பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனாரின் சிறப்புரை

அறந்தையின்மாறன் பாடல்
அகந்தையின்பாடல்; ஆமாம்
அகம் – தை – இன்பாடல், அன்னார்
சிறந்ததைக்கவிதை செய்தார்!
செரிந்ததைக் கவிதை செய்தார்!

(1966-&ல்… அறந்தாங்கியில் நடைபெற்ற இலக்கிய விழா கவியரங்கில் முன்னிலை வகித்தபோது பாராட்டி சிறப்பித்தது)

உவமைக்கவிஞர் சுரதா வாழ்த்துரை

1992 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 75 ஆம் ஆண்டு விழா கவியரங்கம் சென்னை வாஹினி ஸ்டுடியோ  வாஸவி மகாலில் நடைபெற்றது, கவியரங்கத்தலைவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்கள். அறந்தைத் திருமாறனைக் கவிபாட அழைத்தபோது;

வெண்பொன்என்னும்வெள்ளியைக்காட்டிலும்
செந்தீயில்வெந்தசெம்பொன்சிறந்தது;
அல்லியைக்காட்டிலும்அரவிந்தம்என்னும்
பூத்தசெந்தாமரைப்பூவேசிறந்தது!
தெள்ளியதிருத்தக்கத்தேவரைகாட்டிலும்
அம்புபட்டிறந்தகம்பனேசிறந்தவன்!
கூழுக்குப்பாடினாள்கூன்கிழவிஅவ்வை
காசுக்குப்பாடினான்கம்பன்,நமது
அன்பிற்,குரியஅறந்தைத்திருமாறனோ
ஏதும்கேளாமல்இனாமாய்ப்பாடுவார்!
வீட்டிலும்தமிழ்ப்பணி!வெளியிலும்தமிழ்ப்பணி!
ஏட்டிலும்தமிழ்ப்பணி!இவற்றைத்தவிர
நம்மவர்க்குமுண்டோவேறுநற்பணி!
என்றுகேட்கும்இந்தக்கவிஞர்
அறந்தைத்திருமாறன்பாடுவார்இப்போ

கவிப்பேரரசு கண்ணதாசன் வாழ்த்துரை

நண்பர் அறந்தைத்திருமாறன் அவர்களது கவிதை, யாப்பு முறை தவறாமல் அமைந்துள்ளது. எண்சீர் விருத்தம் ஓசையோடு இலங்குகிறது.
விதவை மறுமணம் பற்றிய சுவையான கருத்து!
சுவையான கருத்து!
சுவையான கவிதை! சுகமான தமிழ்!
வாழ்க கவிஞர்!

அன்பு
கண்ணதாசன்


கவிஞர் வாலியின் வாழ்த்துரை

கவிமாமணி திரு. அறந்தைத்திருமாறனின் அமுதத் தேனருவியில் அமிழ்ந்து நீராடி மகிழ்ந்தேன்

வண்ணத்தமிழ் அவருக்கு வசப்பட்டிருக்கிறது.
எண்சீர் விருத்தங்களின் இயல்பான முற்றெதுகைகளும் மோனைகளும், மரபுவழி மருவி நிற்பதோடன்றி
அனைத்துக் கவிதைகளிகளும்,
உருவகம், உவமை, உள்ளீடு, அனைத்தும்
கொடிகட்டிப் பறக்கின்றன.
பேராசிரியர். டாக்டர் சி.இலக்குவனார் சிறப்புரையில் சொல்லியது போல்..
அகத்தைத் தைக்கும் இனிய பாடல்களேயாம்.
அறந்தைத்திருமாறனின் பாடல்!
சுருங்கச் சொன்னால் அறந்தாங்கிக் கவிஞரின் எழுத்து அறந்தாங்கி நிற்கிறது.
ஆதாலால்தான் “சுரதா” மற்றும் “கண்ணதாசன்” “வா.மு.சேதுராமன்” போன்ற பெருங்கவிஞர்கள் திருமாறன் அவர்களது தீதறு புலமையைச் சிந்தை புல்லரிக்கப் பாராட்டி இருக்கிறார்கள். பல்வேறு தலைப்புகளில் பாடப்பெற்ற பனுவல்கள் எல்லாமே விழுமிய செழுமிய இறைச்சப் பொருள் தாங்கி நிற்கின்றன.
எதைத்தொட!!
எதை விட!!!
கற்கண்டின் எப்பக்கம் கைக்கும்
எல்லாப் பக்கமும் அண்ணிப்பதுபோல்
இந்தக் கவிதை நூலின்
எல்லாப் பக்கங்களும்
அண்ணிக்கின்றன.
தமிழுக்கு இவரால் தகவு சேருகிறது.
என்பதை ஊராறிய உலகறிய உரைப்பேன்.
கவிமாமணி திரு.அறந்தைத் திருமாறனுக்கு
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
தனித்தனியாக இன்னஇன்ன கவிதை
என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டிய
பிரமேயம் ஏற்படவே இல்லை.
எல்லாக் கவிதைகளுமே
பாடுபொருளாலும்,
பாடுவோர் திறனாலும்,
மெருகேறி நிற்கின்றன.

மீண்டும் கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

(வாலி)

பாட்டுக்கவிக்கு சீட்டுக்கவி!

காவியமே! கவிக்கடலே! அமுத ஊற்றே!
கம்பனுக்குப் பின்வந்த கவிதைக் கோவே!
பாவியமே! பைந்தமிழே! பண்பே! அன்பே!
பாடலினால் மாந்தருளம் மலர்ந்த பூவே!
ஓவியமே! உணர்வுகளை உருவம் காட்டும்
ஒப்பற்ற தனித்திறமைச் சொல்லேர் வாலி!
மேவியதே னருவிநூல் தந்தேன்! வந்தேன்!
மிக்கவரே! அணிந்துரைதான் விரைந்து தாரீர்!

நினைவூட்டும்

(அறந்தைத்திருமாறன்)

சு.திருநாவுக்கரசர், எம்.ஏ.,பி.எல்.,அன்புரை

(மத்திய & மாநில முன்னாள் அமைச்சர்)

அறந்தாங்கியில் பெருமைக்குரிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் ஜமால் மைதீன். தமிழ்ப்பற்றின் காரணமாகவும், திராவிட இயக்க ஈடுபாட்டின் விளைவாகவும் தனது பெயர் அறந்தைத் திருமாறன் என்கின்ற அளவில் பிரபலப்படுத்தப்பட்டு அறந்தையின் உமறுப் புலவராகத் திகழ்பவர் கவிமாமணி அறந்தைத் திருமாறன் அவர்கள். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளாக நான் இச்சகோதரரை அறிவேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக என் உடன் பிறவாச் சகோதரராக, உற்ற தோழராக அரசியலில் உடன் பயணம் செய்யும் தோன்றாத் துணைவராக ஏற்றத்தாழ்வுகளிலும் தோளோடு தோள்நின்று இணை பிரியாமல் பாடுபட்டு வருபவர்.
பேரறிஞர் அண்ணாவை அண்ணனாகவும், அரசியல் ஆசானாகவும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை எல்லாமுமாகவும் இனிய தலைவராகவும் ஏற்று அவர்களின் பசுமையான நினைவுகளை நெஞ்சில் பதிய வைத்து வாழ்பவர் இக்கவிஞர்.
அறந்தாங்கியிலும் சென்னையிலும் மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளிலும் இவர் கவிதை பாடக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். படிப்படியாக தனது பொதுவான படிப்பறிவாலும் பட்டறிவாலும் புத்திக் கூர்மையாலும் இயற்கையாகக் கவிபாடத் தொடங்கி புகழ்பெற்ற இவர் ஒரு பிறவிக் கவிஞர்
கவியரசர் கண்ணதாசன்
“நண்பா அறந்தைத்திருமாறன் அவர்களது கவிதை யாப்புமுறை தவறாமல் அமைந்துள்ளது. எண்சீர் விருத்தம். ஓசையோடு இலங்குகிறது. சுவையான கவிதை சுகமான தமிழ்” என்று கவியரசர் கண்ணதாசன் எடுத்துக் கூறியுள்ளது வசிஸ்ட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்ட பெற்ற போன்றது.
உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்
“வீட்டிலும்தமிழ்ப்பணிவெளியிலும் தமிழ்ப்பணி”
என இவர் தமிழ்ப்பணியைப் போற்றியுள்ளார்.
பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் அவர்கள்
“சிறந்ததைக்கவிதை செய்தார்
செரிந்ததைக்கவிதை செய்தார்”
எனக்கூறி சிறப்பித்துப் புகழ்ந்துள்ளார்.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள்
மண்பதையினில்அறந்தை யாரின்
பாக்களோநிலைத்தே ஓங்கும்.
கோலத்தின்அழகைப் போலும்
கொள்கையின்முடிவைப்போலும்
ஞாலத்தில்திருமா றன்நன்
நடைக்கவிவாழ்க
என்று வாழ்த்தி ஆசி வழங்கியுள்ளார்.
புகழ்மிக்க இப் பெருங்கவிஞர்கள் அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட கவிமாமணி திரு. அறந்தைத் திருமாறன் அவர்களது அமுதத் தேனருவி எனும் இக்கவிதைகளின் திரட்டு தேனில் கலந்த பலாச் சுவையாய் இனிக்கிறது.
எழுபது கவிதைகள் அத்தனையும் முத்துக்கள். பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பொருட்களில் பல்வேறு சுவையுடன் அமைந்துள்ள பஞ்சாமிர்தம் இவர் தம் கவிதை நூல்.
பேரரறிஞர் அண்ணாவின் புகழை இமயத்தில் ஏற்றும் கவிஞரின் வரிகள் இதோ.
கூரம்புகுத்தீட்டிபடைக்கலன்கள்
கொண்டெதிரேவருகின்றபகைவன்கூட
பேரன்புகொண்டவனாய்மாறிப்போவான்
பேரறிஞர் அண்ணாவின் பேச்சுக் கேட்டால்
***
கூன்விழுந்ததமிழகத்தை நிமிரச் செய்தார்
குருட்டுமுறைஐதிகத்தைக் கொளுத்திப் போட்டார்
***
நாடெல்லாம்தமிழன்போய் வாழுகின்றான்
நாடில்லைதமிழனுக்குத் தமிழ்நா டென்று
நயமுடனேதமிழ்நாடன் றாக்கித்தந்தார்
***
பிறப்பைப்பற்றி:
காஞ்சிநகர் வீதியிலே பலகை தன்னில்
கடுஞ்சொல்லால் எழுதியதை;அகழ்வார் தாங்கும்
பூஞ்சோலை நிலம்போல தாங்கிக்கொண்ட
புனிதரதால்அரசியலில் இமயம் என்பேன்.
சுட்டுவிரல் நீட்டுகிற அண்ணா சொல்லில்
சொக்காதார் யாரதனால்இமயம் என்பேன்.
என்பது போன்ற வலிமை மிக்க அண்ணாவின் அடையாளங்களைச் சுட்டும்விதம் கொட்டும் அருவியோ சொற்களின் ஓட்ட நயமோ என வியக்க வைக்கிறது.
மீட்டாத புதுயாழ்
கோவிலை;அவள்கணவன் இல்லை; அந்தக்
கோதைக்கு வாழ்வில்லை; இன்ப மில்லை;
பூவில்லை;பொட்டில்லை மஞ்சள் இல்லை;
புதுவண்ணப் பூப்போட்ட சேலை இல்லை
***
காரிகைதான், கனிக்கொத்து, கன்னற் சாறு.
***
மோகதாகத்தை மீட்டுகிற இளமை கொண்ட
தளிர்மேனி: இளமொட்டு: நங்கை நல்லாள்.
***
தளிராதா முற்போக்கு
விதவைக்கு மறுமணம் எந்நாள்?
அந்நாள்தான் நன்னாள்!
***
என்கிற கவிஞரின் மனிதாபிமானம் நிறைந்த சிந்தனை வரிகள் மனிதகுலம் திருந்தவும் மாறிடவும் எழுதப்பட்டவை இவை அன்றோ.
மான்நின்றாள்: நான்சென்றேன் விழிவீச் சாலே
மதிமறந்து நான்நின்றேன்: இதழ்வி ரித்தாள்
ஏன்சென்றேன் ஏன்நின்றேன் அறியா னாகி
ஈதேனில் வீழ்ந்ததுபோல் நிலையம் கொண்டேன்.
என்பது போன்ற காதலுணர்வை உணர்த்தும் விதம் கன்னலா கனிச்சாறா என சுவை கூட்டுகிறது.
பாறைக் குள்ளே தேரை தூங்குது
பட்டுப் பூச்சியில் நூலும் தூங்குது
பஞ்சுக் குள்ளே ஆடை தூங்குது
பகுத்தறி விற்குள் புதுமை தூங்குது
என்று, ஒன்றுக்குள் ஒன்று தூங்குவது பற்றி சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை அள்ளி விதைத்திருக்கிறார்.
‘எழுத்தசையைச் சீர்தளையை எதுகையோடு & மோனைகளை அழுத்தமுடன் கற்றறியேன்’ என்கிறார் கவிஞர். ஆனால் இவரது கவிதைகள் அனைத்தும் இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு எதுகை மோனையுடனும.
உவமைகளுடனும், சொல் அலங்காரத்துடனும் இயல்பாக அமைந்து படிக்கப்படிக்கச் சுவையூட்டுகிறது. சுவை கூட்டுகிறது.
எல்லாக் கவிதைகளும் இனிய கற்கண்டுகள். ஒவ்வொன்றாய் எடுத்துச் சுவைத்து விவரித்தால் பக்கங்கள் கூடிடும் அதிகமாக. எனவே தந்தமிழ்ப் பற்று நிறைந்த அனைவரின் கரங்களிலும் தவழ வேண்டிய, படித்துச் சுவைக்க வேண்டிய அமுதத்தேனருவி இந்நூல். தமிழ்த்தாயின் மணி மகுடத்தில் சூட்டப்பட்ட கூடுதல் வைரக்கல் இந்தக் கவிதை நூல்.
திரு.அறந்தைத்திருமாறன் சிறந்த கவிஞர் மட்டுமின்றி சிறந்த பண்பாளர், பாசம் நிறைந்த சகோதரர். இன்சொல் நிறைந்தவர். இனிமை நிறை முகத்தினர். புன்சிரிப்போடு திகழ்பவர். பூப்போன்ற இதயத்தவர். அனைவருக்கும் நல்லவர். அன்பிற்சிறந்தவர்.
வாழ்க நம் கவிமாமணி அறந்தைத்திருமாறன். இதுபோல் மேலும் தருக பல கவிதை நூல்கள்

அன்புடன்

(சு.திருநாவுக்கரசர்)

கவியரங்கத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்

ஆண்டமொழிச்சிறப்பைஅழகுதமிழ்மரபுதனை
மீண்டும்நிலைநிறுத்தமேடைக்குவந்தவரே!
வில்லெடுத்துப்போர்தொடுக்கும்வீரமறவர்போல்
சொல்லெடுத்துப்போர்தொடுக்கும்சுழிமுனையைக் கற்றவரே!
மாவரங்கம்பலகண்டமாத்தமிழின்சீர்கொண்ட
பாவரங்கத்தின்தலைமைப்பாங்குதனைஏற்றவரே!
இமைத்தவிழிதிறப்பதற்குள்ஏழாயிரம்கவிதை
அருந்தமிழிலியற்றுமாற்றல்அத்தனையும்பெற்றவரே!
விட்டிழுத்தமூச்சுவெளியேறும்முன்னாலே
கொட்டிக்குவித்திடுவீர்கோடிக்கவிதைகளே!
தட்டிஎழுப்புவதில்தமிழுணர்வைஊட்டுவதில்
திட்டமிட்டுப்பாடுவதில்திறன்மிகுந்தபெருங்கவிக்கோ
முப்பழத்தின்சுவைத்திறல்கள்வாமுசேதுராமன்தன்
செப்பும்கவிதையிலேசெரிந்திருக்கும்காண்போமே!
மன்றத்தில்மணியோசைஇவரின்பேச்சு!
மணிமுடிதான்தமிழுக்குஇவரின்ஆற்றல்!
குன்றத்துவிளக்காகஇலக்கியத்தேன்
குடங்குடமாய்வார்த்தளிக்கும்தமிழின்வள்ளல்!
என்றைக்கும்இவர்தொண்டுதமிழுக்குண்டு!
இவரறியாநூலில்லைதேர்ந்ததேனீ!
கன்றுக்குத்தாய்மடிதான்சொர்க்கம்,இங்கே
கவிப்பெருங்கோதான் எங்கள்கவிதைசொர்க்கம்!
Back to Top