| வாடாதே | மனிதா; | உனைத் | தாழ்த்திப் |
| வஞ்சகர்க்கு | அஞ்சாதே; | துணிந்து | நில்லு! |
| மூடாதே | முயற்சிதனை; | விதையின் | ஓட்டை |
| முட்டியுடைத் | திளந்தளிரும் | துளிர்க்கும் | பாரு! |
| நாடாது | தோல்வியுனை; | கல்பி | ளந்து |
| நாட்டிடுதே | மரம்வேரை | இதனைத் | தேரு! |
| ஓடாதே! | உனைப்பழிப்போர் | ஓய்ந்து | போவார்! |
| ஓய்வின்றி | நேர்மையுடன் | உழைத்தால் | வெல்வாய் |
| பணமிருந்தால் | பத்துப்பேர் | புகழ்வார்; | உன்னைப் |
| பாராட்டி | இந்திரன்சந் | திரனென் | பார்கள்! |
| பணமில்லா | நிலைகண்டால்; | பார்க்கா | தார்போல் |
| பாதைதனை | மாற்றியவர் | மறைந்து | போவார்! |
| குணம்நாடிப் | பார்ப்பவர்கள் | எவரும் | இல்லை |
| குறைகூறிப் | பழித்திகழப் | பலபே | ருண்டு! |
| இனங்கண்டு | முன்னேறு; | உனக்குப் | பின்னால் |
| எவரெவரோ | துதிபாடி | வந்து | நிற்பார்! |
| அச்சத்தை | விட்டொழிநீ; | மடமை | நீக்கு |
| ஆளுமையைப் | பெற்றிடுநீ; | உலகில் | உன்னை |
| துச்சமென | இகழ்ந்தவர்கள் | புகழக் | காண்பாய் |
| தூய்மை | அறச் | செயல்கள்உனை | உச்சம் |
| நிச்சயமாய் | நல்லதுசெய் | நலிந்தோர் | வாழ |
| நிலைத்தசெயல் | செய்துபார்; | உலகம் | போற்றும்! |
| கொச்சைபட | உன்புகழை | நசுக்கிப் | போட்ட |
| கொடியவர்கள் | தலைதாழ்ந்து | வணங்கி | எற்பார்! |
| உன்னை | நீநம்பு; | உன்செய | லைநம்பு |
| உன்னாற்றல் | வலிமைதனை | உலகே | மெச்சும்! |
| தன்னையறி, | துணிந்தியங்கு; | செயலை | நாட்டு! |
| தானாக | முன்னேற்றம் | உன்னை | நாடும்! |
| பின்னிருந்து | குழிபறிக்கும் | நரிகள் | கூட்டம் |
| பிடரிதலை | கால்படவே | ஓடும் | காண்பாய்! |
| எண்ணரிய | சாதனைகள் | செய்யத் | தானே |
| இவ்வுலகில் | நீபிறந்தாய்; | பழிக்கஞ் | சாதே! |
| போர் | நடத்து; | சூழ்ச்சி; | பழி; |
| புறமுதுகிட் | டோடப்பகை | நொறுக்கிப் | போடு! |
| யாருனக்கு | வழிகாட்டி; | நேர்மை | நீதி |
| நியாயம்;உழைப் | பென்றாலோ, | அதுவே | வெல்லும்! |
| தேருதலை | நீயுனக்கே | தேற்றிக் | கொள்ளு! |
| தேம்பியழு | வார்;பழித்தோர்; | தொலைந்தே | போவார்! |
| ஆறுதலைப் | பெறுமனிதா; | ஆறு | தேரு |
| அருகிருக்கு | வெற்றி;இதைத் | தடுப்பார் | யாரு! |
அறிவின் வித்து!
| வெற்றி | என்பது | உழைப்பின் | வித்து! |
| உழைப்பு | என்பதோ | உறுதியின் | வித்து! |
| உறுதி | என்பது | தெளிவின் | வித்து! |
| தெளிவு | என்பது | அறிவின் | வித்து! |
| அறிவு | என்பது | ஆய்வின் | வித்து! |
| ஆய்வு | என்பதோ | தேடலின் | வித்து! |
| தேடல் | என்பது | தூண்டலின் | வித்து! |
| தூண்டல் | என்பதோ | உணர்வின் | வித்து! |
| உணர்வு | என்பது | கடவுளின் | ஆக்கம் |
| கடவுள் | என்பதோ | கடந்துள் | செல்வது! |
| கடப்பது | என்பது | ஐம்புலன் | ஒடுக்கம்! |
| ஐம்புலம் | என்பதோ | ஜீவனில் | அடக்கம்! |
| ஜீவன் | என்பது | ஆத்மா | தொடக்கம்! |
| ஆத்மா | என்பதோ | ஆதிவி | நோதம்! |
| ஆதி | என்பது | அனாதி | யானது! |
| அனாதி | என்பதோ | பிரபஞ் | சமாகும்! |
| பிரபஞ் | சமென்பது | அழிவை | வென்றது! |
| அழியா | ஆற்றலோ | சக்தியின் | ஊற்று! |
| சக்தி | என்பது | ஜீவனின் | இயக்கம்! |
| ஜீவன் | என்பதோ | சிவனாய் | விளங்கும்! |
| சிவனே | என்பது | செயல்களின் | துடிப்பு! |
| செயல்கள் | என்பதோ | இயக்க | மாகும்! |
| இயக்கம் | என்பது | சுழற்றும் | ஆற்றல்! |
| சுழற்றல் | என்பதோ | மனத்தின் | வேகம்! |
| மனது | என்பது | மந்திர | ஈர்ப்பு! |
| மந்திரம் | என்பதோ | மனத்திற | மாகும்! |
| மனத்திறம் | என்பது | மாயைத் | தேக்கம்! |
| மாயம் | என்பதோ | மயக்கத் | தொடக்கம்! |
| மயக்கம் | என்பது | சூன்ய | வெற்றிடம்! |
| சூன்யம் | என்பதோ | பேரின் | பம்தரும்! |
| பேரின் | பமென்பது | பரமா | னந்தம்! |
| பரமா | னந்தமோ | பரம்பொருட் | சோதி! |
| சோதி | என்பது | ஆன்ம | சுடரொளி |
| ஆன்மா | ஓமெனும் | நமசி | வாய |
| சிவாயம் | என்பது | மெய்யைக் | குறிக்கும் |
| மெய்யென் | பதுவோ | பொய்யா | லானது |
| பொய்என் | பதுவோ | பூஜ்ய | மானது |
| பூஜ்ய | மென்பது | ஞான | திறவுகோல் |
| ஞான | மென்பது | தன்னை | அறிவது |
| தன்னை | அறிவதே | இறைவனை | அறிவது! |
எது உன்னால் முடியாது
| புலிவாழும் | காட்டினிலே | மான்கள் | கூடி |
| பெற்றுத்தன் | குட்டியுடன் | மகிழ்ந்து | வாழும்! |
| எலிகூட | பூனையுள | வீட்டில் | தானே |
| ஏராளக் | குட்டியுடன் | பேரன் | பெற்று |
| கிலியின்றி | வாழ்கிறது; | பாம்பின் | முன்னே |
| கிளைஞருடன் | தவளைகளும் | வாழ்தல் | கண்டோம்! |
| வலியனெனும் | வல்லூறு | பறக்கக் | கண்டும் |
| வாழ்கிறதே | கோழிக்குஞ்சு | துணிச்ச | லோடு! |
| வலியவரைக் | கண்டுடனே | அஞ்சிக் | கெஞ்சி |
| வணங்கியடி | வருடுவது | வெட்கக் | கேடு! |
| புலியிருக்க; | மான்வாழ்வை; | புரிந்து | தேறு |
| பேடிநிலை | நீங்கிவிடும்; | மானம் | மிஞ்சும் |
| கிலிபிடித்து | வாழ்வதுவும் | வாழ்வா? | உன்னைக் |
| கீழாக | எண்ணாதே; | நிமிர்ந்து | நில்லு! |
| எளியவனும் | வலியவனும் | ஒன்று; | சட்டம் |
| இப்படித்தான் | சொல்கிறது; | துணையும் | நிற்கும்! |
| வாழ்வதென்று | முடிவுசெய்; | துன்பம் | உன்னை |
| வாட்டிடினும் | துணிவுகொள்; | அறிவை | நாட்டு |
| தாழ்வுன்னைத் | தாக்காது; | தாங்கிக் | காக்கும்! |
| சமுதாய | மேம்பாட்டில் | உயர்த்தி | வைக்கும்! |
| ஏழ்மைதனை | எண்ணாதே; | உயர்வே | எண்ணு! |
| எண்ணம்போல் | நீஉயர்வாய்; | ஏற்றம் | காண்பாய்! |
| கோழையென | மனங்குன்றி | தாழ்ந்தா | யானால் |
| கோழிகூட | உனைஎதிர்க்கும்; | அறிந்து | வெல்லு! |
| ஆழிஅலை | தொடர்ந்தடிக்கும்; | படகி | லேறி |
| அன்றாடம் | மீன்பிடிப்போர் | துணிவைப் | பாரு! |
| பாளையிலே | வடிகள்ளை | மீட்க | அங்கே |
| பனைதென்னை | ஏறிடுவோர் | பாட்டைப் | பாரு! |
| தூளியிலே | கைக்குழந்தை | போட்டு | அங்கே |
| துண்டுதுண்டாய்க் | கல்லுடைக்கம் | தாயைப் | பாரு! |
| கேலியிதைச் | செய்வார்யார்? | யார்க்கும் | அஞ்சும் |
| கீழ்நிலையோ | அவர்க்கில்லை; | வெற்றி | நோக்கு! |
| நீ | நினைத்தால் | வானம்உன் | கைக்கு |
| நினைவாலே | செயலாலே | உயர்தோர் | பல்லோர்! |
| தீ | நினைவைத் | தீய்த்துவிடு; | வெற்றி |
| திருப்பத்தை | நோக்கிநடை | எட்டிப் | போடு! |
| வா | உன்னை | இவ்வுலகு | புரிந்து |
| வரவேற்கும்; | வாழ்த்தளிக்கும்; | வழிகள் | நீளும்! |
| ஏ | மகனே | உன்னைநீ | எண்ணிப் |
| எது | உன்னால் | முடியாது; | காண்பாய் |
| கண்திறக்கும் | முன்னாலே | சிலைக்கு | அங்கே |
| கடவுள்நிலை | கிட்டாது; | நீயும் | உந்தன் |
| கண்திறந்தால் | உலகறிந்தால் | வாழ்வு | கிட்டும்! |
| கண்மூடித் | தனத்தைவிடு; | விழித்து | நோக்கு! |
| பொன்பொருள் | புகழ்வெற்றி | உன்னைத் | தேடி |
| போட்டியிட்டு | வந்துசேரும்; | வளமை | ஓங்கும் |
| தன்னம்பிக் | கைகொள்நீ | அஞ்சி | டாதே |
| தளராதே | எதிர்கொள்நீ | ஏறு | மேலே! |
முல்லைக்கு தேர் வேண்டாம்
| கொடு; | இல்லா | தவர்க்குநீ | கொடு! |
| குடும்பத்தை | வாழ்விக்கக் | கொடு! | – |
| வடு, | எவரும் | படாதிருக்கக் | கொடு:- |
| வடிக்குமுன் | காத்தவரை | வாழ்விக்கக் | கொடு! |
| பசித்துயரை | நீக்கிவிடக் | கொடு! | – |
| பார்வையிலே | அதையறிந்து | கொடு! | நீயும் |
| புசிக்கும் | போ | தும்பிறர்க்குக் | கொடு! |
| பூத்திருக்கும் | இறைமனமும் | பூத்திருக்கும் | கொடு! |
| பிறவியிலே | கண்ணில்லார் | காலில்லார் | உழைக்கக் |
| கையில்லார் | நிலையறிந்து | கருணையொடு | கொடு |
| உறவிழந்து | வயதிழந்து | நடைதளர்ந்த | பேர்க்கு |
| உன்னாலே | அவர்க்கியன்ற | உதவிகளைக் | கொடு! |
| கையில்லா | மயிலுக்குப் | போர்வைதர | வேண்டாம் |
| கையாலா | காநிலைபேர் | கண்டறிந்து | கொடு! |
| கொடிமுல்லை | படரவொரு | கொம்பின்றி | தேர் |
| குடிசையிலே | வறுமையிலே | குமுறுவோர்க்குக் | கொடு! |
| படிப்பதற்குப் | பணமின்றி | தவிப்பவர்க்குக் | கொடு! |
| பரதேசி | நிலைமாற | துணிவகைகள் | கொடு! |
| நொடிப்பொழுதில் | இரத்தம்அவர் | இறக்குமுன் | கொடு! |
| நோய்நொடியில் | தவிப்போர்க்கு | அதுநீங்க | கொடு! |
| கொடுப்பார்க்குச் | செல்வங்கள் | குறையாது | கொடு! |
| கொடுஉனக்கு | இறைவனள்ளிக் | கொடுத்தபொருள் | கொடு! |
| கொண்டுவந்த | தேதுஅவன் | கொடுக்காத | போது |
| கொண்டுநீ | போவதெங்கே | கொடுத்துவிடு | இங்கே! |
எங்கள் நாடு தமிழ் நாடு
| தெங்குகன்னல் | வாழைபலா | சேர்ந்ததெங்கள் | நாடு | |
| சீருலாபோல் | காருலாவும் | சிறப்புமிகு | நாடு | |
| மங்களஞ்சேர் | மஞ்சளிஞ்சி | மாங்கனிக | ளோடு | |
| மணமிகுந்த | சந்தனமும் | அகில்விளையும் | நாடு | |
| பொங்குபுனல் | பாயும்ஆறு | புகழ்மிகுந்த | நாடு | |
| பொதிகையெனும் | மலைதழுவி | தென்றல்தரும் | நாடு | |
| தட்டினாலும் | தங்கமெங்கும் | வெட்டினாலும் | வெள்ளி | |
| பிளாட்டினமு | மிரும்புமலு | மினியமுள்ள | நாடு | |
| தங்குபுகழ் | தாங்கிநிற்கும் | தனிச்சிறப்பு | நாடு | |
| தாவும்அலை | மேவுகடல் | முத்துகொண்ட | நாடு | |
| சிங்கமொத்த | வீரமக்கள் | சிறந்திருக்கும் | நாடு | |
| சேரசோழ | பாண்டிமன்னர் | ஆண்டிருந்த | நாடு | |
| கங்கையோடு | கடாரமீழம் | வெற்றிகொண்ட | நாடு | |
| காரிமய | உச்சியிலே | கொடிபொறித்த | நாடு | |
| கனகனையும் | விஜயனையும் | கல்சுமக்க | வைத்து | |
| கண்ணகிக்குச் | சிலைவடித்த | காட்சிகண்ட | நாடு | |
| வாரணங்கள் | போரடிக்க | சோறுடைத்த | நாடு | |
| பாரதப்போர் | நடந்தபோதும் | பசியொழித்த | நாடு | |
| முத்துமணி | பவளம்ஏலம் | மயில்தோகை | யோடு | |
| மிதந்துகடல் | கடந்துதந்தம் | விற்றுவந்த | நாடு | |
| எட்டுத்தொகை | பத்துப்பாட் | டுப்பதினெண் | கணக்கும் | |
| இயலுமிசை | கூத்துகுறள் | இனிதுயர்ந்த | நாடு | |
| கம்பரொட்டக் | கூத்தர்புக | ழேந்தியவ்வை | யோடு | |
| கபிலரிளங் | கோவாழ்ந்த | புலவர்மிகு | நாடு | |
| மொழிவளர்க்கச் | சங்கமாய்ந்த | மூத்ததமிழ் | நாடு | |
| விழித்திருந்து | மொழிகாத்து | விருதுகொண்ட | நாடு | |
| உலகமெல்லாம் | செம்மொழியாய் | உயர்ந்ததமிழ் | நாடு | |
| உண்டுபல | மதமெனினும் | ஒன்றிவாழும் | நாடு | |
| மாரியொத்த | பாரிஓரி | காரிவள்ளல் | நாடு | |
| மீறிடாத | மனிதநேயம் | மிகுந்திருக்கும் | நாடு | |
| பிச்சையாளர் | தொழுநோயாளி | ஆதரவில் | லாதார் | |
| பெருமையுடன் | மகிழ்ந்துவாழ | வழிவகுத்த | நாடு | |
| கஞ்சியூற்ற | ஆளிலாத | முதியோரினைத் | தாங்கி | |
| காலமெலாம் | உதவித்தொகை | வழங்குகின்ற | நாடு | |
| கண்கண்ணாடி | காற்செருப்பு | கருணையில்லம் | தந்து | |
| காப்புறுதி | தந்துநோயைத் | தோற்கடித்த | நாடு | |
| ஏழைவாழ | குடிசைமாற்றி | வீடுதரும் | நாடு | |
| இரந்துஉண்டு | வாழ்வோரிலா | ஏற்றமிகு | நாடு | |
| வேட்டிசேலை | துணியணிகள் | ஏழைகளுக் | கீந்து | |
| வீட்டுக்கொரு | விளக்கெரிய | வழிவகுத்த | நாடு | |
| ஒருரூபாய் | கிலோஅரிசி | உவந்துதரும் | நாடு | |
| உணவளித்து | முட்டையுடன் | கல்விதரும் | நாடு | |
| கிணற்றுக்கில | வசமின்சாரம் | கிடைக்கச்செயும் | நாடு | |
| கேட்காமலே | விவசாயிதன் | கடன்தீர்க்கும் | நாடு | |
| நாடில்லாத | நரிக்குறவர் | வீடுபெற்ற | நாடு | |
| நாலுவகைப் | படிப்பறிவை | அவர்க்களித்த | நாடு | |
| ஏழைகளும் | சிரித்திருக்க | ஏற்றதொண்டு | செய்தே | |
| இறைவனையே | குடிசைக்குள் | இருக்கவிட்ட | நாடு | |
| இந்தநாடு | “எங்கள்நாடு” | இனியதமிழ் | நாடு | |
| ஏற்றமிக்க | நாடுவேறு | இதற்குஇல்லை | ஈடு! |
2011 ஜனவரி 22-23 தேதியில் திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலகத்தமிழ்க் கவிஞர்கள் பேரவை – மற்றும் – தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளையினர் இணைந்து ஆய்வுசெய்து தேர்ந்து கவிஞர் அறந்தைத் திருமாறனுக்கு கவிமாமணி விருது வழங்கினார்கள். ஆய்விற்கு எடுத்துக் கொண்ட கவிதை இது…
உனக்கொரு காலம்வரும்
| உனக்கொரு | காலம் | உண்டடா | மனிதா |
| கவலையை | விட்டுவிடு | –உன்னை | |
| இகழ்ந்தவர் | புகழ்ந்திட | வாழ்ந்து | காட்டிடு |
| தலையை | நிமிர்த்திவிடு | ||
| தாழ்ந்தவன் | உயர்வதும் | உயர்ந்தவன் | தாழ்வதும் |
| தலைவிதி | இல்லையடா | – அறிவு | |
| தன்னை | வளர்த்திடு; | உழைப்பில் | நிலைத்திடு |
| தழைத்திடும் | வாழ்க்கையடா! | ||
| விழியைத் | திறந்திடு; | விதியை | மறந்திடு |
| விடிந்திடும் | வாழ்க்கையடா | – உனக்குள் | |
| உறுதியும் | இருக்குது; | உணர்வும் | இருக்குது |
| உயர்த்திடும் | உன்னையடா! | ||
| படிப்படி | யாகவே | நீஉயர் | அதுதரும் |
| வெற்றித் | திலகமடா | – உன்னைப் | |
| பழித்து | நகைத்தவர் | வியந்து | அடங்குவார் |
| பகட்டு | உலகமடா! | ||
| தூண்டில் | போடு; | கண் | மிதவை |
| மீனைப் | பிடித்திடடா | - கொஞ்சம் | |
| பாதை | மாறினால் | தேடிய | கோடியும் |
| பாழாய்ப் | போகுமடா! | ||
| செல்வம் | சேர்ந்ததும் | செருக்கும் | சேர்ந்திடும் |
| தூரத் | துரத்திடடா | – அதுஉன் | |
| சீரையும் | கெடுக்கும் | பேரையும் | கெடுக்கும் |
| சிந்தனை | செய்திடடா! | ||
| அடக்கம் | வள்ளுவர் | குறள்நெறி | கூறும் |
| அதுதான் | வாழ்க்கையடா | – இதை | |
| அறிந்தே | வாழ்ந்திடு; | அறியா | மூடர்கள் |
| அழிவார் | உண்மையடா! | ||
| பணமும் | குணமும் | பலருக் | குதவனும் |
| பசிப்பிணி | போக்கிடடா | – ஏழைகள் | |
| பலன்பெற | நலம்பெற | பாங்குடன் | வாழ்ந்திடப் |
| பாதை | திறந்திடடா!! | ||
| புத்தரே | சுநபி | காந்தி | வள்ளலார் |
| போதனை | ஏற்றிடடா | – உனது | |
| முத்திரை | உழைப்பின் | அமுத | சுரபியால் |
| முடவர்க்கும் | உதவிடடா! |
செம்மை வழி நீளும்
| பொறுமையாக | வாழ்ந்துபாரு | போதும் – அதுவே |
| பொன்பொருள் | புகழ்தருமெப் | போதும்! |
| திறமையோடு | பெருமைகளை | சேர்ப்பாய் – இதைவுன் |
| சிந்தனையின் | வித்தாக | ஏற்பாய்! |
| அடக்கமது | வாழ்வுயர்த்தும் | சீரு – அன்பு |
| ஆட்சி;பள்ளம் | நிறைக்கவரும் | நீரு! |
| ஒழுக்கம்தான் | உனையுயர்த்தும் | பாரு – இதை |
| உயிரைவிட | உயர்ந்ததென்று | தேறு! |
| அடுத்தவர்க்கு | உதவுவது | பாண்மை – நல்ல |
| அறச்செயல்கள் | செய்வதுவே | மேன்மை! |
| கெடுத்தவர்க்கும் | நன்மைசெய்ய | தாண்மை – கெட்ட |
| கீழ்குணத்தார் | உறவறுத்தல் | கேண்மை! |
| கல்வியறி | வைப்பெருக்கு | நாளும் – அது |
| கற்றிடக்கற் | றிடப்பெருகிச் | சூழும்! |
| வளமையோடு | வலிமையுனை | ஆளும் – நல்ல |
| வழிநடந்தால் | செம்மைவழி | நீளும்! |
| குணமிருந்தால் | மனம் தருமே | மார்க்கம் – உன்னை |
| குன்றிலிட்ட | விளக்கைப்போ | லாக்கும்! |
| அனைவர்க்கும் | நன்மைசெய்யும் | நோக்கம் – இது |
| அடுத்ததலை | முறைக்குன்னைச் | சேர்க்கும்! |
குடி – குடியைக் கெடுக்கும்
| சாராயத்தைக் | குடிக்காதேடா | சம்பந்தம் | –அதுஉன் |
| சரித்திரத்தை | அழிக்குமடா | சம்பந்தம்! | |
| ஓராயிரம் | தடவைசொல்றேன் | சம்பந்தம் | –அதுஏன் |
| உனக்குப்புரிய | வில்லையடா | சம்பந்தம்! | |
| குடிச்சிப்புட்டு | புலம்புறியே | கோபாலு | –அந்தக் |
| குடி&குடியைக் | கெடுக்குமடா | கோபாலு! | |
| படிச்சுப்படிச்சுச் | சொல்லுறேனே | கோபாலு | –உனது |
| பாதையைநீ | மாத்தலையே | கோபாலு! | |
| அழிஞ்சுபோச்சு | குடும்பம்பாரு | ஆனந்தா | -அவுங்க |
| அழுதுதவிக்கும் | அவதிபாரு | ஆனந்தா! | |
| ஒழிஞ்சுபோன | பலரைப்பாரு | ஆனந்தா | -நீஏன் |
| உணர்ந்துபார்க்க | மறுக்குறியே | ஆனந்தா! | |
| கண்ணுகெடுது | புத்திகெடுது | கண்ணையா | –அது |
| கல்லீரலைக் | குடல்கெடுக்குது | கண்ணையா! | |
| பொன்னுபொருள் | புகழ்அழியுது | கண்ணையா | -இதை |
| புரிஞ்சுதிருந்தி | வாழ்ந்துபாரு | கண்ணையா! | |
| நாலுபேரு | நகைக்கிறாகளே | நல்லையா | –உனக்கு |
| நாணம்வெட்கம் | வீரமில்லையா | நல்லையா! | |
| காலுபின்னுது | வேட்டிநழுவுது | நல்லையா | –உன்னைக் |
| கழுதைகூட | மதிக்கலையே | நல்லையா! | |
| குடிச்சவன்தான் | உருளுரானே | குப்பண்ணா | –அவள் |
| குடும்பம்தெருவில் | அலையதுபார் | குப்பண்ணா! | |
| குடிக்காதநீ | பார்த்தியேயிதை | குப்பண்ணா | -நீயும் |
| குடிக்கலாமோ | வெட்கக்கேடு | குப்பண்ணா! | |
| காந்திபெரியார் | அண்ணாசொன்னார் | கந்தையா | -நீயும் |
| கைதொடாதே | மதுவகையைக் | கந்தையா! | |
| வாந்திமயக்கம் | வறுமையிழிவு | கந்தையா | -உனக்கும் |
| வராதிருக்கத் | திருந்திக்கடா | கந்தையா! | |
| மாடுமனை | தாலிவித்தியே | மன்னாரு | –குடிச்சு |
| மானம்மரி | யாதைகெட்டியே | மன்னாரு! | |
| கேடுகெட்ட | குடியைவிடுடா | மன்னாரு | –சொன்னா |
| கேட்டுக்கடா | திருந்திக்கடா | மன்னாரு! |
புத்தர்-ஏசு-நபி-சிபி!
| பஞ்சத்தை | ஓட்டிடுவார்; | மக்கள் | மீளப் |
| பகுத்தறிவை | ஊட்டிடுவார்; | துணிவைத் | தந்து |
| அஞ்சுநிலை | போக்கிடுவார்; | விழிப்பு | தந்து |
| அவலநிலை | நீக்கிடுவார்; | அடிமை | ஆண்டான் |
| கெஞ்சுநிலை | துறத்திடுவார்; | கீழும் | மேலும் |
| கெடுப்பவனின் | வேரறுப்பார்; | கொடியோர் | நாட்டில் |
| மிஞ்சுநிலை | தடுத்திடுவார்; | அவரைத் | தானே |
| மேதினியில் | மனிதரிலே | தெய்வம் | என்போம்! |
| கொத்தடிமை | ஒழித்தவரை; | கொடுமை | கண்டு |
| குமுறியெழும் | குணத்தவரை; | ஏழை | வாழ |
| நித்தமுழைக் | கின்றவரை; | நேர்மை | நீதி |
| நிலைக்கவழி | செய்பவரை; | உலகே | மெச்சும் |
| வித்தையிலே | வல்லவரை; | நாடு | ஓங்க |
| விடியலினைத் | தந்தவரை; | காலந் | தோறும் |
| முத்தமிழே; | ஆருயிரே; | அமுதே | என்று |
| மூவுலகும் | தலைவணங்கும் | மறுப்பா | ருண்டோ? |
| பசித்திருப்போர் | நிலையறிந்து | அதனைப் | போக்க |
| பாதைவழி | தேடியவர் | புத்த | ரென்போம்! |
| கசிந்துருகிப் | பயிர்வாட | தானும் | வாடும் |
| கருணைமனங் | கொண்டவர்தான் | ராம | லிங்கர்! |
| நசிந்துடலில் | நோயுற்ற | உயிருக் | காக |
| நற்புதுமை | நிகழ்த்தியவர் | ஏசு | நாதர்! |
| புசித்திடவே | புறாகேட்ட | வேட | னுக்குப் |
| பொன்னுடலைச் | “சிபி” | தந்தார்! | உண்டோ |
| சாந்தியொற்று | மையமைதி | சமத்து | வத்தைத் |
| தாரணிக்குத் | தந்து | “நபி” | நெறியில் |
| மாந்தரது | மடமையிருள் | போக்க | வந்த |
| மணிவிளக்கு | சாக்ரட்டீஸ் | லிங்கன் | கமால் |
| காநதி, | பெரி | யார்அண்ணா | திருவள் |
| காட்டும்வழி | நடந்துநல் | அறிவை | ஆள்வோர் |
| ஏந்துசுடர் | ஒளியினிலே | உலகே | உய்யும்! |
| ஏதுயினி | மானுடத்திற் | கிடர்பா | டேது? |
கண்கள்
| கண்ணும் | கண்ணும் | காணும் | போது |
| கவிதை | பேசுது! | கணைகள் | வீசுது! |
| காந்தம் | பிறக்குது! | கதவு | திறக்குது! |
| காதல் | துளிர்க்குது | கதையே | மாறுது! |
| பெண்ணை | ஆணைப் | பிணைக்குது! | இணைக்குது! |
| பேதம் | மறக்குது! | வேதம் | துறக்குது! |
| துடிக்குது! | முடிக்குது! | துள்ளிக் | குதிக்குது! |
| வெடிக்குது | வெறுக்குது! | விளங்க | மறுக்குது! |
| நெறியை | மீறுது! | நிலைமை | மாறுது! |
| உலகைத் | துருப்பென | ஒதுக்கிப் | போடுது! |
| மதியை | அழிக்குது! | மனதை | மயக்குது! |
| சொந்தம் | இழக்குது! | சுகமே | நினைக்குது! |
| உள்ளம் | உடைக்குது! | ஊமை | யாக்குது! |
| உணர்வைத் | தூண்டுது! | உணவை | மறக்குது! |
| கலகம் | விளைக்குது! | கனவில் | மிதக்குது! |
| இன்பம் | தேடுது! | இறகு | முளைக்குது! |
| பொறுமை | இழக்குது! | பெருமை | குலைக்குது! |
| உரிமை | மீறாது! | உறவை | உதறுது! |
| வறுமை | வளமை | வாழ்வை | மறக்குது! |
| வசைவோர்! | இசைவோர்! | ஒன்றென | எண்ணுது! |
| உயரப் | பறக்குது! | ஊஞ்சலில் | ஆடுது! |
| துயரம் | நொறுக்குது! | துணிச்சல் | பெருக்குது! |
| உயிரில் | நுழையுது! | ஒளிந்து | சிரிக்குது! |
| நெஞ்சைப் | பிழியுது! | நெருப்பாய் | எரிக்குது! |
| கட்டும் | கயிராய்! | காலன் | விடமாய்! |
| தூண்டில் | முள்ளாய்த் | தொடருது | படருது |
| கிட்ட | அழைக்குது! | கிறுக்கைப் | பெருக்குது! |
| முட்டா | ளாக்குது! | மோகம் | ஊட்டுது! |
| வீரப் | போர்பல | விளைக்குது! | அழிக்குது! |
| “வெறி”யைத் | தூண்டுது! | வெல்லுது! | கொல்லுது! |
| வெற்றியில் | சிரிக்குது! | கண்ணீர் | இனிக்குது! |
| வீழ்ச்சியில் | சிரிக்குது! | கண்ணீர் | கரிக்குது! |
| அண்ணலும் | நோக்கிட | அவளும் | நோக்கிட |
| கண்ணின் | பிரசவம் | கம்பன் | காவியம்! |
| மும்தாஜ் | ஷாஜகான் | விழிகளும் | நோக்கிட |
| தாஜ்மகால் | பிறந்தது! | உலகம் | வியந்தது! |
| கண்ணொடு | கணணினை | நோக்கிட | வாய்ச்சொல் |
| காணுமோ | பயனெதும்; | வள்ளுவர் | கேட்டார்! |
| அமரா | வதிஅம் | பிகாபதி | கண்மொழி |
| காதலை | வளர்த்தது! | வாய்ச்சொல் | அழித்தது! |
| ரோமியோ | சூலியட் | லைலா | மஜ்னு |
| காவியம் | வந்தது | கண்வழி | தந்தது! |
| அனார்கலி | “கண்”-”வாள்” | சலீமைத் | தாக்கிட |
| அக்பரை | பகைத்தது! | அழிவை | விளைத்தது! |
| சாம்ராஜ் | யங்கள் | எழுந்ததும் | விழுந்ததும் |
| சரித்திரக் | கண்வழிச் | சாதனை! | வேதனை! |
| கண்கள் | கண்களைக் | காண்பது | தவறோ! |
| கண்களில் | வலிமை | தந்தவர் | எவரோ! |
