அந்திமாலை | வந்தபோது |
அங்குதென்றால் | தொட்டபோது |
இந்தமாமன் | நினைப்புனக்கு |
வந்த | தில்லையா? |
தூக்கமின்றி | கண்தவிக்க |
ஏக்கத்திலே | மனந்தவிக்க |
தீக்குளித்த | உணர்விலே நீ |
நொந்த | தில்லையா? |
கொந்தளிக்கும் | கடலைப் போல |
குமுறுகின்ற | மேகம்போல |
தத்தளிக்கும் | படகுபோல |
ஆட | வில்லையா |
பொன்சிவந்த | முகத்தினிலே |
பூ” சிதறும் | தேன்துளிபோல் |
கண்கசிந்து | என்னையெண்ணி |
வாட | வில்லையா? |
மன்மதனும் | வில்லெடுத்து |
மலர்க்கணையை | வீசும்போது |
உன்மனதில் | என்னுறவு |
தீண்ட | வில்லையா? |
முல்லை” நீலம் | ‘மா’ அசோகு |
தாமரைசேர் | ஐ மலர்கள் |
மோக தாக | விரக வேகம் |
தூண்ட | வில்லையா? |
ஆட்டிவைக்கும் | உணர்வு பொங்கி |
அடங்கிடாமல் | மீறும் போது |
போட்டிபோட்டு | என்நினைப்புத் |
தாக்க | வில்லையா? |
பூகம்பத்தின் | நெருப்பலைகள் |
சுனாமி போல | சீறிப்பாய்ந்து |
புரட்டிப்போட்டு | வறுத்தெடுத்துத் |
தீய்க்க | வில்லையா? |
மாது நீயும் | மனத்திரையில் |
சூது கொண்டு | மறைத்திதனை |
ஏதுமறி | யாதவள்போல் |
ஏங்க | வில்லையா? |
உண்டா – | இல்லையா? |
கருப்பும்-வெறுப்பும்
காக்கையொடு | குயிலினமும் | யானை | மற்றும் |
கருப்பாடு | கருங்குரங்கு | கரடி | தானும் |
பார்க்கும்விழி | நெருப்பான் | கருஞ்சி | றுத்தை |
பால்கொடுக்கும் | எருமைமுதல் | கரிச்சான் | எல்லாம் |
நோக்குநிறம் | கடுங்கருப்பு | ஆன | தாலே |
நொந்துமனம் | வெந்ததுண்டா? | மனிதன் | மட்டும் |
தீக்குள்விரல் | வைத்ததைப்போல் | கருப்புப் | பெண்ணை |
தீண்டாப்பொரு | ளாக்கியதை | ஒதுக்க | லாமா? |
சந்தனத்தைத் | தரும்மரமும் | அழகோ; | முத்தைத் |
தருகின்ற | சிப்பியென்ன | அழகோ; | தங்கம் |
தந்தசுரங் | கம்என்ன | அழகோ; | பூத்த |
தாமரைவாழ் | சேறென்ன | அழகோ; | வைரம் |
எந்தவிதம் | அழகாகும் | பட்டை | இன்றி |
இனியதேன் | அழகோ; ஈ | மொய்த்த | தன்றோ! |
பந்தங்கள் | தொடர்கதையாய் | வளர்த்துக் | காக்கும் |
பாசமலர் | கருப்பென்றால் | குறையோ | சொல்வீர்! |
கருப்பாக | குயிலிருந்தும் | குரலி | லினிமை |
காட்டாமல் | போனதுண்டோ? | தங்கம் | மண்ணில் |
இருந்தாலும் | வைரமொடு | ஒளிகூட் | டாதோ? |
எழில்முத்து | அதன்மதிப்பு | குறைவ | துண்டோ? |
மருந்துக்கும், | விருந்துக்கும் | தேனே | யன்றோ! |
மணங்கமழச் | சந்தனந்தான் | மறுத்த | துண்டோ? |
கருப்பாக | இருக்கும்பெண் | சமுதா | யத்தைக் |
காக்கின்ற | குலமகள்தான் | வெறுக்க | லாமோ? |
படைப்பினிலே | கருப்பென்ன, | சிவப்பு | என்ன? |
பண்பு | “குண நலன்” | மாறிப் | போவ துண்டோ? |
எடைபோட்டுப் | பார்க்கின்றீர்! | அவளும் | தாய்மை |
எய்திப்பின் | சந்ததியை | வளர்த்தல் | காண்பீர்! |
தடைபோடும் | மணப்புழுக்கம் | தாண்டி | வாரீர்! |
தளிருடலாள் | இரத்தம்அது | சிவப்பு | காண்பீர்! |
கடையோரம் | மனதிலிதை | ஏற்றுக் | கொண்டு |
கருணையுடன் | வாழ்வளிப்பீர்! | பெருமை | சேரும்! |
அவையடக்க வணக்கம்
பண்அம் | பலப்படுத்தும் | பாட்டரங்கம் | வந்திருக்கும் |
என்அன்பிற் | குறியோரே! | ஏற்றமிகு | தமிழறிஞர் |
பாகற்காக் | கவிஞன்நான் | பாவாடை | நானறியேன்! |
(“பா” கற்காக் | கவிஞன்நான் | “பா”வாடை | நானறியேன்!) |
மேகக் | கருக்கல்போல் | மென்துளிகள் | நான்தெளிப்பேன் |
தொடையுண்டு | இலக்கணத்தில் | தொட்டதில்லை | நானதனை |
அடியுண்டு | இலக்கணத்தில் | அடிபட்டுப் | பழக்கமில்லை |
நேருண்டு | நிறையுண்டு | நெருங்கிநான் | சென்றதில்லை |
காயுண்டு | கனியுண்டு | கடித்ததனைப் | பார்த்ததில்லை |
கருவிளத்தைக் | கூவிளத்தைக் | காசுமலர் | நாள்பிறப்பைக் |
காரிகை | அலங்காரம் | கண்டதில்லை | கேட்டதில்லை! |
எழுத்தசையைச் | சீர்தளையை | எதுகையொடு | மோனைகளை |
அழுத்தமுடன் | கற்றறியேன்; | ஆனாலும் | அவைப்பெரியீர்! |
அழுத்தமுடன் | பாப்பாட | அரங்கேறி | வந்துவிட்டேன் |
பழுத்தவனோ, | காயோ, | பார்த்தறிவ | துங்கள்கடன் |
வெண்பா | கலிப்பா | விருத்தப்பா | சந்தப்பா |
எந்தப்பா | வையும்நான் | ஏறிட்டுப் | பார்த்ததில்லை! |
அப்பாவிற் | கப்பா | அருங்கவிதை | பாடியதால் |
இப்போநான் | கவியரங்கில் | இயல்பாகப் | பாடவந்தேன் |
குற்றங் | குறையிருந்தால் | கூறுங்கள் | திருந்துகிறேன் |
கொற்றவனின் | முன்னே | குடிமகனாய் | வணங்குகிறேன்! |
கவியரங்கத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
ஆண்ட | மொழிச்சிறப்பை | அழகுதமிழ் | மரபுதனை |
மீண்டும் | நிலைநிறுத்த | மேடைக்கு | வந்தவரே! |
வில்லெடுத்துப் | போர்தொடுக்கும் | வீர | மறவர்போல் |
சொல்லெடுத்துப் | போர்தொடுக்கும் | சுழிமுனையைக் | கற்றவரே! |
மாவரங்கம் | பலகண்ட | மாத்தமிழின் | சீர்கொண்ட |
பாவரங்கத் | தின்தலைமைப் | பாங்குதனை | ஏற்றவரே! |
இமைத்தவிழி | திறப்பதற்குள் | ஏழாயிரம் | கவிதை |
அருந்தமிழி | லியற்றுமாற்றல் | அத்தனையும் | பெற்றவரே! |
விட்டிழுத்த | மூச்சு | வெளியேறும் | முன்னாலே |
கொட்டிக் | குவித்திடுவீர் | கோடிக் | கவிதைகளே! |
தட்டி | எழுப்புவதில் | தமிழுணர்வை | ஊட்டுவதில் |
திட்டமிட்டுப் | பாடுவதில் | திறன்மிகுந்த | பெருங்கவிக்கோ |
முப்பழத்தின் | சுவைத்திறல்கள் | வாமுசே | துராமன்தன் |
செப்பும் | கவிதையிலே | செரிந்திருக்கும் | காண்போமே! |
மன்றத்தில் | மணியோசை | இவரின் | பேச்சு! |
மணிமுடிதான் | தமிழுக்கு | இவரின் | ஆற்றல்! |
குன்றத்து | விளக்காக | இலக்கி | யத்தேன் |
குடங்குடமாய் | வார்த்தளிக்கும் | தமிழின் | வள்ளல்! |
என்றைக்கும் | இவர்தொண்டு | தமிழுக் | குண்டு! |
இவரறியா | நூலில்லை | தேர்ந்த | தேனீ! |
கன்றுக்குத் | தாய்மடிதான் | சொர்க்கம், | இங்கே |
கவிப்பெருங்கோ | தான் எங்கள் | கவிதை | சொர்க்கம்! |
கவிஅவைக் கவிஞர்கள்
பொங்குமெழில் | கவியரங்கை | ஆள | வந்த |
புகழ்க்கவிஞர் | கணக்காயன் | கண்ம | தியன் |
சங்கம்வளர் | தமிழ்மார்சல் | முருகன் | காரைக் |
கிழாரோடு | அசோக்ராசு | தியாக | ராசன் |
மங்காத | தமிழிலக்கு | வனாரின் | மைந்தர் |
மானமிகு | திருவள்ளுவர் | சென்னை | ஆண்ட |
தங்குபுகழ் | சாகணேசன் | ஆண்டவ | ரோடு |
சவகர்லால் | ராஜேந்திரன் | டான்ஸ்ரீ | குமரன் |
டத்தோஸ்ரீ | சாமிவேலு | செங்குட் | டுவன் |
இரபியுதீன் | அயூப்போடு | சேக்அப் | துல்லா |
டத்தோஆம் | நடராஜா | அருளின் | தந்தை |
பேராயர் | எஸ்றாசற் | குணம்போன் | றோர்கள் |
இத்தேசம் | எத்தேசம் | தமிழி | ருக்கோ |
இவர்களங்கே | சிறந்திருப்பர் | பசீரலி | அப்பாஸ் |
உத்தேசம் | பலநண்பர் | பெயரைச் | சொல்லி |
உவந்துரைக்க | மனமுன்டு | நேரம் | இல்லை! |
களிப்புரை

கவிமாமணி – உனது |
கவி “மா” மணி! |
அறந்தைத்திருமாறா! நீ என்ன |
அன்னைத் தமிழின் ஆணிவேரா! |
அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு |
வரந்தாங்கி நிற்கிறது! |
சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு |
ஏற்றம் பாட்டிலுண்டு! |
மரபுக் கவிதை – உனக்கு |
உறவுக் கவிதையோ! |
காவியத் தமிழோ – உன்கவிதை |
ஓவியத் தமிழோ! |
உன்னை வரவேற்கும் – வருங்கால |
சென்னைத் திரையுலகம்! |
வாழ்கநீ பல்லாண்டு – |
வளமானதமிழ்ச் சொல்லாண்டு! |
நிமிர்ந்து |
நெஞ்சுயர்த்தி வாழ்த்தும் |
கவிஞர். காசி முத்துமாணிக்கம்





