Skip to content
இனிஎவரும் | அணிமாறி | ஆட்சிக் | கட்டில் |
ஏறிடலாம்; | தமிழ்நாட்டில் | ஏழை | பெற்ற |
கனிபோன்ற | திட்டத்தை | நிறுத்தி | டாமல் |
கண்டிப்பாய் | தொடர்ந்ததனை | செயத்தான் | வேண்டும்! |
நனிமிக்க | சாணக்யன் | அர்த்த | சாஸ்த்ரம் |
நவிலுகிற | ஆட்சிமுறை | இதையே | சொல்லும்! |
எனக்கென்ன | என்றிருந்தால்; | ஆட்சி; | வீழ்ச்சி |
எவ்வழியோ | நடந்திடலாம்; | வரலா | றுண்டு! |
| | | |
கொலைகளவு; | கற்பழிப்பு; | ஜாதி | மோதல் |
கட்டப்பஞ் | சாயத்து; | கந்து | வட்டி |
தலைமுறையை | அழித்தொழிக்கும் | குடிப்ப | ழக்கம்! |
தனைமறக்கும் | அபின்கஞ்சா | போதைப் | பாதை |
நிலைகுலைக்கும் | கடத்தல்கலப் | படப்ப | துக்கல் |
நெறிதவறும் | நீதிமுறை | கள்ள | நோட்டு |
விலைபோடும் | கொத்தடிமை | சிறார் | கொடுமை! |
வறுமையினைப் | பஞ்சத்தை | ஒழிக்க | வேண்டும்! |
| | | |
மத்தியிலே | ஆட்சிமொழி! | நீதி | மன்றில் |
வழங்குமொழி | தமிழ்வேண்டும்! | சென்னை | தன்னைச் |
சுற்றிலுமே | துணைநகரம் | அமைக்க | வேண்டும்! |
திருக்குறள்தே | சியநூலாய் | ஆக்க | வேண்டும்! |
வற்றாத | நதிகளையே | ஒன்றாய் | ஆக்கி |
வளம்மிகுந்த | தமிழகமாய் | உயர்த்த | வேண்டும்! |
வெற்றுரைஏன் | மெட்ரோரயில் | சேதுத் | திட்டம் |
வியக்கும்வகை | செயல்படுத்தி | ஆள | வேண்டும்! |
| | | |
மின்சாரம் | பெருக்கிடவே | திட்டம் | வேண்டும்! |
மிகுமின்சார | ரம்பிறர்க்கு | விற்க | வேண்டும்! |
தென்சாரல் | மலையோரம் | காற்றா | லைகள் |
திசையெங்கும் | அனல்புனல்சூ | ரியமின்சாரம் | |
தன்சாரம் | பார்க்காமல் | பெருக்க | வேண்டும்! |
தகுதிமிகு | பெருந்தொழிலின் | அதிபர்; | மற்றும் |
பொன்சாரம் | கோபுரத்தில் | போர்த்தும் | தக்கார் |
போன்றவரை | முதலீட்டார் | ஆக்க | வேண்டும்! |
| | | |
காவிரிநீர்த் | தாவாவைத் | தீர்க்க | வேண்டும்! |
கல்வியில் | சமச்சீர்தான் | ஓங்க | வேண்டும் |
மேவிய”தை” | முதலே | தமிழ் | ஆண்டு |
மேலும்பல | காட்டாற்றில் | அணைகள் | வேண்டும்! |
தாவிவரும் | மழைநீரை | ஏரி | குளத்தில் |
தடுத்தாளக் | கரையுயர்த்த | வேண்டும்; | மேற்கே |
பாய்நதியைக் | கீழ்திசையில் | திருப்ப | வேண்டும்! |
பரிந்துரையால் | பெரியார்அணைத் | தீர்வு | வேண்டும்! |
| | | |
கடற்கரையில் | நதிக்கரையில் | கூவம் | ஓரம் |
காலமெலாம் | வாழ்வோரின் | நிலையு | யர்த்தி |
இடர்பாடு | இலாநிலையில் | வாழு | தற்கு |
ஏற்றதொரு | வழிகாண | வேண்டும்; | உழவர் |
தொடர்வருவாய் | பெற்றுயர்ந்து | வாழத் | தக்க |
திட்டங்கள் | வகுத்திடவும் | வேண்டும்; | நாட்டை |
அடர்வருவாய் | மாநிலமாய்த் | தொழில்கள் | கூட்டி |
ஆண்டிடவும் | வேண்டும்என் | வேண்டு | கோளே! |
| | | |
அதிகாரம் | “அதி” | “காரம்” | ஆய்வி |
அகங்காரம் | ஆணவங்கள் | ஓங்கி | டாமல் |
விதிமீறல், | லஞ்சமொடு, | ஊழல் | தன்னை |
விளைக்காமல் | அரசுவழி | தொடர | வேண்டும்! |
விதிப்பயனே | என்றிருந்த | காலம் | போச்சு |
விம்முகிற | நிலை; | ஏழை | பெறுவா |
கொதிப்படக்க | வல்லவர்கள் | எவரும் | இல்லை! |
குறியிடுவார்! | வாக்களிப்பார்! | ஆட்சி | மாறும்! |
| | | |
வேண்டுதல்வேண் | டாநிலையை | ஏற்றி | டாமல் |
விருப்புவெறுப் | பிலாநிலையை | போற்றி | டாமல் |
தூண்டுதல்செய் | அறநெறியை | அறிஞர் | கூற்றைத் |
துச்சமென | இகழ்ந்ததனால்; | இடிப்பா | றின்றி |
மாண்டழிந்த | ஆட்சிபல | உண்டு; | இதுதான் |
வரலாறு; | ஆள்பவர்கள் | உணர | வேண்டும்! |
ஆண்டழிந்தான் | இராவணனே! | விபீச | னன்தன் |
அறிவுரைகள் | ஏற்கவில்லை; | முடிவு | என்னே? |
நெல்லொன்று | முளைக்குமே; | கிளைஏழு | விரிக்குமே |
கதிரொன்றில் | நூறுநெல்; | கிளைஏழும் | விளைக்குமே! |
சொல்லொன்று | விரியுமே; | பொருள்நூறு | சிரிக்குமே! |
செம்மொழியாம் | நம்தமிழின் | சிறப்பதிலே | இருக்குமே! |
எள்ளியொரு | குப்பையிலே | எடுத்தெரிந்த | கொட்டையுமே |
தளிர்த்தங்கு | வளர்ந்தொருநாள் | மாங்கனிகள் | தருதல்போல் |
நல்லிதய | மில்லாத | நரிக்கூட்டம் | நம்தமிழை |
அள்ளியெறிந் | தழித்தார்கள் | இதுதானே | வரலாறு! |
ஆரியர்கள் | களப்பிரர்கள் | வடுகரொடு | மராட்டியர்கள் |
அடுத்தடுத்து | இசுலாமியர் | ஆங்கிலேயர் | தொடர்கதைபோல் |
சீரியநம் | தமிழழித்து | அவரவர்கள் | மொழிதனையே |
சிம்மாசனம் | ஏற்றியுமே | செந்தமிழைப் | புறக்கணித்தார்! |
மாறியது | அவர்களது | ஆட்சியதி | காரங்கள் |
மாறவில்லை; | மாற்றமில்லை; | அழிவில்லை | தமிழுக்கு |
தேறியது; | செந்தமிழும் | செம்மொழியாய் | உலகறிய |
செழித்ததுவும்; | வளர்ந்ததுவும்; | தழைத்ததுவும் | தமிழ்தானே! |
தொல்காப்பியர் | இளங்கோமுதல் | ஈரடியார் | நாலடியார் |
நாயன்மார் | சித்தர்முதல் | நற்சங்கப் | புலவர்களும்! |
ஒல்காப்புகழ் | கம்பரம்பி | காபதியொட்டக் | கூத்தர் |
வில்லியோடு | நக்கீரர் | புகழேந்தி | அவ்வையார் |
திரிவட | ராசப்பர் | சுப்ரதீபக் | கவிபோல்வார் |
அரிதான | தமிழ்காத்து | அரியணையில் | ஏற்றினார்கள்! |
தென்னாட்டு | மன்னர்பலர் | புலவர்களின் | புரவலராய் |
எந்நாளும் | காத்ததனால் | செந்தமிழும் | செழித்ததன்றோ! |
காற்றடித்தால் | நாணலது | கண்டிப்பாய் | ஒடியாது! |
கயவர்கள் | சூழச்சியினால் | கன்னித்தமிழ் | அழியாது! |
சீற்றமிகு | “கடற்கோளில்” | சிக்கிப்பின் | மீண்டதுவே |
முடத்திருமா | றன்மூலம் | கடைச்சங்கம் | கண்டதுவே! |
முதற்சங்கம் | இடைச்சங்கம் | மூழ்கினும் | தமிழ்மட்டும் |
வாழ்கிறது | கன்னியாக | வற்றாத | இளமையோடு |
மொழியடிமை | கொள்ளுதற்கு | முனைந்தார்அறு | பத்தைந்தில் |
முழுமூச்சில் | பலபேர்கள் | உயிர்தந்து | தமிழ்காத்தார்! |
சங்கத்தில் | வளர்ந்ததமிழ்! | தாய்மடியில் | தவழ்ந்ததமிழ்! |
சிங்கத்தின் | நடைபோட்டுச் | சிம்மாசன | மிருந்த |
பொடுங்கருவி | எனப்புலவர் | பொன்னாவில் | தழைத்ததமிழ்! |
புதுமையெழில் | கன்னியெனப் | பூத்திருக்கும் | இனிய |
மங்காத | செம்பொன்னாய் | மணிமுத்தாய் | ஒளிகாட்டி |
எங்களது | வாழ்வோடு | இணைந்திட்ட | சடர்மணியே! |
திங்களிளம் | பருதிகாற்று | வானமொடு | பூமிபோல |
செந்தமிழே | நீ | வாழ்க! | செம்மொழியே |
கதிரும் | கதிரால் | கடலைப் | புணர்ந்திட |
கார்முகில் | பிறந்ததுவே | மழைதரும் | |
கார்முகில் | எழுந்ததுவே! | | |
| | | |
கதிரின் | ஒளியைத் | தடுத்திடும் | குடையாய் |
மேகம் | முகிழ்ந்ததுவே | மண்மேல் | |
மேகம் | பறந்ததுவே! | | |
| | | |
ஓடிடும் | மேகமும் | மேகமும் | மோதிட |
ஓஙகி | ஒலித்ததுவே | இடியொலி | |
வாங்கி | ஒலித்ததுவே! | | |
| | | |
கூடிடும் | தோகை | மயில்கள் | இணைந்துமே |
ஆடிக் | களித்தனவே | இன்பம் | |
கூடிக் | களித்தனவே! | | |
| | | |
வானம் | பொழிந்தது | பூமிகு | ளிர்ந்தது |
வயல்கள் | நிரம்பினவே | ஏரிகள் | |
வயிறு | நிரம்பினவே! | | |
| | | |
தானமும் | தவமும் | தர்மம் | தழைத்திட |
வானம் | பொழிந்ததுவே | வெம்மை | |
வஞ்சம் | அழிந்ததுவே! | | |
| | | |
காளைகள் | பூட்டினர் | கழனிகள் | ஓட்டினர் |
உழவர் | நடந்தனரே | உழைக்கும் | |
உழவர் | நடந்தனரே! | | |
| | | |
கலயங் | களேந்தினர் | கழனியில் | கன்னியர் |
கஞ்சி | கொணர்ந்தபடி | புல்வெளிப் | |
பஞ்சில் | நடந்தபடி! | | |
| | | |
ஆடியும் | பாடியும் | ஓடியும் | உழைத்தனர் |
அன்பில் | நனைந்தபடி | தமிழரின் | |
பண்பில் | நிலைத்தபடி! | | |
| | | |
ஊற்றையும் | சேற்றையும் | நாற்றையும் | இணைத்தே |
பயிரை | வளர்த்தனரே | நாட்டின் | |
உயிரை | வளர்த்தனரே! | | |
| | | |
பாடிடும் | பூங்குயில் | இன்னிசை | தென்றலில் |
ஆடி | வளர்ந்ததுவே | பயிரும் | |
நாடி | வளர்ந்ததுவே! | | |
| | | |
புதையல் | போலவே | கதிரின் | கருவரப் |
பொதிகள் | கட்டினவே | பயிரின் | |
வயிறும் | முட்டினவே! | | |
| | | |
உதய | மாகும்ஒளி | உலகில் | நீள்வபோல் |
கதிரும் | நீண்டதுவே | அங்கே | |
கருணை | ஆண்டதுவே. | | |
| | | |
ஞானம | நிறைந்தவர் | தானடங் | கினர்போல் |
நாணி | இருந்ததுவே | கதிர்தலை | |
கோணி | இருந்ததுவே! | | |
| | | |
கூனல் | கிழவரின் | வானவில் | முதுகென |
குலைகள் | வளைந்தனவே | நெல்மணி | |
ஒலிகள் | எழுந்தனவே! | | |
| | | |
காணி | கொழித்தது | வீடு | நிறைந்தது |
“பூ”மகள் | தந்தனளே | தந்தனளே | பொன்நிகர் |
நென்மணி | தந்தனளே1 | | |
| | | |
வயல்கள் | விளைந்தன | விளைந்தன | வயல்கள் |
தைமகள் | தந்தனளே | தைதையென | |
தைமகள் | வந்தனளே1 | | |
| | | |
வறுமை | ஒழிந்தது | செழுமை | பிறந்தது |
வாழ்வு | மலர்ந்ததுவே | விவசாயி | |
தாழ்வு | மறைந்ததுவே! | | |
| | | |
தையும் | பிறந்தது | வழியும் | பிறந்தது |
உய்யும் | வழிகாண்போம் | உலகோர் | |
உயரும் | வழிகாண்போம்! | | |
| | | |
பொங்கலோ | பொங்கல் | பொழிக | என்றுமே |
பொங்கலும் | பொங்கட்டுமே | எங்குமே | |
மங்களம் | தங்கட்டுமே! | | |
Back to Top