்கு! | |
கத்தும் | குயிலும் | காத்துக்கிடக்கும் | – அவள் |
கனியினும் | இனிதாம் | குரல்கேட்க! | |
மானும் | மயிலும் | தவமிருக்கும் | – அவள் |
மையல் | சாயல் | கணிப்பதற்கு! | |
வானவில் | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
வளைந்த | புருவம் | ரசிப்பதற்கு! | |
கடலும் | வானும் | தவமிருக்கும் | – அவள் |
கண்ணில் | நீலம் | பார்ப்பதற்கு! | |
அம்பும் | மீனும் | தவமிருக்கும் | – அவள் |
அழகிய | கண்களைப் | பார்ப்பதற்கு! | |
நிலவு | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
நெற்றியில் | பிறையைக் | காண்பதற்கு! | |
உலவும் | தென்றலும் | தவமிருக்கும் | – அவள் |
உடலை | மெதுவாய்த் | தொடுவதற்கு! | |
வலம்வரும் | மேகமும் | காத்திருக்கும் | – அவள் |
வளர்கருங் | கூந்தலைப் | பார்ப்பதற்கு! | |
மலையும் | குன்றும் | தவமிருக்கும் | – அவள் |
பருவ | அழகை | ரசிப்பதற்கு! | |
நான்மறை | முனிவரும் | தவமிருப்பார் | – அவள் |
நடையுடை | பாவனை | ரசிப்பதற்கு! | |
சித்தரும் | பித்தராய் | மாறிடுவார் | – அவள் |
சிறுநகை | கடைவிழி | தாக்குதலால்! | |
பிரமன் | இந்திரன் | தவமிருப்பார் | – அவள் |
பேரழ | கிளமையை | ரசிப்பதற்கு! | |
செத்தவர் | கூட | பிழைத்தெழுவார் | – அவள் |
சிற்றடி | சதங்கை | ஓசையிலே! | |
அம்பிகா | பதிகூட | இன்றிருந்தால் | – அந்த |
அமரா | வதிகதி | அதோகதிதான்! | |
மஜ்னு | கூட | இன்றிருந்தால் | – அந்த |
லைலா | கதியும் | எக்கதியோ! | |
அக்பர் | மகன்சலீம் | இவளைக்கண்டால் | – அந்த |
அனார்க்கலி | நிலைமை | யாரறிவார்! | |
தேவதாஸ் | கூட | பார்வதிமறப்பான் | இந்தத் |
தேவதை | அருகே | இருந்துவிட்டால்! |
தேனில் விழுந்த ஈ
மாலையிலே | அன்றொருநாள் | தென்றல் | தேடி |
மயக்குகிற | தங்கநிற | வெயிலும் | நாடி |
சாலையிலே | நான்சென்றேன்; | ஊருக் | கப்பால் |
தனிமையிலே | உலாவுதற்கே; | ஆங்கோர் | வீட்டில் |
பாளையிலே | மொட்டடுக்கி | வைத்த | பல்லின் |
பாங்கான | இளநகையைச் | சிந்து | கின்ற |
சோலையிலே | அன்றலர்ந்த | மலரைப் | போன்ற |
சொல்லுக்குள் | அடங்காத | ஒருத்தி | நின்றாள்! |
பருவத்தில் | பதினாறு | வயது | கொண்டாள்! |
பார்வையிலே | காந்தத்தைக் | கண்ணில் | கொண்டாள்! |
உருவத்தில் | பொற்பதுமை | உவமை | கொண்டாள்! |
உள்ளத்தில் | காதலெனும் | வேட்கை | கொண்டாள்! |
அறுபத்து | நாற்கலையின் | மாயம் | கொண்டாள்! |
அடுத்தெவர்க்கும் | இல்லாத | அழகு | கொண்டாள்! |
பருவத்தை | உருவத்தை | யார்பார்த் | தாலும் |
பார்த்தவிழி | பார்த்ததுதான் | அடிமை | கொள்வாள்! |
மான்நின்றாள்; | நான்சென்றேன்; | விழிவீச் | சாலே |
மதிமறந்து | நான்நின்றேன்; | இதழ்வி | ரித்தாள்! |
ஏன்சென்றேன் | ஏன்நின்றேன் | அறியா | னாகி |
ஈதேனில் | வீழ்ந்ததுபோல் | நிலைமை | கொண்டேன்! |
தேன்வென்ற | சொல்லாலே | அழைத்த | தைப்போல் |
தீர்மானம் | நான் | கொண்டேன்: | அவளோ |
தான் | ஒதுக்கி | சரிசெய்தாள்! | இன்ப |
தனைக் | கடந்து | கால்பின்ன | தவித்து |
வீட்டினிலே | அவள்தவிர | எவரும் | இல்லை! |
வீதியிலோ | சந்தடிகள் | அதிகம் | இல்லை! |
கூட்டினிலே | தனித்திருக்கும் | பெண்புறாவைக் | |
கொஞ்சுதற்கு | நான் | துணிந்தேன்; | அவளும் |
பாட்டினிலே | எனக்குஒரு | அழைப்பு | விட்டாள்! |
பசியார | வரலாமே | என்பதைப் | போல் |
கேட்டுவிட்டு | நெருங்காமல் | நானி | ருந்தால் |
கிறுக்கனுக்கும் | எனக்கும்வே | றுவமை | உண்டோ! |
கரைஉடைத்து | காட்டாறு | புகுந்த | தைப்போல் |
கதவடுத்து | உட்சென்றேன்; | நிமிடம் | தன்னில் |
அறையடுத்து | அவள்சென்றாள்; | நெருங்கி | விட்டேன் |
அப்போது | அவள்சொன்னாள்; | அப்பா | அம்மா |
வருகின்ற | நேரமென்றாள்; | அப்பா | அம்மா |
வந்திடட்டும் | தலையறுத்து | வீழ்த்து | வாரோ! |
நிறைமதியுன் | கன்னத்தில் | முத்தம் | தந்த |
நீங்காத | நினைவோடு | சாவேன் | என்றேன். |
மற்கட்டு | நடந்ததுவா? | அதுதான் | இல்லை! |
மாமழையில் | நனைந்தோமா? | அதுவும் | இல்லை! |
சொற்கட்டு | இருந்ததுவா? | ஏதும் | இல்லை! |
சுகங்கண்டு | திளைத்திட்டோம் | இதுதான் | உண்மை! |
கற்கண்டு | தொண்டைவரை | இனிக்கும்; | ஆனால் |
கன்னியிவள் | அணுவணுவாய் | உடல்பூ | ராவும் |
சொற்கொண்டு | விளக்கவொண்ணா | இன்பம் | தந்தாள்! |
சொன்னாலும் | சுவைகுன்றும் | அதனால் | விட்டேன். |