கள் குடிக்க வா

வண்ணமலர்பூத்திருக்குவண்டுவந்துகாத்திருக்கு
என்னவளேதேனெடுத்துஇன்பம்தரவா-கண்ணே
கன்னமுதவாயிதழில்கள்குடிக்கவா!
நேத்துஎன்னைப்பார்த்துவிட்டுநிற்காமே போனியேடி
காத்துநிற்கவிடுவதுதான்காதலொக்குமா-கண்ணே
காரணத்தைக்கூறடியோகண்ணுப்பக்கமா!
அன்னத்திடம்சொன்னதென்னஆருக்குநீதூதுவிட்டே
என்னக்கிட்டவரவில்லையேஎன்னகதையோ-கண்ணே
ஏக்கம்என்னைத்தாக்குதடிவண்ணக்கிளியே!
ஏபுள்ளேதூக்குனேனேஇளவட்டக்கல்லுரெண்டு
காளையைஅடக்குனேனேகாணவில்லையா– உன்னைக்
கட்டிக்கொள்ளஎன்னசெய்யகூறடிபெண்ணே!
கம்புச்சண்டைகத்திச்சண்டைகுத்துச்சண்டைமல்லுக்கட்டு
சேவச்சண்டைகடாச்சண்டைஜெயிக்கட்டுமா– இல்லை
ஆடுபுலிவேடமிட்டுஆடட்டுமா!
வானவில்லைக்கயிறாக்கிசந்திரனைசூரியனை
நட்சத்திரக்கூட்டத்தைக்கட்டிவரவா-இல்லை
வானுலகக்காமதேனைக்கூட்டிவரவா !
தேன்எடுத்துத்தேன்தரவாதேவையென்னகூறடியோ
காமனுக்குரதிபோலவந்துசேரடி– இந்த
மாமனின்னும்எத்தனைநாள்காத்திருப்பேன்டி !

இன்பசுகப் பெட்டகமே

கட்டிதந்தகனுக்கரும்பே!கயல்துள்ளும்மைவிழியே!
கொட்டிவைத்தமுத்தழகே!குலமகளே!கனிமொழியே!
எட்டியிருந்தென்மனதில்இனிக்கின்றநல்லமுதே!
அட்டியில்லைகாந்தமெனசுற்றிடுவாசீரழகே!
வான்நிலவுஉன்அக்காள்!வண்மையில்உன்தங்கை!
தேனுனக்குத்தோழியடி!தென்றலுனக்கப்படித்தான்!
பூக்கூட்டம்விண்மீன்உன்பணிப்பெண்களாகுமடி!
பேரழகேஇன்பசுகப்பெட்டகமேவாராயோ!
வெண்பாவின்நடைதுள்ளஎன்பாவாய்நீ
பெண்பாவாய்என்னுளத்தைப்பெரும்பாலையாக்கிடாதே!
கண்பார்ப்பாய்கண்மணியே!களிசேர்ப்பாய்என்வாழ்வில்
உன்பார்வைஎன்பார்வைஒன்றாக்குமான்மகளே!
கோடியொருபூமலரும்கோகிலக்கண்நீதிறந்தால்!
ஆடிவரும்அன்னம்தேர்அசைபோடும்உன்நடையில்!
பாடிவரும்பூங்குயிலும்பனிக்குளிரும்உன்மொழியில்!
கூடிவரவாழ்வுதரக்கோதையேநீவந்துவிடு!
பூதளத்துப்பொன்தனமே!பூத்திருக்கும்தாமரையே!
மாதரசிமாணிக்கமணிக்குலத்துவாழ்வரசி!
தீதறியாத்தென்தமிழே!திராவிடத்துப்பெரும்புகழே!
ஏதுமறியாயென்னைஏங்கவிடாதேதேவி
முக்கனியின்சாற்றைப்போல்முத்தமிழின்ஊற்றைப்போல்
எக்காலும்வாழ்ந்திருப்போம்ஏந்திழையேவந்துவிடு
திக்கெல்லாம்ஒளிகூட்டும்தினகரனைச்சாட்சிவைப்போம்
தக்கவைப்பாய்என்னுயிரைதந்துவிடு!வந்துவிடு!

கிணற்று நீருநான் உனக்கு

ஆண்:- அத்தைமகளே!சித்திரப்பெண்ணே!
அழகே!மயிலே!வாவா!
அக்கம்வரவா!முத்தம்தரவா!
வெக்கம்ஏனடிமானே!
பெண்:- மொட்டுமல்லிகைமணக்கும்– உந்தன்
மோகமென்மனதைத்தகர்க்கும்!
கட்டுக்குலையாமேனிஇருக்கு
கட்டிஅணைத்திடவாவா!
ஆண்:- அணைப்பிலேசுகத்தைத்தரவா– உன்னை
அமுதக்கடலிலேவிடவா!
உனக்கும்எனக்கும்உறவு– தருமே
ஒவ்வொருநாள்வரும்இரவும்
பெண்:- கிணற்றுநீருநான்உனக்கு– இதில்
கேட்கத்தோனுமோகணக்கு
திகட்டும்வரைக்கும்இன்பம்– அதையே
எடுத்திடுகொடுத்திடுவாவா!
ஆண்:- தங்கத்தாலியுடன்வரவா– என்னைத்
தாரைவார்த்துத்தரவா!
கோவைக்கனியே!குங்குமச்சிமிழே!
பாவைவிளக்கே!வாவா!
இருவரும்:-ஒன்றுசேருவோம்தோதா– இதை
உலகம் வெறுக்குமோதீதா!
வாழ்ந்துகாட்டுவோம்வாவா!-வாழ்வில்
வெற்றிநாட்டுவோம்வாவா!

இருவரும்:- ஒன்று சேருவோம் தோதா – இதை – உலகம் வெறுக்குமோ தீதா! வாழ்ந்து காட்டுவோம் வாவா! வாழ்வில் – வெற்றி நாட்டுவோம் வாவா

உலகம் தெரியலே

என்னத்தைநான் சொல்லப்போறேன் அத்தானே – மனசு எதைநெனச்சோ குழம்பிப்போயி பித்தானேன்.
கண்ணுதிறந்துபார்த்துஇருக்குது
ஒன்னும்தெரியலே –இரண்டு
காதுகூடநல்லாஇருக்கு
ஒன்னும்கேக்கலே!
உடலுமட்டுஇங்கேஇருக்கு
உணர்வுதெரியலே – எந்த
உறவும்துறவும் புரியவில்லை
ஒன்னும்சரியில்லை!
பூவைஎடுத்துமுகர்ந்துபார்த்தேன்
மணக்கவேஇல்லை –வீட்டுப்
பூஜைஅறையில்வணங்கிப்பார்த்தேன்
மனசுதெளியலே!
சேலைஇடுப்பில்சுற்றிப்பார்த்தேன்
சொருகமுடியலே –இங்கே
சொந்தம்பந்தம்இருக்குறாங்க
நினைப்பிலேஇல்லே!
வயலில்நெல்லுவிளைஞ்சுகிடக்கு
அறுக்கமுடியலே –அதைக்
கட்டுக்கட்டிகளத்துமேட்டுலே
சேர்க்கமுடியலே
கதிரைஅடிச்சுநெல்லுமூட்டை
கட்டமுடியலே –அதைக்
கவனத்தோடுவீடுகொண்டு
சேர்க்கமுடியலே
மயக்கமுன்னுசொல்லுவாங்க
அதுவாஇருக்குமா –இல்லை
மாயவேலைசித்துவேலை
இதுவாஇருக்குமா!
காதலுன்னுசொல்லுவாங்க
அதுவாஇருக்குமா –இந்தக்
கதை எனக்குப் புரிய லையே
சொல்லுஅத்தானே!
உன்னைநினைச்சேன்உன்னைநினைச்சேன்
உறக்கமேஇல்லை –உங்க
ஒருத்தரையேநினைச்சதாலே
உலகம்தெரியலே!
கண்ணைமூடிஇருந்தாலுங்கள்
உருவம்தெரியுதே – தென்றல்
காற்றைத்தூதுஅனுப்புறேன்நான்
வாங்கஅத்தானே!
தையலென்னைத்தேடிவாங்க
தைபொறக்குது – எனக்கு
தாலிகட்டிமாலைசூட்டி
மனசைத்தேத்துங்க.

கண்டதும் காதல்

பூவாடை எனைமயக்கத் திரும்பிப் பார்த்தேன்
பொன்னோடைஎழில்மேனிபொலிவுகூட்டும்
பாவடைதாவணியின்பருவமங்கை
பார்வையிலேசுருக்கிட்டுஎனையிழுத்தாள்!
மாவாட்டும்கற்குழவியாகிஎந்தன்
மனஞ்சுழல உணர்வுந்தஆர்வத்தாலே
நாவாட நான்துணிந்தேன்; அவளோமெல்ல
நடைபெயர்ந்தாள்;நான்தொடர்ந்தேன்;கடலோபக்கம்
பார்வையிலேஎனையிழந்தேன்;கன்னலாளின்
பசப்பினிலேநினைவிழந்தேன்;கொவ்வைச்செந்தேன்
கோர்வையிதழ்ச்சிவப்பினிலேசெயலிழந்தேன்
குலைக்கனியாம்கன்னத்தைமார்பைக்கண்டு
ஊர்வெளியைச்சூழ்நிலையைமறந்தேபோனேன்!
உளறுமொழிகிறுக்கனைப்போல்புலம்பலானேன்!
கூர்விழியாள் கடற்கரையை அடைந்த போது
குமுறுமுணர்வோடங்குநானும்சேர்ந்தேன்!
நான்பார்த்தேன்;மான்பார்த்துத்திரும்பிக்கொண்டாள்!
நான்பார்க்காப்பாவனையில்திரும்பும்போது
மான்பார்த்தாள்;நேர்க்கோட்டில்விழிகள்சேர
மணிபார்த்தேன்இரவெட்டு;நிலவோநல்ல
தேன்வார்த்துஒளிகொட்டும்;அலைகள்தாவும்
திசைஎங்கும்இன்பமோஇன்பம்என்றே
தானார்த்துக்காதலர்கள்இளமைவேகம்
தணித்திருந்தார்;நாங்களங்கேதனித்திருந்தோம்

பெண் விழிப்பு

பெண்ணுக்கும்ஆணுக்கும் சமத்துவந்தான்
பேசுகிறோம் இந்நாளில்; ஆனால், அந்நாள்
பெண்ணிழிவு பேசியுமே அடிமை யாக்கி
பிழைகூறி வழிமாறி பழிகள் தூற்றி
பெண்ணைப்போய்பேயென்றும்மாயம்செய்யும்
பிசாசென்றும் காட்டேரிகூனிஎன்றும்
கண்ணெதிரே வருகின்ற உரிமை போக்கி
கடைக்கோடி அடுப்படியில் ஒதுக்கி வைத்தார்!
பெண்ணுக்குவீட்டிலேயும்வெளியிலேயும்
பேசுவதற்கு உரிமையிலை; நாணம் அச்சம்
பெண்ணிற்கு மட்டுமென கதவுப் பக்கம்
போயொதுங்க; உணர்வொடுங்க; அடிமை செய்தார்
வண்ணமலர் வான்நிலவு உயிரோ வியம்
வடிவழகு என்றேட்டில் எழுதி வைப்பார்!
பெண்ணடக்கிஆண்டிடுவார்;ஆண்மைஎன்பார்!
பேதமையால்அழித்திட்டார்;மடமைகாத்தார்!
பெண்ணின்றிஆணுக்குஇன்பம்ஏது
பிரசுகங்கள்,பிரசவங்கள்எவரால்கிட்டும்
பெண்ணின்றிஆண்வர்க்கம்தோன்றப்போமோ
பிள்ளைவளர்க்கின்றபாசம் யாரின் பாசம்;
பெண்வெறுக்கும் ஜடாமுடிசேர் முனிவர் கூட
பெண்துறவி சீடர்துணை கொண்ட துண்டு
கண்ணிரண்டு ஆடவர்க்கு உண்டு என்றால்
கண்ஒன்று பெண்ணென்று கண்டார் இன்று
வாளேந்தி பரியேறி போர்வென் றாண்ட!
வரலாறு பெண்ணுக்கும் உண்டு; நல்ல
கோலேந்தும் வீரமங்கை வேலு நாச்சி
குன்றிலுயர் மங்கம்மா ஜான்ஸி உண்டு
வேலேந்தி ஆண்வர்க்கம் அடிமை கொண்ட
ஆரவல்லி சூரவல்லி அமுத வல்லி
சூளேந்தி ஆண்டதுவும் உண்டு; அந்த
துடிப்புத்தான் பெண்ணுரிமை விடிவின் உச்சம்!
அடிமைப்பெண்ணைச்சந்தைப்பொருளாய்விற்றார்
ஆடுமாடொப்பஇழிநிலையில் வைத்தார்
கொடுமையிது கொடுமையென அண்ணல் நபிதான்
கொடுஞ்செயலின் வேரறுத்தார் வெற்றிகண்டார்
மிடிமையொடு மடமையற பெரியார் காந்தி
பாரதிபா ரதிதாசன் கலைஞர் அண்ணா
படித்தபகுத் தறிவாளர் திரண்டு வெற்றிப்
படிமுகத்தில் பெண்ணுயர்த்தி வைத்தார்; வென்றார்!
படிப்பதிலும்நடிப்பதிலும்விண்ணாராய்ந்து
பறப்பதிலும்பட்டங்கள்சட்டம்ஆளத்
துடிப்பதிலும்கல்விகேள்வி வேலை வாய்ப்பில்
தொய்வின்றி விழிப்போடு விளையாட் டினிலும்
பிடிப்போடு சமமாக உயர்ந்தார் பெண்கள்,
புதுப்புரட்சி செய்கின்ற காலம் கண்டோம்!
அடிப்படையில் ஆண்பெண்கள் சமமென்றாச்சு!
ஆர்ப்பரித்து எழுந்ததுகாண்; பெண்வி ழிப்பு!

வண்ணக்கிளியே!

மூழ்கிமூழ்கி முத்தெடுத்து
முதிர்ந்தமுத்தைத் தேர்ந்தெடுத்து
முத்துப்பல்லுக்காரி உனக்கு
அள்ளித்தருவேன் – உன்னை
முத்துப்பல்லாக்கேற்றிவைத்துச்
சுற்றி வருவேன்!
கட்டுக்கட்டாகரும்பெடுத்து
கணுக்கணுவாவெட்டியதில்
நடுக்கரும்பைநானெடுத்து
உனக்குத் தருவேன் – என்
நாடிநரம்பில் நீமட்டும்தான்
நல்லாப்பாரடி!
மொட்டுமொட்டாஅரும்பெடுத்து
முல்லைமலர்சரந்தொடுத்து
கட்டுக்குழல்சூட்டுவேன்நான்
கண்ணேகற்கண்டே– உன்
கழுத்தில்தாலிகட்டுவேன்நான்
பெண்ணேபூச்செண்டே!
மாடுமனைதோட்டமிருக்கு
மஞ்சள்கடலைகரும்புக்காட்டில்
பஞ்சடியைப்பதிக்கவாடி
பச்சைக்கிளியே – எனக்குப்
பாலும்தேனும் அழுதும்தாடி
இச்சைக் கிளியே!
தட்டித்தட்டிதங்கத்திலே
தட்டுப்பாடுஇல்லாமலே
தட்டான்தந்தான் நகைவகைகள்
தங்கரெத்தினமே – உனக்கு
தாலிகூடசெய்துவிட்டேன்
பொண்ணுரெத்தினமே
பட்டுப்பட்டாகாஞ்சிப்பட்டு
பலகடையிலேதேடிஉனக்குக்
கட்டுக்கட்டாசேலைவாங்கிக்
காத்திருக்கேன்டீ –என்னை
காக்கவைக்கலாகுமோஎதிர்
பார்த்திருக்கேன்டீ!
சுத்திச்சுத்தி திலோத்தமைகள்
ஊர்வசிகள்மேனகைகள்
மோகினிகள்மயக்குறாங்க
அன்னக் கிளியே – என்னை
அடைந்துசுகம்தந்திடடீ
வண்ணக்கிளியே!
தைதையின்னுதைவருது
தாளமேளம்நாதஸ்வரம்
வைத்துனக்குமாலையிடுவேன்
வண்ணவண்ணமா –ஊரார்
வாழ்த்துவார்கள் நீயும்நானும்
வாழ்வோம் திண்ணமா!

மேகமே தூது போ

மேகமே “வா” என்
வேதனை கேளு!
மோகமோ “தீ” ப்போல்
மூள்வதைப் பாரு!
தாகமோ மீறுது!
தனிமை தகிக்கிது!
சோகமே சூழுது!
சொல்அவ ரிடத்தில்!
பொங்குது ஆசை!
புழுங்குது உள்ளம்!
திங்குது வேட்கை!
திகைக்குது மனது!
எங்கிருப் பாரோ
என்னுயிர் அவரிடம்!
தங்கிடத் தாங்கிடத்
தயக்கமேன் வரச்சொல்!
பறந்து திரிகிறாய்!
பலஊர்அலைகிறாய்!
மறந்திடாதே
மதிதவழ்முகிலே!
பிறந்தேன்அவர்க்கென
பிரியமுடியுமோ!
இறந்துபடுமுன்
என்னிடம்வரச்சொல்!
தாகமோ விரகமோ!
தாக்கிடும் புயலோ!
வேகமோ நாகமோ!
வில்விடு வினையோ!
தேகமும்எரியுது!
ஏகமும்எரியுது!
நோகவோசாகவோ!
நிம்மதிதரச்சொல்!
கண்டேன்அவரை!
உண்டேன்அழகை!
கொண்டேன்மையல்!
குலநலன்இழந்தேன்!
பண்டுநாள்;சிறுமிநான்
பழகிய பாங்கினை
எண்ணிப்பார்த்து
என்னிடம்வரச்சொல்!
காவியம்படைத்திட
களிநடம்பூத்திட
மேவியஉணர்வால்
மெலிந்தேன்உடலும்!
ஓவியமாயென்
உளம் ஒளிர்பவரை!
ஆவிபோய்சாகுமுன்
மேகமேவரச்சொல்!
தூவியமலர்விரி
துயில்கொளுமஞ்சம்
தேவியென்உடல்பட
சேர்வதுஎந்நாள்?
நாவினில்இன்சொல்
நவிலுமேகமே!
பூவினில்தேன்பெற
புசித்திடவரச்சொல்!
கண்” அவர்எனக்கவர்!
காத்திடவரச்சொல்!
பெண்” உயிர்அவரிடம்
பேணிடவரச்சொல்
மென்மைமேனியை
மேவிடவரச்சொல்!
தண்” குளிர்மேகமே
தாங்கேன்தூதுபோ!

பாதை மாறிடு கண்ணே

இயம் பெண்ணுக்கும் வயோதிகனுக்கு நடந்த திருமணத்திற்குப் பின். முதலிரவில்
அவன்: பாதை மாறிடு கண்ணே - வாழ்க்கைப்
பயணம் தொடங்கும் முன்னே!
மாதுனை தொடுவதும் இல்லை - எந்தன்
மனதிலும் ஆசைகள் இல்லை!
(பாதைமாறிடு)
அவள்:இளமை இருப்பது குறையோ - நான்
ஏங்கித் தவிப்பதும் முறையோ!
அழகை எனக்கேன் தந்தனை - இறைவா
ஆயுள் முழுதுமா நிந்தனை!
அவன்:இன்பம் தருமே இளமை - அதை
ஏங்கித் தவிக்குதே முதுமை!
துன்பம் வேண்டாம் கண்ணே - மாறிட
துணிந்திடு கைபடும் முன்னே!
(பாதைமாறிடு)
அவள்:பாதை மாறுமோ உள்ளம் - பெண்ணின்
பரம்பரைக் கேயது கள்ளம்!
அழகை எனக்கேன் தந்தனை - இறைவா
ஆயுள் முழுதுமா நிந்தனை!
கொதிக்குது மீறுது ஆசையே - நான்
கோடு தாண்டினால் வேசையே!
மிதிக்குதே கடமை கண்ணியம் - இதை
மீறுமோ எனது பெண்ணியம்!
(பாதைமாறிடு)
அவன்:இறைவன் கொடுத்தான் இளமை - இதில்
இன்பம் ஒன்றுதான் தலைமை!
பழியென நினைத்தால் மடமை - இதில்
பாவம் இல்லையிது கடமை
ஓடிடும் மானையும் பிடித்தேன் - அதை
உற்றவ ரிடம்ஒப் படைத்தேன்!
நாடிய செய்தேன் அன்று - எனக்கு
நாடியும் தளர்ந்தே இன்று!
(பாதைமாறிடு)
அவள்:பாதை மாறுமோ உள்ளம் - பெண்ணின்
பரம்பரைக் கேயது கள்ளம்
அழகை எனக்கேன் தந்தனை - இறைவா
ஆயுள் முழுதுமா நிந்தனை!

உண்டா – இல்லையா?

அந்திமாலை வந்தபோது
அங்குதென்றால் தொட்டபோது
இந்தமாமன் நினைப்புனக்கு
வந்த தில்லையா?
தூக்கமின்றி கண்தவிக்க
ஏக்கத்திலே மனந்தவிக்க
தீக்குளித்த உணர்விலே நீ
நொந்த தில்லையா?
கொந்தளிக்கும் கடலைப் போல
குமுறுகின்ற மேகம்போல
தத்தளிக்கும் படகுபோல
ஆடவில்லையா
பொன்சிவந்த முகத்தினிலே
பூ” சிதறும் தேன்துளிபோல்
கண்கசிந்து என்னையெண்ணி
வாட வில்லையா?
மன்மதனும் வில்லெடுத்து
மலர்க்கணையை வீசும்போது
உன்மனதில் என்னுறவு
தீண்ட வில்லையா?
முல்லை” நீலம் ‘மா’ அசோகு
தாமரைசேர் ஐ மலர்கள்
மோக தாக விரக வேகம்
தூண்ட வில்லையா?
ஆட்டிவைக்கும் உணர்வு பொங்கி
அடங்கிடாமல் மீறும் போது
போட்டிபோட்டு என்நினைப்புத்
தாக்க வில்லையா?
பூகம்பத்தின் நெருப்பலைகள்
சுனாமி போல சீறிப்பாய்ந்து
புரட்டிப்போட்டு வறுத்தெடுத்துத்
தீய்க்க வில்லையா?
மாது நீயும் மனத்திரையில்
சூது கொண்டு மறைத்திதனை
ஏதுமறி யாதவள்போல்
ஏங்க வில்லையா?
உண்டா – இல்லையா?
Back to Top