Skip to content
பஞ்சத்தை | ஓட்டிடுவார்; | மக்கள் | மீளப் |
பகுத்தறிவை | ஊட்டிடுவார்; | துணிவைத் | தந்து |
அஞ்சுநிலை | போக்கிடுவார்; | விழிப்பு | தந்து |
அவலநிலை | நீக்கிடுவார்; | அடிமை | ஆண்டான் |
கெஞ்சுநிலை | துறத்திடுவார்; | கீழும் | மேலும் |
கெடுப்பவனின் | வேரறுப்பார்; | கொடியோர் | நாட்டில் |
மிஞ்சுநிலை | தடுத்திடுவார்; | அவரைத் | தானே |
மேதினியில் | மனிதரிலே | தெய்வம் | என்போம்! |
கொத்தடிமை | ஒழித்தவரை; | கொடுமை | கண்டு |
குமுறியெழும் | குணத்தவரை; | ஏழை | வாழ |
நித்தமுழைக் | கின்றவரை; | நேர்மை | நீதி |
நிலைக்கவழி | செய்பவரை; | உலகே | மெச்சும் |
வித்தையிலே | வல்லவரை; | நாடு | ஓங்க |
விடியலினைத் | தந்தவரை; | காலந் | தோறும் |
முத்தமிழே; | ஆருயிரே; | அமுதே | என்று |
மூவுலகும் | தலைவணங்கும் | மறுப்பா | ருண்டோ? |
பசித்திருப்போர் | நிலையறிந்து | அதனைப் | போக்க |
பாதைவழி | தேடியவர் | புத்த | ரென்போம்! |
கசிந்துருகிப் | பயிர்வாட | தானும் | வாடும் |
கருணைமனங் | கொண்டவர்தான் | ராம | லிங்கர்! |
நசிந்துடலில் | நோயுற்ற | உயிருக் | காக |
நற்புதுமை | நிகழ்த்தியவர் | ஏசு | நாதர்! |
புசித்திடவே | புறாகேட்ட | வேட | னுக்குப் |
பொன்னுடலைச் | “சிபி” | தந்தார்! | உண்டோ |
சாந்தியொற்று | மையமைதி | சமத்து | வத்தைத் |
தாரணிக்குத் | தந்து | “நபி” | நெறியில் |
மாந்தரது | மடமையிருள் | போக்க | வந்த |
மணிவிளக்கு | சாக்ரட்டீஸ் | லிங்கன் | கமால் |
காநதி, | பெரி | யார்அண்ணா | திருவள் |
காட்டும்வழி | நடந்துநல் | அறிவை | ஆள்வோர் |
ஏந்துசுடர் | ஒளியினிலே | உலகே | உய்யும்! |
ஏதுயினி | மானுடத்திற் | கிடர்பா | டேது? |
கண்ணும் | கண்ணும் | காணும் | போது |
கவிதை | பேசுது! | கணைகள் | வீசுது! |
காந்தம் | பிறக்குது! | கதவு | திறக்குது! |
காதல் | துளிர்க்குது | கதையே | மாறுது! |
| | | |
| | | |
பெண்ணை | ஆணைப் | பிணைக்குது! | இணைக்குது! |
பேதம் | மறக்குது! | வேதம் | துறக்குது! |
துடிக்குது! | முடிக்குது! | துள்ளிக் | குதிக்குது! |
வெடிக்குது | வெறுக்குது! | விளங்க | மறுக்குது! |
| | | |
| | | |
நெறியை | மீறுது! | நிலைமை | மாறுது! |
உலகைத் | துருப்பென | ஒதுக்கிப் | போடுது! |
மதியை | அழிக்குது! | மனதை | மயக்குது! |
சொந்தம் | இழக்குது! | சுகமே | நினைக்குது! |
| | | |
| | | |
உள்ளம் | உடைக்குது! | ஊமை | யாக்குது! |
உணர்வைத் | தூண்டுது! | உணவை | மறக்குது! |
கலகம் | விளைக்குது! | கனவில் | மிதக்குது! |
இன்பம் | தேடுது! | இறகு | முளைக்குது! |
| | | |
| | | |
பொறுமை | இழக்குது! | பெருமை | குலைக்குது! |
உரிமை | மீறாது! | உறவை | உதறுது! |
வறுமை | வளமை | வாழ்வை | மறக்குது! |
வசைவோர்! | இசைவோர்! | ஒன்றென | எண்ணுது! |
| | | |
| | | |
உயரப் | பறக்குது! | ஊஞ்சலில் | ஆடுது! |
துயரம் | நொறுக்குது! | துணிச்சல் | பெருக்குது! |
உயிரில் | நுழையுது! | ஒளிந்து | சிரிக்குது! |
நெஞ்சைப் | பிழியுது! | நெருப்பாய் | எரிக்குது! |
| | | |
| | | |
கட்டும் | கயிராய்! | காலன் | விடமாய்! |
தூண்டில் | முள்ளாய்த் | தொடருது | படருது |
கிட்ட | அழைக்குது! | கிறுக்கைப் | பெருக்குது! |
முட்டா | ளாக்குது! | மோகம் | ஊட்டுது! |
| | | |
| | | |
வீரப் | போர்பல | விளைக்குது! | அழிக்குது! |
“வெறி”யைத் | தூண்டுது! | வெல்லுது! | கொல்லுது! |
வெற்றியில் | சிரிக்குது! | கண்ணீர் | இனிக்குது! |
வீழ்ச்சியில் | சிரிக்குது! | கண்ணீர் | கரிக்குது! |
| | | |
| | | |
அண்ணலும் | நோக்கிட | அவளும் | நோக்கிட |
கண்ணின் | பிரசவம் | கம்பன் | காவியம்! |
மும்தாஜ் | ஷாஜகான் | விழிகளும் | நோக்கிட |
தாஜ்மகால் | பிறந்தது! | உலகம் | வியந்தது! |
| | | |
| | | |
கண்ணொடு | கணணினை | நோக்கிட | வாய்ச்சொல் |
காணுமோ | பயனெதும்; | வள்ளுவர் | கேட்டார்! |
அமரா | வதிஅம் | பிகாபதி | கண்மொழி |
காதலை | வளர்த்தது! | வாய்ச்சொல் | அழித்தது! |
| | | |
| | | |
ரோமியோ | சூலியட் | லைலா | மஜ்னு |
காவியம் | வந்தது | கண்வழி | தந்தது! |
அனார்கலி | “கண்”-”வாள்” | சலீமைத் | தாக்கிட |
அக்பரை | பகைத்தது! | அழிவை | விளைத்தது! |
| | | |
| | | |
சாம்ராஜ் | யங்கள் | எழுந்ததும் | விழுந்ததும் |
சரித்திரக் | கண்வழிச் | சாதனை! | வேதனை! |
கண்கள் | கண்களைக் | காண்பது | தவறோ! |
கண்களில் | வலிமை | தந்தவர் | எவரோ! |
நரிபுடிச்சோம் | முயல்புடிச்சோம் | காடைபுடிச்சோம் | ஆயாலோ! |
காணாங்கோழி | கூழக்கடா | மான்புடிச்சோம் | ஆயாலோ! |
கொம்புநகம் | பல்லுதோலு | வாலுவிப்போம் | ஆயாலோ! |
வம்புவாது | சூதுபொய்யி | பேசமாட்டோம் | ஆயாலோ! |
| | | |
கூட்டம்கூடி | டப்பாதாளம் | ஆட்டம்போடுவோம் | ஆயாலோ! |
குடுத்தகஞ்சி | காசுவாங்கி | கும்புடுவோம் | ஆயாலோ! |
இப்பஎங்க | நெலமைவேறே | இதுதெரிமா | ஆயாலோ! |
பாசிமணிகள் | ஊசிவித்துப் | பணம் | குமிக்கிறோம் |
| | | |
அரசுதந்த | கெட்டிவீட்டுல | அண்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
அங்கேநாலு | வாழைதென்னை | வச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
கரண்டுவௌக்கு | டிவிரேடியோ | குடிநீரோட | ஆயாலோ! |
கட்டித்தந்தார் | பள்ளிக்கூடம் | படிச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
| | | |
பள்ளிப்படிப்பை | நாங்கபடிச்சோம் | பாட்டன்போல | இல்லீங்க |
பக்குவமா | உலகத்தோட | ஒட்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
வேட்டிகட்டி | சட்டைமாட்டி | வெளியேவாரோம் | ஆயாலோ! |
வெட்டிப்புட்டோம் | குடுமியைத்தான் | குளிக்கிறொமை | ஆயாலோ! |
| | | |
கல்யாணவீடு | போறதில்லை | எலைஎடுக்கலே | ஆயாலோ! |
எங்கவிட்டுலே | கல்யாணத்திலே | எலைச்சாப்பாடு | ஆயாலோ! |
சாமிசாமி | நாங்கசொன்னோம் | சிச்சியின்னிங்க | ஆயாலோ! |
சமத்துவமா | மதிக்கயிப்போ | ஒசந்துபுட்டோம் | ஆயாலோ! |
| | | |
கூட்டுறவுலே | அரிசிபருப்பு | கொடுக்கிறாக | ஆயாலோ! |
ஓட்டுப்போடும் | உரிமைகூட | இருக்குதுங்க | ஆயாலோ! |
காட்டுநரிக் | குறவர்இப்போ | நெறிக்குறவரா | ஆயிட்டோம்! |
கருணையோட | அரசாங்கந்தான் | காத்துவருது | ஆயாலோ! |
| | | |
காடுவேலை | கழனிவேலை | களத்துமேட்டுலே | ஆயாலோ! |
கருத்தைமாத்தி | உழைக்கிறதைக் | காணவாங்க | ஆயாலோ! |
கூத்தாடிவயல் | அறந்தாங்கியிலே | திருச்சிதேவ | ராயநேரி |
குடியிருக்குறோம் | நாற்பதாண்டா | பிழைத்திருக்கிறோம் | ஆயாலோ! |
ஆக்குவதும் | காப்பதுவும் | அழிப்ப | தெல்லாம் |
ஆண்டவனின் | செயலென்று | அன்றே | சொன்னார்! |
ஆக்குவது | அவன்செயல்தான்; | நம்மால் | இல்லை |
ஆக்கியநல் | உயிர்,பொருளை | யார்காக் | கின்றார்! |
ஆக்கமுடன் | உயிரினங்கள் | உழைத்து | ழைத்து |
அரும்பாடாய் | உயிர்,பொருள்கள் | காக்கக் | கண்டோம் |
நீக்கமற | இறையவனே | காப்பா | னென்றால் |
நிறை,குறைகள் | நிந்தனைஏன்? | தீர்ப்பு | உண்டா? |
| | | |
ஒருவன்மற் | றொருவனுயிர் | போக்கி | விட்டால் |
ஊருலகம் | கொலைகாரன் | என்றே | சொல்லும்! |
ஒருகொலைக்கே | சிறையுண்டு; | தூக்கு | உண்டு! |
ஓருயிரா? | ஜப்பானில் | சென்டாய் | மினாமி |
பெருநகரே | அழிந்துபட | சுனாமி | தந்த |
பெருந்துரயம்; | இருபதினா | யிரவர் | மாண்டார்! |
விரும்பித்தான் | இறைவன்கொலை | செய்கின் | றானா? |
விடையிலையா? | பொறுப்பாளி | இதற்கில் | லையா? |
| | | |
வீடுமுதல் | கார்கப்பல் | ரயில்வி | மானம் |
விரிவாக்க | அணுவுலைகள் | பெட்ரோல் | டீசல் |
தேடறிய | விஞ்ஞான | சாத | னங்கள் |
திகைப்பூட்டும் | தொழில்நுட்பம்; | அனைத்தும் | வீழ்த்தி |
நாடழித்துப் | போட்டசெயல் | நன்றோ; | தெய்வம் |
நன்மைசெயத் | தானுண்டு; | இதுவோ | கொடுமை! |
வாடிடுதே | மக்கள்மனம் | உலக | மெங்கும்! |
வடிக்கிறதே | கண்ணீர்;இறை | அறிந்தா | லென்ன? |
| | | |
போர்வெறிகொண் | டமெரிக்கா | ஜப்பான் | நாட்டில் |
போட்டஅணு | குண்டாலே | மூன்று | லட்சம் |
பேர்மாண்டார்; | ஹிரோஷிமா, | நாக | சாஹி, |
பெருந்துயரைக் | கண்டது;பின் | மீள | லாச்சு! |
வேரறுத்த | அமெரிக்கா | குனிய | லாச்சு! |
வீழ்ந்துபட்ட | ஜப்பானோ | நிமிர | லாச்சு! |
சீரழித்தாய் | சுனாமியே | ஜப்பான் | மீளும்! |
சீருபெரும்; | பேருபெறும்; | உலகம் | காணும்! |
| | | |
போனவுயிர் | மீண்டிடுமா? | பால்கு | டித்த |
பிஞ்சுமுதல் | வயோதிகரை | அழிக்க | லாமா? |
நாணமிலாச் | செயலன்றோ; | தெய்வத் | திற்கோ |
நற்கருணை | சிறிதில்லை; | உலகே | தூற்றும் |
ஈனசெயல்; | சுனாமியே | தாக்க | லாமா? |
எங்கள்தமிழ் | நாட்டோடு | இலங்கை | சேர்த்து |
போனமுறை | நீயழித்தாய்; | ஜப்பான் | இன்று |
புதைகுழியாய் | மாறியதே | இனிவா | ராதே! |
| | | |
சாகாமல் | வாழ்ந்தவர்கள் | யாரும் | இல்லை! |
சாவுக்கும் | விதிமுறைகள் | வகுத்தாய் | நீயே |
சாவுக்கு | அஞ்சியஞ்சும் | காலம் | போச்சு! |
சாவுண்டு; | இதையறிந்தே | வாழு | கின்றோம்! |
தீவுமுழு | தாய்அழித்தாய்; | ஜப்பான் | நாட்டார் |
தீமையவர் | செய்ததென்ன? | கொடுமை | யன்றோ |
சாதிக்கப் | பிறந்தவர்கள்; | ஜப்பான் | நாட்டை |
சாவுலகு | அனுப்பிடினும் | மீண்டும் | வெல்வார்! |
ஒடிச்சுப் | போட்ட | இலையைத் | தின்னு |
ஊத்தி | வச்ச | கழனிகுடிச்சு | |
ஒங்கபின்னே | சுத்திவந்த | ஆடுங்க | –நாங்க |
உண்மையிலே | நம்பிவந்தோம் | பாருங்க | |
| | | |
கெடயைப் | போட்டு | வயல் | வெளியிலே |
புளுக்கை | சிறுநீர் | எருவா | மாத்தி |
விடிஞ்சதுமே | தண்ணிகாட்டி | விட்டீங்க | –எங்களை |
விரட்டிநல்லா | புல்வெளியிலே | விட்டீங்க | |
| | | |
ஆத்து | ஓரம் | காட்டு | ஓரம் |
அருகி | ருக்கும் | செடியின் | ஓரம் |
மாத்திமாத்தி | மேயவிட்டீங்க | எங்களை | –நாங்க |
மறக்கமாட்டோம் | உயிருள்ளவரை | உங்களை | |
| | | |
நம்பி | வந்த | எங்க | ளுக்கு |
நல்ல | தையே | செய்த | நீங்க |
அன்புகாட்டத் | தவறினது | என்னங்க | –கழுத்தை |
அறுத்துயெங்கள் | உயிர்பறிப்பது | என்னங்க | |
| | | |
காலு | நாலைக் | கட்டிப் | போட்டு |
கழுத் | தறுத்த | போது | முங்கள் |
கருணையைத்தான் | நினைச்சிருப்போம் | அய்யாவே | –நாங்க |
கதறுவதுஉங்க | நினைப்பிலே | மெய்யாவே | |
| | | |
காந்தி | புத்தர் | மகா | வீரர் |
கருணை | ராம | லிங்க | அடிகள் |
சாந்திமார்க்கம் | சத்தியத்தைச் | சொன்னீங்க | –எங்களைச் |
சந்தைக்கடையில் | கழுத்தறுத்துக் | கொன்றீங்க. | |
| | | |
உலகத் | திற்கே | சாமா | தானம் |
ஒற்று | மையோ | டிஹிம்சை | கூறி |
கலகமின்றி | கொலைதடுத்தது | நீங்கதான் | –எங்களை |
கழுத்தறுத்து | போடுறதும் | நீங்கதான். | |
| | | |
காட்டில் | வாழும் | மிருகங் | களும் |
ஓடி | ஒளிந்து | பிழைக் | குதுங்க |
வீட்டில்உங்க | கூட | வாழ்ந்தோம் | நாங்களே |
வெட்டிப்பலி | கொடுபபதுவோ | நீங்களே | |
ஆயிரமா | யிரம்தேனீ | காலை | மாலை |
அலைந்தலைந்து | பூவமர்ந்து | எடுத்த | தேனை |
ஆயிரமா | யிரம்அறைசேர் | கூட்டுக் | குள்ளே |
அன்றாடம் | சிறுசிறுக | சேர்த்து | வைக்கும்! |
ஏழைசிறு | உண்டியலில் | காசைப் | போட்டு |
எப்போது | நிறையுமெனக் | காத்தி | ருப்பான்! |
ஏழையிவன் | உண்டியலைத் | திருடன் | கொண்டால் |
என்னாகும்; | தேனியையும் | இணைத்துப் | பாரீர்! |
தேன்கூட்டைக் | கட்டியதற் | கார்தான் | தந்தார்! |
தேனெடுத்து | யாரதற்குச் | சேர்த்துத் | தந்தார்! |
ஊனுறக்க | மின்றிமலர் | மலர்க்குத் | தாவி |
ஓய்வின்றி | உழைத்ததுவும் | தேனீ | யன்றோ! |
வான்மழையில் | கடும்வெயிலில் | வறட்டுக் | காற்றில் |
வகைதொகையாய்க் | காத்திருந்த | தெவரோ | சொல்வீர்! |
மானமொடு | எவருதவி | தயவும் | இன்றி |
மாண்புடனே | வாழுவதும் | தேனீ | யன்றோ! |
மாடெருமை | ஆடுபசு | குருவி | கோழி |
மனிதனதற் | குணவளித்துக் | காப்ப | துண்டு |
பாடதற்கு | மனிதனவன் | படுவதாலே | |
பல | வகையில் | பங்கெடுக்கும் | உரிமை |
கேடெவர்க்கும் | எண்ணாமல் | அடிமை | யின்றி |
கிடைத்ததேன் | உண்டுவாழ் | கின்ற | தேனீ |
கூடழித்தான்; | தேனெடுத்தான்; | மனிதன் | உண்டான் |
கொள்ளையிது! | பெருங்கொடுமை!! | மாற்று | காண்பீர்! |
பூமியிலே | அழகழகாய்ப் | புற்று | தோன்றும்! |
புனிதமிகும் | கோபுரம்போல் | உயர்ந்து | காணும்! |
சாமியில்லை | புற்றுக்குள்; | எறும்புக் | கூட்டம் |
சமத்துவத்தை | ஒற்றுமையை | மனிதர் | கட்கு |
காமிக்கும் | வகையாக | வாழ்ந்து | காட்டி |
கருத்துடனே | கூட்டுறவின் | உயர்வை | நாட்டும்! |
சேமிக்கும் | பழக்கத்தை | மனிதர் | கட்டு |
சொல்லியதே | எறும்புகளின் | கூட்டம் | தானே. |
அலையலையாய் | சுறுசுறுப்பாய் | அங்கும் | இங்கும் |
அலைந்தலைந்து | உணவுகளைத் | திரட்டி | வந்து |
வலைக்குள்ளே | சேமித்து | மழைக்கா | லத்தில் |
வாழ்வதற்கு | வழிகண்ட | எறும்புக் | கூட்டம் |
மலையளவு | அறிவுரையை | மனித | னுக்கு |
மணிமணியாய்த் | தந்ததுவும்; | கூட்டு | வாழ்க்கை |
குலையாமல் | வாழ்ந்துகாட்டி | ஒரேபுற் | றுக்குள் |
குறைவின்றி | வாழ்வதுவும் | எறும்பு | தானே! |
புற்றதற்குக் | கட்டுதற்குக் | கற்றுத் | தந்த |
பொறியாளர் | எவருண்டு; | போர்க்கா | லத்துப் |
பற்றுடைய | வீரன்போல் | பரப | ரத்துப் |
பாங்குடனே | சிறுவாயில் | மண்சு | மந்து |
பொற்கொல்லர் | நகைசெய்தல் | போலே | அந்தப் |
புற்றுதனைக் | கட்டுவது | அடடா! | அந்தப் |
பொற்புடைய | சாதனைகள் | மனித | னுக்குப் |
பொறுமைக்கும் | திறமைக்கும் | சவாலே | யன்றோ! |
மன்னன்தன் | நாட்டிலுள்ள | மக்கள் | காக்க |
மகத்தான | கோட்டையதை | கட்டி | ஆங்கே |
எண்ணற்ற | தானியங்கள் | களஞ்சி | யத்தில் |
எப்போதும் | வைத்திருப்பான்; | பசிபஞ் | சங்கள் |
தன்னாட்டு | மக்களினைத் | தாக்கா | வாறு |
தடுத்தாள்வான் | போர்க்காலம் | காப்பான். | இந்த |
பொன்னரிய | தத்துவத்தை | மனித | னுக்குப் |
புகட்டியது | புற்றுகளும் | எறும்பும் | தானே! |
போரில்லா | ஓருலகம் | புற்றுக் | குள்ளே |
புரிந்துசெயல் | படுகின்ற | தலைமை | அங்கே |
நீருக்கும் | நிலத்திற்கும் | சண்டை | இல்லை! |
நீபெரியன் | & | நான்பெரியன் | & |
யாருணவை | யார்பறித்தல் | பதுக்கல் | இல்லை! |
யாவருக்கும் | சமச்சீர்தான் | புதுமை | ஆட்சி |
ஊருலகைக் | கட்டியாளும் | மனிதன்; | இந்த |
ஒப்புமைஇல் | லாச்செயலைப் | போற்ற | வேண்டும்! |
முன்னேற்றம் | வேண்டுமென்ற | முனைப்புக் | கொள்ளு! |
மூவுலகும் | துணைநிற்கும் | விழித்துக் | கொள்ளு! |
உன்னேற்றம் | உன்எழுச்சி | முயற்சி | யாலே |
உலகையே | துயிலெழுப்பு; | செயல்கள் | செய்நீ! |
கண்ணோட்டம் | கருத்தோட்டம் | புதுமை | யாக்கு! |
காலடியில் | உலகமே | சுழலும் | காண்பாய்! |
முன்னோட்டப் | படிக்கட்டில் | முந்தி | நில்லு! |
முப்பிறப்பின் | பலனிப்போ | உன்னைத் | தேடும்! |
| | | |
விலைகொடுத்தும் | வினைமுடிக்கும் | துணிவு | வேண்டும்! |
வீராப்பு | வெறும்பேச்சு | வென்றி | டாது! |
மலையேற | வேண்டுமெனில் | வலிமை | வேண்டும்! |
மனத்துணிவு | நம்பிக்கை | உறுதி | வேண்டும்! |
நிலைஉயர | வேண்டுமெனில் | உழைக்க | வேண்டும்! |
நெறிதவறாக் | குறிதவறா | முயற்சி | வேண்டும்! |
அலையைப்போல் | முன்னோக்கும் | ஆற்றல் | வேண்டும்! |
அது | உனக்குத் | தரும்வெற்றி! | தோல்வி |
| | | |
நேர்மையுடன் | உழைத்துப்பார்! | நெஞ்சு | தூக்கி |
நித்தம்நீ | பாடுபடு! | வெற்றி | உன்னை |
ஓர்மையுடன் | தேடிவரும்! | உலகம் | உன்னை |
உத்தமனாய் | அடையாளம் | காட்டும்! | காண்பாய்! |
சீர்மைக்குச் | சிறுமையே | இல்லை; | நீயும் |
சிந்தித்துச் | செயத்தக்க | செய்து | பாரு! |
வேர்வைக்குத் | தான்வெற்றி! | ஏய்ப்போர்க் | கல்ல! |
வியந்துயர்த்தும் | உலகம்உனைப் | போற்றிப் | பாடும்! |
ஆண்சாதி | பெண்சாதி | இரண்டே | யன்றி |
அடுக்கடுக்காய்ச் | சாதிகள்ஏன்? | ஒழிந்தா | லென்ன? |
தான்சாதி | தானுயர்வு | மற்ற | சாதி |
தாழ்ந்ததெனும் | நிலையழிந்து | போனா | லென்ன? |
வீண்சாதி | பேசுவதால் | மோதல் | சாதல் |
விடிவில்லா | பாழிருட்டே | சேர்க்கும்; | இந்த |
தான்தோன்றி | சாதிமுறை | வேண்டாம்; | நாட்டில் |
சமத்துவத்தைப் | பயிர்செய்வோம்; | அமைதி | சேர்ப்போம்! |
| | | |
எத்தனையோ | நூற்றாண்டாய் | சாதி | பேசி |
இப்புனித | மனிதத்தைச் | சீர | ழித்தார்! |
வித்தகமாய் | நால்வருண | குலஆச் | சாரம் |
வேரூன்ற | மனிதகுலம் | வீழ்த்திச் | சாய்த்தார்! |
கொத்தடிமை | ஏற்றத்தாழ் | விகழ்ச்சி | பேசி |
கொடுஞ்செயலாம் | தீண்டாமை | தூண்டி | விட்டார்! |
சத்துணவில் | “சமத்துவ | புரத்தில்” | “பஸ்ஸில் |
சந்தையினில்” | சமச்சீரில்” | உண்டோ | சாதி |
| | | |
கடைபோட்டு | சாதிவெறி | வளர்க்க | லாமோ |
கண்மூடித் | தனம்விட்டு | விழித்தா | லென்ன? |
நடைபோட்டுச் | சட்டத்தின் | துணையி | னோடு |
நாளுமதைக் | காப்பதுவும் | நீதி | தானா? |
விடைகண்ட | பலதலைவர் | சாதி | வாரி |
வியூகங்கள் | ஆய்கின்றார் | ஞாயம் | தானா? |
தடைவேண்டும்; | இனம்ஒன்றே | ஆக்கல் | வேண்டும்! |
தப்பேது | சமுதாயம் | நிமிர | வேண்டும்! |
| | | |
மனிதமுண்டு | சாதியில்லை | என்றே | கூறும் |
மகத்தான | நாள்வரும்நாள் | எந்த | நாளோ? |
அணிதிரண்டு | சாதிவாரி | போர்கள் | செய்வோர் |
அதைமறந்து | ஓரணியில் | திரள்வ | தெந்நாள்? |
பிணியொத்த | சாதிசதி | ஒழிந்த | தென்றே |
பிரகடணப் | படுத்தும்நாள் | எந்த | நாளோ? |
கனியிருக்கக் | காய்கவர்தல் | தீர்வ | தெந்நாள்? |
கருமுதலே | சாதியின்றிப் | பிறப்ப | தெந்நாள்? |
மூடப் | பழக்கத்தை | மூடு | – வாழ்வின் |
முன்னேற்ற | வழித்தடத்தை | நாடு! | |
ஓடிப் | பொருள்புகழ் | தேடு | – அயரா |
உழைப்புதான் | உயர்வென்று | பாடு! | |
| | | |
எவரெவரும் | சமமென்று | ஆக்கு | – நாட்டில் |
ஏழைபணக் | காரன்நிலை | நீக்கு! | |
தவறாது | கல்விதொழில் | ஊக்கு | – ஆய்ந்து |
தளிர்க்கட்டும் | இளைஞர்மனப் | போக்கு! | |
| | | |
வளரவிடு | புதுமைகளைப் | பற்றி | – அது |
வழிதிறந்தால் | உலகுபெறும் | வெற்றி! | |
புலரட்டு | அறிவுலகம் | பெற்றி | – ஆங்கே |
போய்மறையும் | பேதமைகள் | வற்றி! | |
| | | |
பஞ்சமினி | யில்லெயெனச் | சொல்லு | – ஆன்ற |
பகுத்தறிவால் | உலகத்தை | வெல்லு! | |
துஞ்சுவதை | கெஞ்சுவதைக் | கொல்லு | – எதிலும் |
துடிப்போடு | முன்னேறி | நில்லு! | |
| | | |
நம்பிக்கை | கொண்டு | நீவாழு | – அறிவு |
நன்மைதரும் | இன்பமெலாம் | சூழும்! | |
தெம்புகொள் | உறுதியுனை | ஆளும் | – எட்டுத் |
திசைமுழுதும் | புகழ்பரவி | நீளும்! | |
Back to Top