பொன்னுக்கு | நிறந்தந்தாய் | பூவிற்கு | மணம்தந்தாய் |
பண்ணிற்குக் | குளிர்தந்தாய்! | பாவிற்குச் | சுவைதந்தாய்! |
மண்ணிற்கு | வளந்தந்தாய்! | மாக்கடற்கு | நிறம்தந்தாய்! |
விண்ணிற்கு | ஒளிதந்தாய்! | வியக்குமரும் | பரம்பொருளே! |
ஒலியாகி | குரலாகி | ஒலிக்குறிப்பு | தானாகி |
வலிவான | சொல்லாகி | வற்றாத | ஊற்றாகி |
மொழியாகி | எழுத்தாகி | மூப்பறியா | இளமையொடு |
விழிப்போடும் | துடிப்போடும் | விளங்குஞ்செந் | தமிழ்த்தாயே! |
எழுந்தாலும் | விழுந்தாலும் | கதிரின் | வீச்சு |
எங்கெங்கு | வீழ்கிறதோ | அங்கங் | கெல்லாம் |
பரந்தோங்கி | வாழ்ந்திருக்கும் | கன்னித் | தாயே! |
பைந்தமிழே | வாழ்வரசி! | வணங்கு | கின்றேன்! |
உன்னை | வணங்குகிறேன்! | உன்மகன்நான் | என்பதனால் |
என்வாக்கை | உயர்வாக்கு! | இருப்போரைக் | களிப்பாக்கு! |