ஓரங்க நாடகம்

கண்ணில்பதிவாகும்மனத்தில்உருவாகும்
கனவின்நிழலாகும்எது– ஒரு
காந்தஇழுப்பாகிநீந்தத்தடுமாறி
கலங்கிநின்றிடுமேஅது!
பெற்றதாய்தந்தைசுற்றம்அறியாமல்
மறைவில்நடப்பதுஎது– மனத்
திரையைமூடிக்கொண்டுஓரவிழிநடத்தும்
ஓரங்கநாடகம்அது!
பூத்தஅழகு;மணம்காற்றில்பரப்பமனம்
ஏங்கித்தவித்திருப்பதெது– வரும்
அச்சம்நாணமெனும்மிச்சஉணர்களால்
அடங்கிக்கிடந்திடுமேஅது!
கொஞ்சிமொழிபேசிவஞ்சிஉறவாட
அஞ்சிநடக்கவரும்எது– அது
அவனைநினைந்தயிவள்மனத்தில்நிலைத்த அவன்
உறவுக்காதலென்பதது!

வாடிவிட்ட மலருக்கு தேனீ வருமா

கள்ளிருக்கும்உன்னிதழைவண்ணமலரே – வண்டு
கண்டுசுற்றிவட்டமிட்டதென்னமலரே!
உன்னழகைக்கண்டுவண்டுஉள்ளேவந்தா&உன்னில்
ஊறிவரும்தேன்குடிக்கஓடிவந்ததா!
காதலெனச்சொல்லுகிறார்என்னமலரே – கண்ணில்
கண்டபெண்ணைரசிக்கிறார்சொல்லுமலரே!
பேதமின்றிபலமலரில்தேனீஅமரும்-அந்தப்
பாதையிங்கேசரிதானாசொல்லுமலரே!
வாடிவிட்டமலர்தேடித்தேனீவருமா – அந்த
வாசல்வழிபறக்குமாசொல்லுமலரே!
கட்டுடலும்கெட்டழகுவிட்டபின்னங்கே – காதல்
மொட்டுவிட்டுமலருமாசொல்லுமலரே!
காதலென்னபருவத்தின்மயக்கமல்லவா – அது
மாறிஉருமாறிவயதேறிமீறினால்
ஆசைபாசம்அன்புநட்புகாதலெலாமே – ஒரு
கானலென்னும்மாயையாவதுண்மையல்லவா!
அம்பிகாபதிஅமராவதிசலீமொடு-அந்த
அனார்க்கலிமஜ்னுலைலாகண்டதுமென்ன
காதலென்றார்காதல்போயின்சாதலேயென்றார் அந்த
காதல் பாதையார் தொடர்ந்தார்; கடந்த துண்டுமா?

ஊட்டிகுளிர் ஊட்டு

காமினிகண்மணிநாமினிஓரணி
மாதுநீநீகனிதா!
தேடிநீகூடுநீஆடுநீபாடுநீ
நாடிநீஓடிநீவா!
காவிலேகனியொடுகனியிலேசாரெடு
தேனிலேஊறவிடுதா!
பூவிலேநிறமெடுமின்னிலேபொன்னெடு
நாவிலேதமிழெடுதா!
சந்தனச்சேரெடுதன்தனம்பூசிடு
வெந்தனல்போக்கிடுவா!
முந்திபடுதென்றலைமுந்தவிடுதூதுவிடு
அந்திபடுமுன்னமேவா!
ஊட்டிகுளிர்ஊட்டிவிடுஊடலினைஓட்டிவிடு
வாட்டுதுயர்நீக்கிவிடுவா!
பாட்டுமிளிர்ராகமாககூட்டுசதிதாளமாக
ஆட்டுவிக்கமுன்னெழுந்துவா!
அன்பெனும்துடுப்பெடுஆசைகடல்கடந்திடு
வெம்பிடாமலென்னைநம்பிவா!
தன்பொழில்குமுதமேஅமுதமேபைங்கிளி
தயங்கிடாமலென்னைத்தேடிவா!

பூ திறந்து கிடக்கு

அச்சமென்னடிநாணமென்னடிஅம்மாக்கண்ணு– அடி
மிச்சமென்னடிமீதமென்னடிசும்மாசொல்லு
ஆசைதீரஇன்பமுன்னால்கொடுக்கமுடியுமா– அட
ஆறுபோலஊறுறதைத்தடுக்கமுடியுமா.
கையைக்காட்டிகண்ணக்காட்டிஅழைக்கிறேபுள்ளே– ஒரு
காந்தமாகிஇரும்புஎன்னைஇழுக்குறேஉள்ளே
வண்டுவந்தாதேன்குடிக்கலாம்பூதிறந்ததுகிடக்கு- என்
வாசல்வரும்முழுஉரிமைஉனக்குத்தானேஇருக்கு
கொண்டுவந்துஆணழகைக்கொட்டித்தாரேன்கண்ணே
என்கோகிலமேமரகதமேசந்தேகம்ஏன்பெண்ணே
தைமாதம்வருகுதுங்கதாலிவாங்கிவாங்க-இந்த
தையல்உமக்காகத்தானேகழுத்தைநீட்டுவேங்க
செண்டுபோலதிரண்டஅழகுமயக்குதடிஎன்னை-அடி
சித்திரமேஎன்றென்றைக்கும்சேர்ந்திருப்பேன்உன்னை

நெருப்பும் கற்பும்

மாதந்ததுகன்னமல்லவோ!
மதிதந்ததுமுகமல்லவோ!
பூதந்ததுநிறமல்லவோ!
புதுமைதந்ததுஇளமையல்லவோ!
மின்னல் தந்ததுபார்வையல்லவோ!
மேகம்தந்ததுகூந்தலல்லவோ!
கன்னல்தந்ததுபேச்சுஅல்லவோ!
கருணைதந்ததுஇறைவனல்லவோ!
உதடுதந்ததுஊர்வசியல்லோ
தனம்தந்ததுமேனகையல்லோ
நகைதந்ததுரம்பையல்லவோ
நளினம்தந்ததுதிலோத்தமையல்லோ
நீலம்தந்ததுகண்களல்லவோ!
நெருப்புதந்ததுகற்புஅல்லவோ!
ஆசைதந்ததுஉறவுஅல்லவோ!
அன்புதந்ததுபாசமல்லவோ!
அச்சம்தந்ததுஅடக்கமல்லவோ!
நாணம்தந்ததுபெண்மையல்லவோ!
மடம்தந்ததுமரபுஅல்லவோ!
பயிர்ப்புதந்ததுபண்புஅல்லவோ!

ஆற்றை அடக்கும் கடல்!

பெண்:- காவியத்தலைவா!கவிதரவாவா
காதல்பூத்ததுவாவா– என்னை
தாவிஅணைத்துத்தளிருடல்தழுவி
ஓவியம்எழுதிடவாவா– உனையென்
உயிரில்கலந்திடவாவா!
ஆண்:- தங்கச்சிலையேதளிர்முகநிலவே
பொங்கும்அமுதேவாவா– அழகு
பூக்கும்கண்விழிபுகுந்துஎன்னைத்
தாக்கும்கணையேவாவா– தேன்குடம்
தந்திடுவந்திடுவாவா!
பெண்:- வாளும்வேலும்ஆளும்திறமே
வீரமேவெற்றியேவாவா– ஆசை
சூழும்மன்மதசுகம்தரவாவா
சொர்க்கம்பகிர்ந்திடவாவா– இதயம்
வாங்கிடத்தாங்கிவிடவாவா!
ஆண்:- குமுதமேமலரேஅமுதக்கலசமே
குங்குமப்பூவேவாவா– வளஞ்சேர்
செம்மொழித்தமிழின்தேன்சுவைநீயே
சிரிக்கும்முல்லையேவாவா– மனதுள்
பறக்கும்கிள்ளையேவாவா!
பெண்:- கோபுரகலசமேகுறையிலாத்தேரே
குன்றினில்ஒளிதரும்விளக்கே– சுக
மன்மதக்கணையேரதியெனக்கிணையே
பெண்மனம்சிலிர்க்குதுவாவா– காதல்
போதைமீறுதேவாவா!
ஆண்:- ஆற்றைஅடக்கும்கடலேவருகிறேன்
அன்பைஅடக்கும்உயிரேவருகிறேன்
போற்றும்பெண்மைப்புதுமையேவருகிறேன்
பெருமைதரவரும்உறவேவருகிறேன்
ஏற்றதுதருகிறேன்இன்றேவருகிறேன்

கன்னம் சிவந்தது

தோழி:- கன்னம்சிவந்ததுஏனடியோ– அதில்
கதைபடித்ததுயாரடியோ!
முன்னம்நடந்ததுஎன்னடியோ– அதை
மூடிமறைப்பதேன்சொல்லடியோ!
அவள்:- கண்ணிலேநெஞ்சிலேவாழ்பவரை– நான்
காட்டமுடியுமோசொல்லடியோ!
என்னிலேஒன்றாய்ச்சேர்ந்தவரை– நான்
எப்படிச்சொல்லுவேன்கூறடியோ!
தோழி:- நாணம்கூச்சம்போனதெங்கே– அந்த
நாயகன்செய்ததும்எதுஅங்கே
பாணம்மன்மதன்போட்டதெப்போ– நாங்கள்
பார்க்கவில்லையேஏதுதப்போ!
அவள்:- தப்புதாளம்ஏதுமில்லை– இதில்
சந்திரம்மந்திரம்தூதுமில்லை!
ஒப்பியஅத்தானைஎண்ணியெண்ணி– மெத்தை
உரசக்கன்னம்சிவந்ததடி!
தோழி:- தந்தைதாயைமறந்தனையோ– உந்தன்
தனயன்தங்கைஅறிந்திலையோ!
சிந்தைதடுமாறிகனவில்கள்வனை
அவள்:- உருவம்தந்ததும்உணர்வுதந்ததும்
பருவம்தந்ததும்இறைவனடி!
உன்னையும்அண்ணன்அப்பாஅம்மா
உற்றார்கேட்டாகாதல்வரும்!

சொக்குதடி என்மனசு

“பூ”வெடுத்துநீவரவோ!பொன்னெடுத்துநான்தரவோ!
“பா”வெடுத்துநீவரவோ!பண்ணெடுத்துநான்தரவோ!
“நா”வெடுத்துநீவரவோ!நல்லதமிழ்நான்தரவோ!
தேனெடுத்துநீவரவோ!தீருமட்டும்நான்பெறவோ!
வில்லெடுத்துபுருவத்தால்விழியம்பைவீசுறியே!
மல்லெடுக்கத்தயங்காதமார்பகத்தால்மயக்குறியே!
கல்லெடுத்துஅடிப்பதுபோல்கண்ணடித்துப்போடுறியே!
சொல்லிருக்கு;பேச்சு;இல்லைசொக்குதடிஎன்மனசு!
பேருக்குநீயாரோ!பிறருக்குநான்யாரோ!
ஊருக்குத்தெரியாது;உன்உறவு!என்உறவு!
சீரிருக்குநம்உறவில்;சிறப்பிருக்குயார்அறிவார்!
நேருக்குநேர்சேர்வோம்;நெருக்கமாய்வாகண்ணே!
கோவைக்கனிதின்னுதற்குக்கொத்தும்கிளிநான் வாரேன்!
பாவையேகன்னத்தைப்பத்திரமாய்வைத்திடடீ!
தேவையைநிறைவேற்றத்தேடிவாரேன்உன்னிடத்தில்!
தீர்வைநீதரவேண்டும்சிந்தாமல்சிதறாமல்!
கொஞ்சுமொழிஅஞ்சுகமேகோமளமே!ரஞ்சிதமே!
வஞ்சிமலரேயெனக்குவாழ்வுதரவருபவளே!
நெஞ்சில்எனைச்சேர்த்தவளே!நீக்கமறஏற்றவளே!
செஞ்செடுத்தசிலைவடிவே!செந்தமிழே!வாகண்ணே!
காரிருக்கும்நாள்வரைக்கும்கடலிருக்கும்நாள்வரைக்கும்
சூரியசந்திரரெல்லாம்சுழன்றிருக்கும்நாள்வரைக்கும்
ஊரிருக்கும்நாள்வரைக்கும் உறவிருக்கும்நாள்வரைக்கும்
பாரிருக்கும்நாள்வரைக்கும் பாகாலம்வாழ்ந்திருப்போம்!

ஆயிரம் கதை இருக்கு

அவன்:-செக்கச்சிவந்தநிறமிருக்கு!
சிரிப்பில்ஆயிரம்கதைஇருக்கு!
முக்கனிச்சாறாய்ச்பேச்சிருக்கு!
முழுநிலவாகமுகமிருக்கு!
அவள்:-சிங்கம் தந்ததுநடையழகு!
செந்தமிழ்தந்ததுசொல்லழகு!
தங்கம்தந்ததுகுணத்தழகு!
தந்தம்தந்ததுஉடலழகு!
அவன்:-மயிலும்தோற்குமுன்ஆட்டத்திலே!
மானும்தோற்குமுன்சாயலிலே!
குயிலும்தோற்குமுன்குரலினிலே!
குங்குமம்தோற்குமுன்உதட்டினிலே!
அவள்:-படையும்தோற்குமுன்நடையினிலே!
பழமை தோற்குமுன் உடையி னிலே!
விடிந்தே தெரியும் திறமை யெலாம்!
விடையினைக் கூறும் இளமை யெலாம்!
அவன்:-காதல் வந்தால் அன்பு வரும்!
அன்பு வந்தால் ஆசை வரும்!
ஆசை வந்தால் பாசம் வரும்!
பாசம் வந்தால் பழக வரும்!
அவள்:-எட்டஇருந்தால்மோகம்வரும்!
இணைபிரிந் தாலோ தாகம் வரும்!
கிட்ட இருந்தால் உறவு வரும்!
கிடைத்திட அரிய இன்பம் வரும்!

காமனுக்கும் எனக்கும் இல்லை வம்பு

கண்ணுறக்கம்போச்சுதடிகள்ளியே– உன்னைக்
காணத்தினம்துடிக்கிறேனேதுள்ளியே!
காத்திருக்கச்சொன்னாயேகன்னியே– நீஏன்
கண்டுகொள்ளவில்லையடிஎன்னையே!
ஆத்தங்கரைதோப்பினிலேகிள்ளையே– உன்னை
அணைத்திடவேஏங்குறேனேமுல்லையே!
பார்த்தவிழிபூத்ததடிவள்ளியே– என்னைப்
பார்த்தமலர்சிரிக்குதடிஎள்ளியே!
ஜோடிப்புறாகிளைதனிலேகொஞ்சுது– மான்கள்
சேர்ந்திணைந்துபுறாயினத்தைமிஞ்சுது!
நாடிமலர்தேடிவண்டுஉண்ணுது– உன்னை
நான்நினைத்தேன்மனதென்னவோபண்ணுது
காமனுக்கும்எனக்குமில்லைவம்பு – ஏனோ
கனைதொடுத்துவீசுறானேஅம்பு!
மாமனென்மேல்உனக்கிலையோஅன்பு – தனியே
வாடுகிறேன்;நீதருவாய்தெம்பு!
குயிலும்தன்துணையெண்ணிப்பாடும் – அந்தக்
குரல்கேட்டுப்பெண்குயிலும்நாடும்!
மயில்கடைமேகத்திற்காடும்– எனது
மனமோநீவரும்பாதைதேடும்!
பிடிவாதம்விட்டுவாஇங்கே- உன்னைப்
பார்க்காமல்வாழ்வதுநான்எங்கே!
வடிவழகேதேடுகிறேன்எங்கும் – நீயும்
வந்தால்தான்என்னுயிரும்தங்கும்
Back to Top