பேரறிஞர் அண்ணா

தூங்கிவிட்டதமிழர்களைவிழிக்கச்செய்தார்
சூடேற்றிநரம்புகளைமுறுக்கிவிட்டார்!
வீழ்ந்துபட்டதாழ்நிலையைவிளக்கிச்சொன்னார்!
வீறுகொண்டுஎழுவதற்குஎழுச்சிதந்தார்!
அஞ்சுவதைக்கெஞ்சுவதைதகர்த்தெறிந்தார்!
ஆர்ப்பாட்டப்போர்ப்பாட்டுஅதிரச்செய்தார்!
அடக்குமுறைஒடுக்குமுறைநொறுக்கிப்போட்டார்!
அவனியிலேதமிழர்தலைநிமிரச்செய்தார்!
மடமையிருள்போக்குகிறஒளியாய்வந்தார்!
மாதருக்குச்சமஉரிமைமதிப்பைத்தந்தார்!
கடமையிலேகண்ணியத்தைக்கட்டுப்பாட்டைக்
காக்கின்றமனவலிமைஆற்றல்தந்தார்!
உன்னைத்தான்தம்பிஎன்றுவிரலைக்காட்டி
ஒப்பரியசாதனைகள்நிகழ்த்திவைத்தார்!
அன்பிணைந்தபாசத்தைஇதயம்தேக்கி
அதைநமதுகழகம் ஒருகுடும்பம்என்றார்!
கூன்விழுந்ததமிழகத்தைநிமிரச்செய்தார்!
குருட்டுமுறைஐதிகத்தைக்கொளுத்திப்போட்டார்!
ஊன்ஒடுங்கிஉயிர்ஒடுங்கிஅடிமைப்பட்டு
ஓலமிட்டுவாழ்ந்தவரைஉயர்த்திவைத்தார்!
தீப்பொறியைப்பெருநெருப்பாய்ஆக்கிக்காட்டி
தீண்டாமைத்தீமைகளைஅதிலேபோட்டார்!
பூப்பறித்தகைகளிலேபோர்வாள்தந்தார்!
பெண்ணடிமைஒழித்திட்டார்பெருமைசேர்த்தார்!
இங்கர்சாலஎன்றிவரைச்சொல்வேனானால்
இப்ஸனுடன்பெர்னாட்சாவருந்துவார்கள்!
தங்கம் நிகர்ஆப்ரகாம்மாக்யவல்லி
தனைச்சொல்வேன் சாணக்கியர்கோபம்கொள்வார்!
மங்காததென்னாட்டுக்காந்திஎன்பேன்
மனம்நோவார்புத்தர்பிரான்அதனால்விட்டேன்!
எங்கெங்கேதமிழரினம்வாழ்ந்தாலென்ன
இவரங்கேமுடிமன்னர்அவர்தான்அண்ணா!

(தமிழ்நாடு அரசு 2009 பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலரில் 202ஆம் பக்கத்தில் வெளிவந்த கவிதை)

அண்ணா ஓர் இமயம்

அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதை 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு – 2009 மலேசியா தமிழ்ப்பல்கலைக்கழக அரங்ககோலாலம்பூர், மலேசியா

வெடிக்கின்ற எரிமலையை; பாய்ந்து சீறி
விரிகின்ற நெடுநதியை; நாளும் ஓயா(து)
அடிக்கின்ற கடலலையை; மேகத் துள்ளே
அலறுகிற இடியொலிகள் அனைத்தும் பேச்சில்
வடிக்கின்ற ஆற்றலர்யார்; கருத்தை யள்ளி
வழங்குகொடை வள்ளல்யார்; மடமை கண்டு
துடிக்கின்ற உளத்தவர்யார்; புரட்சி யாளர்
தொடருக்கே ஒளிவிளக்கு அண்ணா வன்றோ!
மாண்டதுவோ முன்பிருந்த வீர மெல்லாம்!
மடிந்ததுவோ புறம்கண்ட வரலா றெல்லாம்!
தீண்டவரும் கொடுநாக இந்தி யென்றால்!
தீர்த்துவிடு! ஏன் தயக்கம் எடுநீ வாளை!
பூண்டறுத்து எருவாக்கித் தமிழ்நன் செய்யில்
பூக்கவிடு! புதுப்பரணி தொடுநீ போரே!
ஆண்டயின வழிவந்த அரிமா வேநீ
ஆர்த்தெழுவாய் என்றவர்யார் அண்ணா வன்றோ!
பாட்டுநடைப் பேச்சுக்கு மன்னன்; ஒன்றிப்
பழகுவதில் கன்னலெனும் அண்ணன்; காளை
மாட்டுநடை சாய்த்திட்ட வண்ணன்; இந்தி
மறித்திடவே படைகொண்ட தென்னன்; தேர்தல்
கூட்டுநடை போடுவதில் கண்ணன்; தமிழர்
குடிப்பெருமை காத்ததிலே முன்னோன்; மாற்றார்
கேட்டுநடை செயலழிக்கும் எண்ணன்; முற்றல்
கிழவர்க்கும் அண்ணன்ஆம் அண்ணா அன்றோ!
இருள்போக்கும் ஒளிமூட்டம்! எழுச்சிக் கோட்டம்!
இளந்தமிழர் படைகூட்டும் செயலின் தோட்டம்!
மருள்நீக்கும் அறிவாக்கம்! மாண்புத் தேக்கம்!
மனந்தளராச் செயலூக்கம்! மங்கா நோக்கம்!
அருள்சுரக்கும் பகுத்தறிவின் கூட்டம்! நாட்டோர்
அன்பிணைந்து இனிதுவக்கும் தேட்டம்! ஆற்றல்
விறல்சேர்க்கும் பொருந்தாணைத் தலைமைத் தங்கம்!
வீணான மடமைகளைச் சாய்த்த சிங்கம்!
அறந்தாங்கி நெறிதாங்கி கொள்கை தாங்கி
அன்பறிவைத் தான்தாங்கி மக்கள் போற்ற
புறந்தாங்கும் அகந்தாங்கும் இலக்கி யத்தை
பூதாங்கும் தேன்தாங்கி சுவையாய்த் தந்தே
திறந்தாங்கி உரந்தாங்கி எழுச்சி யோடு
தேன்தமிழை வாழ்விக்க இந்தி மாய்க்க
மறந்தாங்கி ஆர்த்தெழுவீர்! மானங் காப்பீர்!
மாத்தமிழீர்! என்றவர்யார் அண்ணா வன்றோ!
தம்பிமார் பலபேர்க்கு அண்ண னானார்!
தமிழ்காக்கப் படைதிரட்டும் தலைவ ரானார்!
வம்பிழுக்கும் மாற்றார்க்கும் நண்ப ரானார்!
வளரும்நல் புதுக்கலைக்குத் தந்தை யானார்!
வெம்புகிற மக்களுக்கு வழிகள் காட்டி
வேற்றுமொழி தடுக்கின்ற கோட்டை யானார்!
தெம்புதரும் மாமருந்தாய் தமிழர் வாழ்வில்
திருப்பத்தைத் தந்ததனால் இமயம் என்பேன்!
அறநெறியில் வாழ்ந்ததனால்; கல்வி கேள்வி
ஆற்றலிலே தேர்ந்ததனால்; தமிழைத் தாங்கி,
வரலாறு படைத்ததனால்; மாற்றான் தோட்ட
மல்லிகையை மதித்ததனால்; போராட் டத்தில்
அறமுறையைப் புகுத்தியதால்; தொண்டார் தன்னை
அன்பதனால் கட்டியதால்; கையைத் தூக்கி
ஒருவிரலால் உன்னைத்தான் தம்பி என்றே
ஒப்பரிய செய்ததனால் இமயம் என்பேன்!
நின்றாலோ பொதுக்கூட்டம்! நடந்தா லாங்கே
நீண்டதொரு ஊர்வலந்தான்; பொதுக்கூட்டங்கள்
என்றாலோ மாநாடு; தேனீ போலே
எழுச்சிமிகு தம்பிகளின் கூட்டம் கூடும்!
வென்றாளும் இப்படையா தோற்கும்; வேறு
எப்படைதான் வென்றுவிடும்; வரட்டும் என்பார்!
குன்றாத உளத்தோடு எதையும் தாங்கும்
இதயத்தைப் பெற்றதனால் இமயம் என்பேன்!
மூஞ்சியைப்பார் முகரையைப்பார் என்றே மாற்றார்
முறைகேடாய்த் திட்டியதை; பிறப்பைப் பற்றி
காஞ்சிநகர் வீதியிலே பலகை தன்னில்
கடுஞ்சொல்லால் எழுதியதை; அய்யா கூட
வாஞ்சையொடு கண்ணீர்த்துளி பசங்க ளென்று
வடுச்சொற்கள் வீசியதை; அகழ்வார் தாங்கும்
பூஞ்சோலை நிலம்போல தாங்கிக் கொண்ட
புனிதரதனால் அரசியலில் இமயம் என்பேன்!
நாடெல்லாம் தமிழன்போய் வாழு கின்றான்
நாடில்லை தமிழனுக்கு தமிழ்நா டென்று
நாட்டிற்குச் சென்னையென இருந்த பேரை
நயமுடனே தமிழ்நாடென் றாக்கித் தந்தார்!
வேட்டுமுறை ஓட்டுமுறை இரண்டில் ஆட்சி
வேரூன்ற ஓட்டுமுறை தேர்ந்த மேதை
நாட்டிலுள்ள ஏழைகளின் சிரிப்பில் அண்ணா
இறைவனையே கண்டதனால் இமயம் என்பேன்!
பேச்சாளர், எழுத்தாளர், ஆய்ந்து தேர்ந்த
பிழையறியாப் பேரறிஞர்; கதையா சிரியர்!
ஆச்சரியம் வேண்டாமிவர் நடிகர்; நல்ல
ஆசிரியர்பத்திரிகை உலகில்; மேலும்
மூச்சிருக்கும் வரைமாறாக் கொள்கை கொண்ட
முன்னோடி; தனித்தலைவர்; புதுமைச் சிற்பி
மாச்சரியம் கடந்தெவரும் போற்றும் பண்பின்
மாண்புடைய அண்ணாவை இமயம் என்பேன்!
அரசியலில் அண்ணாஓர் இமயம் என்பேன்!
அவருக்கு நிகர்அவரே! அதனால் சொன்னேன்!
முரசறைவார்; உன்னைத்தான் தம்பி என்பார்!
மூள்பகையை ஒடுக்கிடவா வாவா என்றே
அறைகூவ லும்விடுவார்! ஆர்த்துப் பாயும்
அடலேறை யும்அடக்கி அமைதி காப்பார்!
விரைந்தோடும் காட்டாற்றின் திசையை மாற்றி
வீரத்தில் விவேகத்தைப் பயிரே செய்வார்!
அடக்குமுறை ஒடுக்குமுறை சிறைக்கூ டங்கள்
அச்சுறுத்தும் போர்ப்பரணி ஆர்ப்பாட் டங்கள்
இடக்குமுறை கெடுக்குமுறை எதிர்ப்பு காய்ப்பு
இழிமொழிகள் பழிவழிகள் மிரட்டல் எல்லாம்
தடுக்கும்முறை கற்றிருந்தார்! புத்தர் காந்தி
தத்துவத்தை அஹிம்சைதனைப் பெற்றி ருந்தார்!
அடுக்கும்முறை செய்திட்டார்! அதனால் சொல்வேன்!
அரசியலில் அண்ணாஓர் இமயம் என்பேன்!
படியரிசி போட்டதனால்: பஞ்சம் தன்னைப்
பறந்தோடச் செய்ததனால்; லஞ்சம் தன்னை
அடிகொடுத்து விரட்டியதால்; ஊழல் தன்னை
அண்டவிடா தாக்கியதால்; அதிகா ரத்தை
பிடித்தொடித்துத் தனதாக்கிக் கொள்ளா ததால்
பின்பாட்டுப் பாடிடஆள் வைக்கா ததால்
படிப்படியாய் பொதுப்பணத்தில் பங்க ளாக்கள்
படகுக்கார் வாங்காததால் இமயம் என்பேன்!
ஒட்டித்தான் பிறந்தோமா இல்லை; இன்னும்
ஒருதாய்தான் பெற்றாளா; அதுவும் இல்லை!
எட்டியெட்டி தனித்தனித்தாய் பெற்றுங் கூட
எல்லோரும் ஓர்குடும்பம் ஆக்கி வைத்தார்!
கட்டிவிட்டார் பாசமெனும் மாயத் தாலே
கழகமே குடும்பமென ஆக்கிப் பார்த்தார்!
சுட்டுவிரல் நீட்டுகிற அண்ணா சொல்லில்
சொக்காதார் யாரதனால் இமயம் என்பேன்!
கடல்மடையோ திறந்ததென மாற்றார் போற்றும்
கருத்துநிறை பேச்சுக்கு நாக்கைத் தந்தார்!
மடமைகளை வேரறுத்துச் சீர்தி ருத்த
மாப்பணிகள் புரிவதற்கு அறிவைத் தந்தார்!
விடமனைய இந்தியினை மறிப்ப தற்கு
வியக்கின்ற வகையினிலே எதிர்ப்பைத் தந்தார்!
கொடுவாளும் கடுஞ்சிறையும் கண்டு அஞ்சாக்
குணக்குன்று புற்றுநோய்க்கு உடலைத் தந்தார்!
பிறப்பென்பார் இறப்பென்பார் அதனை வென்று
பெருவாழ்வு வாழ்கிறவர் அண்ணா வன்றோ!
இறப்புலகு சென்றாலும் தமிழ்நாட் டாரின்
இதயத்தில் வாழ்கிறவர் அண்ணா வன்றோ!
சிறப்பாகச் சொல்வதெனில் அண்ணா இன்னும்
சாகவில்லை வாழ்கின்றார் நூற்றாண் டாக
சுரக்கின்ற கவிதையது பொங்கப் பொங்க
சூழ்நிலையால் முடிக்கின்றேன் வணக்கம்! நன்றி!!

.

அண்ணா மறையவில்லை (இரங்கற்பா)

அண்ணாமறைந்தாரா?அன்புருவம்மறைந்ததுவா?
என்னயிதுஅநியாயம்எவர்சொன்னார்துயர்ச்செய்தி
திங்கள்முகங்கொண்டதென்னாட்டுக்காந்திமுகம்
எங்கேமறைந்தது?இங்குள்ளார்மனதிலெல்லாம்
அண்ணாவின்திருவுருவம்அற்றுப்போய்விட்டதுவோ?
சொன்னாலேவாய்கூசும்சொல்லாமல்இருந்தாலோ
மனங்குமுறிவெடித்துவிடும்மடிந்துவிடும்மனிதநேயம்
பகலென்றும்இரவென்றும்பாராமல்அயராமல்
இணையில்லாஆட்சியினைஇந்நாட்டில்ஏற்படுத்த
தூங்காமல்கண்விழித்துதுவளாமல்உழைத்ததனால்
தூங்குகிறார்கல்லறையில்துயில்எழுவார்பின்ஒருநாள்
கல்லறையின்உள்ளேகண்ணயர்ந்துதூங்குகிறார்
சில்லறையாய்வந்தமனச்சுமையெல்லாம்இறக்கிவைத்து
தென்னாட்டுமக்கள்தெளிவோடுவாழ்வதற்கு
தமிழ்நாட்டுமக்கள்தனித்துயர்ந்துவாழ்வதற்கு
கழகத்தைஏற்படுத்திகலாச்சாரம்சீர்படுத்தி
அழுத்தமுடன்பேச்சாலேஅனைவரையும்சீர்திருத்தி
எழுத்தாலேமக்களிடம்எழுச்சியினைஉண்டாக்கி
அழுத்தமுடன்கொள்கைகளைஅடுக்கடுக்காய்எடுத்துரைத்து
நாடகத்தால்சினிமாவால்நல்லபலகலைத்திறத்தால்
நாடுதனில்உள்ளோரைநல்வழிக்குமீட்டுவந்த
அண்ணாவாமறைந்துவிட்டார்என்னயிதுஅநியாயம்
அண்ணாமறையவில்லைஅன்புருவம்மறையவில்லை
தென்னாட்டுக்காந்தியண்ணாசென்னைப்பல்கலைக்கழக
முன்னாலேமெரினாவில்முகிழ்ந்திருக்கும்ஓர்சிறிய
கல்லறையின்உள்ளேகண்ணயர்ந்துதூங்குகிறார்
அண்ணாமறையவில்லைஅன்புருவம்மறையவில்லை
பெண்ணாங்குகாவிரிக்கும்பெரும்புலவர்வள்ளுவர்க்கும்
கண்ணகிக்கும்கம்பருக்கும்காவியத்துப்புலவர்கட்கும்
சிலைவைத்தஅண்ணன்தன்சிறப்பெண்ணிமனம்புழுங்கி
சிலையாகநிற்பவர்யார்சிந்தியழுவோர்யார்யார்?
மதறாஸ்எஸ்டேட்டைதமிழ்நாடுஆக்கியவர்
பதமானபேச்சாலேபகைவரையும்மடக்கியவர்
உலகத்தமிழ்மாநாட்டைஒப்பின்றிநடத்தியவர்
கலகமிலாநல்லாட்சிகண்டுயர்ந்தபேரறிஞர்
படியரிசித்திட்டத்தைப்பாங்குடனேதுவக்கியவர்
படிப்படியாய்க்கிராக்கிப்படிஊழியர்க்குஉயர்த்தியவர்
நம்மினத்தைக்காப்பதற்கும்நாட்டுநலம்காப்பதற்கும்
மும்முனைப்போராட்டம்முத்தமிழ்க்கோர்போராட்டம்
விலைவாசிப்போராட்டம்இந்திக்கோர்போராட்டம்
மலைமலையாய்த் தடைவரினும்மனந்தளராப்தடைமீறல்
எத்தனையோபோராட்டம்எத்தனையோதடைமீறல்
எத்தனையோசிறைவாசம்எத்தனையோபெருந்தொல்லை
இத்தனையும்தாங்கும்இதயத்தைப்பெற்றஅண்ணன்
செத்திட்டார்என்கின்றசேதிஅறிந்தவுடன்
விழுபவரும்எழுபவரும்விம்மிவிம்மிஅழுபவரும்
தொழுபவரும்நைந்துருகிதுயரத்தால்மனங்கலங்கி
வாடுகின்றதம்பிகள்யார்வற்றாதகண்ணீரால்
ஓடுகின்றநதியிலண்ணன் உடல்கழுவிவைப்பவர்யார்
இதயத்தைக்கடன்வாங்கிஏழைகளைவாழ்விக்க
உதவத்துடித்திருக்கும்உத்தமர்கள்எத்தனைபேர்
செம்மொழிஎன்றேதமிழைசீர்தூக்கிவாழ்விக்கும்
நம்தம்பிஎத்தனைபேர்நானறியவேண்டாமா
என்பதனைஅறிவதற்குஏற்பட்டஆசையினால்
மண்புதைத்தகல்லறைக்குள்மனம்புதைத்துசொல்புதைத்து
அண்ணன்உறங்குகிறார்அறிவாலயத்தலைமை
மன்னன்உறங்குகிறார்மற்றென்ன?எந்நாளும்
மொழியோடுமொழியாகநாட்டோடுநாடாக
உயிரோடுஉயிராகஉணர்வோடுஉணர்வாக
அறிவோடுஅறிவாகஅன்போடுஅன்பாக
நீதியிலேநேர்மையிலேநெறிமாறாச்செயல்களிலே
அண்ணாஇருக்கின்றார்அறிஞர்இருக்கின்றார்
ஆண்டுநூறானாலும்அழிவின்றிநம்முடனே

தந்தை பெரியார்

ஈரோட்டுப்பாசறையாய்இருளோட்டும்ஒளிப்பிழம்பாய்
வேரோடுபுராணத்தைவீழ்த்தவந்தவீரர்யார்?
நால்வருணகுலாச்சாரம்இதிகாசஐதிகத்தின்
வாலறுத்தகொடுவாளாம்வரலாற்றுநாயகர்யார்?
கடவுள்பெயர்சொல்லிக்கண்மூடிவாழ்ந்தவரை
உடைவாளைக்கையேந்தஒருங்கிணைத்ததளபதியார்?
விட்டவிதிதலையெழுத்துகடவுள்செயல்என்றவரை
தட்டிவிட்டெழுப்பியேதலைநிமிரச்செய்தவர்யார்?
அரசாங்கஅதிகாரிஅருகினிலேசெல்வதற்கும்
அஞ்சிக்கிடந்தவரைஅரசாளச்செய்தவர்யார்?
ஜாதியெனும்கொடுமையினைத்தகர்த்தெறிந்துசமன்செய்து
நீதியங்கேநிலைத்தோங்கநெத்தியடிகொடுத்தவர்யார்?
ஆதியிலேஜாதியில்லைபாதியிலேவந்ததென்று
வாதிட்டுவெற்றிகண்டவரலாற்றுத்தலைமகன்யார்?
காட்டோரம்வயலோரம்கண்காணாத்தூரத்தில்
வீடுகட்டித்தனித்திருந்தவிதிமுறையைத்தூளாக்கி
நாட்டுக்குள்வீடுகட்டிநலமனைத்தும்பெற்றுயர
தீட்டுக்குத்தீட்டுதந்ததிராவிடத்துப்பெரியார்யார்?
பள்ளியிலேகல்லூரிப்படிப்பினிலேஇடந்தந்து
வல்லவராய்உயர்ந்தோங்கவழிகாட்டிநின்றவர்யார்?
தீண்டாமைஎனும்தீமைதீக்கிரையாய்மாண்டிடவும்
மூடப்பழக்கமெலாம்மூள்நெருப்பில்வெந்திடவும்
கொத்தடிமைநிலையெல்லாம்கூண்டோடுஅழிந்திடவும்
சித்தமெலாம்பகுத்தறிவுச்சிந்தனையாய்ப்பூத்தவர்யார்?
எட்டாதபாதாளம்இருந்திட்டமக்களினை
எட்டுகிறபடிக்குயர்த்திஏற்றமிகத்தந்தவர்யார்?
சாத்திரத்தைக்கோத்திரத்தைக்காத்திருந்தசூதரிடம்
சூத்திரனும்சமமென்றுசூலுரைத்தபகலவன்யார்?
ஓடுகிறஇரத்தத்தில்உள்மூச்சில்உணர்வுகளில்
வேற்றுமைஇல்லையெனவிளக்கத்தைத்தந்தவர்யார்?
வீட்டுக்குள்பெண்பூட்டிவிலங்கிட்டுஅடிமையென
கூட்டுக்குள்அடைத்தவரைக்குலைநடுங்கச்செய்தவர்யார்?
பெண்ணுக்குச்சமஉரிமைபேச்சுரிமைதந்தவர்யார்?
கண்ணுக்குச்சமமென்றகண்ணியத்தைத் தந்தவர்யார்?
வீதியிலேபொதுக்கூட்டமேடையிலேபயமின்றி
பாதிப்பேர்பெண்கள்வரப்பாதைதிறந்தவர்யார்?
வறுமையிலேவாழ்ந்தவர்கள்வளமேகாண
வழிகாட்டிநின்றவர்யார்?மடமைஎன்னும்
சிறுமையிலேஉழன்றோரைஅறிவுஊட்டி
சிந்திக்கவைத்தவர்யார்?சேரன்சோழன்
பெருமையெலாம் மறந்தார்க்குநினைவுஊட்டி
பீடுபெறச்செய்தவர்யார்?கல்விகேள்வி
நறுமணத்தைஅனைவரையும்நுகரச்செய்து
நாட்டினிலேஎழுச்சியினைத்தந்தவர்யார்?
பாம்பென்றும்பாம்பைவிடக்கொடியதென்னும்
பார்ப்பனரைத்தாக்கியதார்?பூநூல்பற்றி
வீம்புபலபேசியதார்?பிள்ளையாரை
விபத்துக்காளாக்கியதார்?ராமர்தன்னை
தேம்பியழவிட்டதுயார்?வேரோடாங்கே
தென்னைதனைவீழ்த்தியதார்?வைக்கம்சென்று
தீண்டாமைஒழித்ததுயார்?கள்ளுண்பாரைத்
திருத்தியதார்ஈவேராபெரியாரன்றோ!

முத்தமிழ் வித்தகர் கலைஞர்

நாட்டையொருசொர்க்கமெனஆக்கிச்சேர்க்க
நல்லவர்கள்முயன்றால்தான்முடியும்;நெஞ்சக்
கூட்டுக்குள்,நாடுமொழிமக்கள்வாழ
கொள்கைவழிகண்டால்தான்செயல்கள்ஓங்கும்
தீட்டுகிறதிட்டங்கள்வெற்றிசேர்க்கும்!
திசையெட்டும்தமிழ்பரவிசெம்மைபூக்கும்!
வாட்டுகிறபசிபஞ்சம்வறுமைநீங்க
வழிவகுத்தஒருவருண்டுஅவர்தான்யாரோ!
உதயசூரியன்போலகலைஞர்வந்தார்!
ஒப்பற்றசாதனையால்உயர்ந்துநின்றார்!
இதயத்தில்என்நாளும்வைக்கத்தக்க
எத்தனையோசெய்திட்டர்!மக்களுக்கு
புதையல்போல்நற்பலன்கள்குவித்துததந்தார்!
பொன்னுலகில்ஏழைகளைவாழவைத்தார்!
அதிசயமோஎனஎண்ணத்தக்கதிட்டம்
ஆயிரமாயிரம்தந்தார்!வெற்றிகண்டார்!
கூரையிலேவாழ்கின்றமக்கள்கொண்ட
குறையறிந்தார்!அதைமாற்றத்திட்டம்போட்டார்!
காரைவீடனைவர்க்கும்கட்டித்தந்தார்!
கண்குளிர்ந்தார்!மனங்குளிர்ந்தார்!மக்கள்:வாழ்த்தி
நீரைக்கண்ணால்சொரிந்துமகிழ்தல்கண்டார்!
நித்தமுயிர்வாட்டுகிறபசியைப்போக்க
வோ,நீரை,மரம்,பெறவே;ஊட்டுதல்போல்
விலைரூபாய்ஒன்றுகிலோஅரிசிதந்தார்!
கொடுத்தார்திருமணஉதவி;கருவில்வாழும்
குழந்தைக்கும்தாய்க்கும்மெனமகப்பேருதவி!
கொடுத்தார்பாட்டன்பாட்டிமுதியோர்க்கெல்லாம்
குறைவில்லாவாழ்வுதவி;வேட்டிசேலை
கொடுத்தார்பள்ளிக்கேகும்சிறார்க்குஎல்லாம்
முட்டை,சத்துணவு,சீருடை,சைக்கிள்கள்
கொடுத்தார்தொலைக்காட்சியொடுபஸ்பாஸ்
கண்ணொளிகாற்செருப்புமுதல்கருணைஇல்லம்!
வீட்டுக்கொருவிளக்கெரியவழியேதந்தார்!
விசையடுப்புஎரிவாயுதந்தார்!மற்றும்
கூட்டுறவில்எண்ணெய்முதல்மளிகை,மேலும்
பருப்புடனேஅரிசிகோதுமைகள்தந்தார்!
பாட்டுக்கொருபாரதியின்பெண்மைஓங்க
படைத்திட்டார்சுயஉதவிக்குழுவை;நாட்டில்
பாட்டாளிஏழைபொதுமக்கள்நோய்வாய்ப்
படாதிருக்கஉயிர்காக்கும்திட்டம்தந்தார்!
விவசாயநிலவரியைக்குறைத்தார்!கிணற்றுக்
விவசாயிகடன்ஏழாயிரம்கோடியை
கிலவசமின்சாரமொடுகடனும்தந்தார்!
தவிப்போர்க்குஉதவிடவேதுவக்கிவைத்தார்!
தந்தார்காப்பீடு,உயிர்,பயிர்,
புவிபோற்றஇமாம்உலமாபூசாரிகட்கு
போகவரசைக்கிளொடுநிதியும்தந்தார்!
வானார்திருவள்ளுவர்க்குக்கோட்டம்தந்தார்!
வானுயரக்குமரியிலேசிலையைத்தந்தார்!
தேனார்க்கும்சிலப்பதிகாரத்தைப்போற்றி
திசைபுகழும்பத்தினிக்கோட்டத்தைத்தந்தார்!
வான்முட்டுமஎழுநிலைமாடத்தைத்தந்தார்!
வளர்திரையில்பூம்புகார்பெருமைசேர்த்தார்!
தொன்மைமிகுதிருவாரூர்த்தேரைஓட்டி
திருவுடையபக்தரையும்மகிழச்செய்தார்!
பைந்தமிழைசெம்மொழியாய்உயர்த்திவைத்தார்!
பார்புகழவிழாவெடுத்தார்!உலகேபோற்ற
நைந்தவர்கள்வாழ்வுயரத்திட்டம்தந்தார்!
நாடெல்லாம்கோயில்குடமுழுக்குச்செய்தார்!
முந்தியமாநிலம்தமிழ்மாநிலமேஎன்று
முழங்கினார்சோனியாகாந்தி;வெற்றிதன்னை
விந்தியம்போல்இமயம்போலஉயரச்செய்த
வித்தகர்யார்?விரிகதிரோன்கலைஞரன்றோ!
சட்டம்ஒழுங்கைக்காத்தார்!ஜாதிபேத
சச்சரவுஎழாவண்ணம்ஆட்சிசெய்தார்!
ஒட்டியுறவாடிசமஉணர்வுபொங்க
உருவாக்கிசமத்துவபுரத்தைத்தந்தார்!
வீட்டுக்குமனைப்பட்டாநிலப்பட்டாக்கள்
வின்னுயர்ந்தஅடுக்குமாடிகுடியிருப்பு
நாட்டுக்குஇதுபோன்றநன்மைசெய்த
நாயகன்யார்?நம்முதல்வர்கலைஞர்தானே!
மாறாதஆட்சியெது?தமிழகத்தை
மறுமுறையும்ஆளும்வகைசெய்வார்!வெல்வார்!
தீராதகாவிரிநீர்தீர்வுகாண்பார்!
திசையாட்சிதமிழ்வெல்லடெல்லிசேர்ப்பார்!
பாராதசேதுசமுத்திரத்திட்டத்தை
பாங்குடனேநிறைவேற்றிநாடுகாப்பார்!
கூராதபலதிட்டம்கூறிச்செய்வார்!
குன்றெழுந்தவிரிகதிரோன்கலைஞர்வாழ்க!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்

ஏழைகள்வாழ்ந்திடப்பிறந்தவரு!
இருப்பதைஅள்ளிக்கொடுத்தவரு!
நாளையும்நிலைத்துவாழ்பவரு!
நல்லபொன்மனத்தைக்கொண்டவரு!
வறுமையைநன்றாய்உணர்ந்தவரு!
வாட்டத்தைப்போக்கிடவந்தவரு!
சிறுமையைவிரட்டிடத்துடித்தவரு!
சிறுவர்க்குச்சத்துணவுதந்தவரு!
அண்ணாவழியிலேநடந்தவரு!
அரசுநடத்துவதில்வல்லவரு!
கண்ணாய்த்தாய்குலம்காத்தவரு!
கலைஞர்கள்போற்றியநல்லவரு!
கொள்கைநெறியிலேநின்றவரு!
குறுக்கிடும்நரிகளைவென்றவரு!
எல்லையில்லாப்புகழ்கொண்டவரு!
எம்.ஜி.ஆர்.எனப்பெயர்பெற்றவரு!
செத்துப்பிழைத்துஎழுந்தவரு!
சிகரத்தின்உச்சியைத்தொட்டவரு
கடையெழுவள்ளலைமிஞ்சினவர்!
கடற்கரைமெரினாவில்துஞ்சினவர்!
Back to Top