Skip to content
மன்னவனே! | என்னுளத்தைக் | கொள்ளை | கொண்ட |
மாதவனே! | காமனென | வந்த | தேவே! |
சின்னவளைப் | பார்வைவலை | தன்னால் | சுற்றி |
சிறைபடுத்தி | உன்வலையில் | போட்ட | கண்ணா! |
பெண்னெனக்குப் | பெருநிதியாய்க் | கிடைத்த | தென்னா! |
பேதையெனைச் | சீதையாக்க | வந்த | ராமா! |
உன்னைநினைத் | துருகுவது | எந்தன் | வேலை |
ஓடிவரக் | கூடாதா | இந்த | வேளை! |
வரும்தென்றல் | காற்றுனது | பெருமை | சொல்லும் |
வளர்பச்சை | தத்தையதும் | அதையே | சொல்லும் |
பெரும் | ஒளிசேர் | கதிருமுந்தன் | புகழைச் |
பிறைநிலவும் | மணமலரும் | அதையே | சொல்லும் |
கரைபுரளும் | காட்டாற்று | வெள்ளம் | போலே |
காரிகையென் | காதலுணர் | வெல்லை | தாண்டி |
வருவதினை | அறியாயோ | வாவா | கண்ணா! |
வாழ்வெனக்குத் | தரவேண்டும் | மன்னா | வாவா! |
நீலநிற | கண்பார்த்துப் | பூத்துப் | போச்சு! |
நின்றுஎதிர் | பார்த்துக்கால் | ஓய்ந்து | போச்சு! |
மீளமுடி | யாதமனம் | தவித்துப் | போச்சு! |
மெல்லியலென் | மேனிதுரும் | பாகிப் | போச்சு! |
வாழநினைத் | திருந்துமனம் | ஏங்கிப் | போச்சு! |
வரவிலையேல் | நின்றுவிடும் | உடலில் | மூச்சு! |
பாழ்மனத்தைத் | தாங்கவுடன் | வந்தா | லாச்சு! |
பதைத்திறந்து | உயிர்போனால் | உனக்கே | ஆச்சு! |
உறவாட | வாகண்ணா | இரவோடும் | முன்னாலே |
ஒருகோடி | இன்பம் | இங்கே! | |
உறங்காமல் | விரகமொடு | உனக்காகக் | காத்திருப்பேன் |
வரவேண்டும் | வாவா | கண்ணா! | |
தரவேண்டும் | நீஇன்பம் | பெறவேண்டும் | நானதனை |
வரம்,வேண்டிக் | கேட்கிறேன் | கண்ணா! | |
பொறுப்பேனோ | மனமில்லை | மறுத்துநீ | போவாயோ |
வெறுத்துயிரை | விடுவேன் | கண்ணா! | |
கண்ணுக்குத் | தெரியாத | இமையாக | நீயிருப்பாய் |
காத்திருப்பேன் | வாவா | கண்ணா! | |
கருமைநிற | மானாலும் | காரிருளில் | நானறிவேன் |
கண்மறைந்து | ஏய்க்காதே | கண்ணா! | |
தென்றலெந்தன் | தோள்தொடவே | உனையெண்ணி | நான்மலர்ந்தேன் |
திண்டாட | விடலாமா | கண்ணா! | |
பெண்பாவம் | பொல்லாது | என்னைநீ | கொல்லாதே |
பொறுமையெனக் | கிலையே | கண்ணா! | |
அத்தானைத் | தேடிவந்த | மானே | -ஒன்றாய் |
ஆலாலம் | பாடலாம்வா | தேனே | |
முத்தாரப் | பல்வரிசை | காட்டி | -என்னை |
பித்தாக்கி | னாய்காதல் | ஊட்டி | |
| | | |
| | | |
தடையாரு | விடைகூறு | தமிழ்தாங்கி | வருவேன் |
இடையூறு | இனியேது | வா | -இளங் |
கொடிமுல்லை | இடைநெளிய | படைவெல்லும் | விழியோடு |
விடிவெள்ளி | யொளிகூட்டி | வா | -என்னுடன் |
விளையாட | உறவாட | வா | |
| | | |
| | | |
மாஞ்சோலை | குயில்கூவ | மயில்கூடி | நடமாட |
பூஞ்சோலை | இளங்காற்றே | வா | -அமுத |
சாந்தத்தை | முகத்திலே | காந்தத்தைக் | கண்ணிலே |
சேர்ந்திணைத்த | சிலையே நீ | வா | – எழில் |
சித்திரப் | புதையலே | வா | |
| | | |
| | | |
இருகனியில் | முக்கனியின் | சுவைகூட்டித் | தருமழகே |
இன்பத்தேன் | சுவையூற்றே | வா | -அரும் |
திருக்குறளின் | பொருளாக | கவிகம்பன் | பாட்டாக |
சேர்ந்தசெந் | தமிழே நீ | வா | -என்னைச் |
சேர்ந்தென்றும் | துணையிருக்க | வா. | |
| | | |
காதல்வேகம் | கட்டுக்காவல் | மீறச்செய்யுது: | ஆசை |
கனிவுகொண்டு | இனிமைகாணத் | துடித்து | நிற்குது: |
ஈதல் | என்ற | தத்துவமே | இங்குவிளைந்தது! |
இறைவனாகி | அருள்சுரந்து | வளரச்செய்யுது! | |
மாலைவேளை | வந்ததுமே | மயக்கம்சேருது! | &இளமை |
மானைப்போல | துள்ளியாடி | இன்பம்தேடுது! | |
பாலைத்தேனை | சுவைகெடுத்து | நிலவுஇனிக்குது: | உணர்ச்சி |
பாட்டுத்தாளம் | பூட்டுச்சாவி | யாகத்துடிக்குது. | |
ஊரடங்கும் | வேளைகூட | விழித்திருக்குது: | கலப்பு |
உறவுக்காக | உலகத்தையே | இழுக்கத்துணியுது! | |
ஈரநெஞ்சில் | இளமைவேகம் | மின்னலாகுது! | தடுக்க |
எவரினாலும் | முடிவதில்லை | எல்லைக்காணுது! | |
கலந்துவிட்ட | உறவிலங்கு | அமைதிகாணுது! | வாய்கள் |
கதவடைத்த | இதயத்தாலே | பேச்சை | மறக்குது! |
எழுச்சிகொண்ட | உணர்ச்சியங்கு | உறைந்துவிட்டது! | காதல் |
இன்பமென்ற | கடலின்எல்லை | அலைகள் | பாடுது! |
| | | |
| | | |
காதல் | என்பது | மாயம் | – அது |
கண்கண் | மோதிய | காயம்! | |
மதுவை | மயக்கும் | மோகம் | -காதல் |
மறைந்து | போகும் | மேகம்! | |
வயது | கொடுத்த | தாகம் | – அது |
வரம்பு | மீறினால் | சோகம்! | |
விதியை | மாற்றும் | வேகம் | – காதல் |
விடைதான் | உணர்ச்சிப் | போகம்! | |
கண்பொருள் | நோக்காப் | பார்வை | – மறைக்கும் |
காதல் | தரும்திரைப் | போர்வை! | |
முன்படு | பொருளறி | யாது | – காதில் |
இருக்கப் | பறக்கும் | எண்ணம் | – அன்பின் |
இன்பம் | சுரக்கும் | கிண்ணம்! | |
உருக்க | உருகாத | உறவு | – காதல் |
உறவைத் | துறந்து | ஓடும் | – காதல் |
உறவு | ஒன்றையே | நாடும்! | |
சிறகு | ஒடிபடும் | துன்பம் | – ஏற்கும் |
தீபடு | துயரிலும் | இன்பம்! | |
உணர்ச்சி | உயிர்களின் | சொத்து | – அதில் |
ஒழுக்கம் | அடக்கம் | முத்து! | |
புணர்ச்சி | இறைவன் | வேதம் | – அதன்படி |
புரிந்து | வாழ்வதே | நீதம்! | |
சித்தாடை | கட்டிவந்த | சிட்டு | – அவள் |
சீனாவிலேயே | நெய்துவந்த | பட்டு! | |
வித்தாரம் | காட்டுகிற | மொட்டு | -அவள் |
மோகினிக்குத் | தங்கை; | தேன் வட்டு! | |
| | | |
| | | |
கட்டான | சிலையொத்த | மேனி | – அவள் |
காமனுக்கு | ஊற்றுதரும் | கேணி! | |
சுட்டாலும் | சுடர்வீசும் | சங்கம் | -வளர் |
ஜோதிவடி | வானதிவள் | அங்கம்! | |
| | | |
| | | |
துள்ளுவதில் | இவள்கண்ணோ | மீனு | -தூரத் |
தோற்றத்தில் | இவள்சாயல் | மானு! | |
சொல்வதென்ன | இவள்முகமோ | பானு | -வாய் |
சொல்வடித்தால் | கள்வடியும் | தேனு! | |
| | | |
| | | |
கண்ணிரண்டும் | கண்டவரைக் | கட்டும் | -அது |
காரிகையின் | பூரிப்பினால் | கிட்டும்! | |
எண்ணிரண்டு | வயதினையே | எட்டும் | -அவள் |
எழிற்கோலம் | முனிவரையும் | தட்டும்! | |
| | | |
| | | |
உரசும்போது | உணர்வு | வந்தது! | |
உற்றுப்பார்க்க | போதை | வந்தது! | வந்தது! |
திரைமறைந்த | காதல் | வந்தது! | |
தெவிட்டிடாத | இன்பம் | வந்தது! | வந்தது! |
காமம்வேலி | தாண்ட | வந்தது! | |
கட்டுப்பாடு | குறுக்கே | வந்தது! | வந்தது! |
நானம்மிஞ்சி | நழுவ | வந்தது! | |
நாற்குணமதை | தடுக்க | வந்தது! | வந்தது! |
தொட்டபோது | காந்தம் | வந்தது! | |
சுவைத்துப்பார்க்க | எண்ணம் | வந்தது! | வந்தது! |
கிட்டப்போக | அச்சம் | வந்தது! | |
கிறுக்குப்போல | மயக்கம் | வந்தது! | வந்தது! |
கட்டியணைக்க | ஆசை | வந்தது! | |
காலன்போல | பயமும் | வந்தது! | வந்தது! |
எட்டிப்போக | நிலைமை | வந்தது! | |
இடைவிடாத | ஏக்கம் | வந்தது! | வந்தது! |
| | | | |
| | | | |
அவள்:- | பார்த்து | ரசிக்கத்தான் | மேனி, | அள்ளிப் |
| பருகு; | காத்திருக்கு | கேணி; | |
| ஏங்கித் | தவிக்குதே | வாநீ! | என்னை |
| இருகை | தழுவுசுகம் | தாநீ! | |
அவன்:- | உறிஞ்சிக் | குடிக்கவா | தேனை! | – உந்தன் |
| உதட்டி | லிருக்குது | வீணே! | |
| புரிஞ்சு | அள்ளித்தா | மானே! | உனக்குப் |
| புதுப்புது | கதைதரு | வேனே! | |
அவள்:- | நடுங்கி | ஒடுங்குதே | மனது | – இது |
| நாலும் | தெரியாத | வயது! | |
| முடங்கிக் | கிடக்கமனம் | இல்லை | – ஒரு |
| முடிவு | காண்பதுதான் | எல்லை! | |
அவன்:- | தடுக்க | முடியாத | வேகம்! | – இது |
| தணிக்க | தணியாத | தாகம்! | |
| எடுப்பதும் | கொடுப்பதும் | போகம் | – இது |
| இறைவன் | உயிர்க்களித்த | வேதம். | |
அவன்:- | கட்டழகே | தென்றலுன்னைத் | தொட்டுவிட்டதா | – அந்த |
| காமன்மலர் | அம்புவந்து | பட்டுவிட்டதா? | |
| பேதையேநீ | போதைமீறி | ஏங்குவதென்ன | – அங்கே |
| பேதலித்த | நெஞ்சுகதை | கூறுவதென்ன | |
அவள்:- | ஆணழகில் | நான்மயங்க | அச்சம்வந்தது | – அதை |
| அடைந்துவிட | துணிந்தபோது | நாணம் | வந்தது |
| தேன்ததும்பி | இன்பமிங்கே | பொங்கிநிற்குது | – இதன் |
| தேவைதன்னை | தேவன்கூட | அறியவில்லையே | |
அவன்:- | அல்லிமலர் | வெண்மதிமேல் | ஆசைவைக்குது | – அந்த |
| ஆதவன்மேல் | தாமரையும் | பாசம் | வைக்குது |
| பூத்தமலர் | வண்டுக்காக | காத்திருக்குது | – இது |
| புதுக்கதையா | பழங்கதையா | முடிவு | இல்லையா |
அவள்:- | கட்டுப்பாடு | தடுக்குதுமனம் | கலங்கிநிற்குது | – என்னைக் |
| காவல்மீறி | எல்லைதாண்ட | ஆசை | தூண்டுது |
| இச்சையெந்தன் | லெட்சியத்தை | இடித்துநொறுக்குது | – மனது |
| இருக்கிறதா | சாகிறதா | எனத்தவிக்குது. | |
அவன்:- | பகலிரவும் | சேர்ந்தொருநாள் | ஆனதில்லையா | – நல்ல |
| பாலும் | தேனும் | கலந்துசுவை | சேர்த்ததில்லையா |
| ஆவதென்ன | போவதென்ன | முடிவுகாண்கிறேன் | – உணர்ச்சி |
| அணையுடைத்து | பெருக்கெடுக்குது | தயக்க | மேனடி. |
முந்தானை | மறைக்குதே | என்ன | என்ன! |
மூடிவைத்த | திரைக்குள்ளே | என்ன | என்ன! |
கொத்தான | செங்கனியா | என்ன | என்ன! |
குலுங்கிடும் | கோபுரமா | என்ன | என்ன! |
கள்ளிருக்கும் | தேன்குடுவை | ஆடுவ | தென்ன! |
கற்கண்டு | ரசக்கலவை | கூடுவ | தென்ன! |
உள்ளிருக்கும் | மெல்லுணர்வு | சிரிப்ப | தென்ன! |
ஒய்யாரம் | நாணமிட்டுத் | தவிப்ப | தென்ன! |
வில்லெடுத்த | மலர்மன்னன் | மன்ம | தனையும் |
விழியம்பு | புருவவில் | வீழ்த்திய | தென்ன |
மல்பிடிக்க | வந்தரதி | மயங்கிய | தென்ன |
மதியுமந்தக் | காட்சிகண்டு | தயங்கிய | தென்ன |
முன்னழகைப் | பின்னழகு | முந்தின | தென்ன! |
முக்கனியும் | சர்க்கரையும் | பிந்தின | தென்ன! |
வானவரும் | காணவந்த | கட்டழ | கென்ன! |
வார்த்தைதரக் | கண்ணதாசன் | வந்ததும் | என்ன! |
Back to Top