| அந்திமாலை | வந்தபோது |
| அங்குதென்றால் | தொட்டபோது |
| இந்தமாமன் | நினைப்புனக்கு |
| வந்த | தில்லையா? |
| தூக்கமின்றி | கண்தவிக்க |
| ஏக்கத்திலே | மனந்தவிக்க |
| தீக்குளித்த | உணர்விலே நீ |
| நொந்த | தில்லையா? |
| கொந்தளிக்கும் | கடலைப் போல |
| குமுறுகின்ற | மேகம்போல |
| தத்தளிக்கும் | படகுபோல |
| ஆட | வில்லையா |
| பொன்சிவந்த | முகத்தினிலே |
| பூ” சிதறும் | தேன்துளிபோல் |
| கண்கசிந்து | என்னையெண்ணி |
| வாட | வில்லையா? |
| மன்மதனும் | வில்லெடுத்து |
| மலர்க்கணையை | வீசும்போது |
| உன்மனதில் | என்னுறவு |
| தீண்ட | வில்லையா? |
| முல்லை” நீலம் | ‘மா’ அசோகு |
| தாமரைசேர் | ஐ மலர்கள் |
| மோக தாக | விரக வேகம் |
| தூண்ட | வில்லையா? |
| ஆட்டிவைக்கும் | உணர்வு பொங்கி |
| அடங்கிடாமல் | மீறும் போது |
| போட்டிபோட்டு | என்நினைப்புத் |
| தாக்க | வில்லையா? |
| பூகம்பத்தின் | நெருப்பலைகள் |
| சுனாமி போல | சீறிப்பாய்ந்து |
| புரட்டிப்போட்டு | வறுத்தெடுத்துத் |
| தீய்க்க | வில்லையா? |
| மாது நீயும் | மனத்திரையில் |
| சூது கொண்டு | மறைத்திதனை |
| ஏதுமறி | யாதவள்போல் |
| ஏங்க | வில்லையா? |
| உண்டா – | இல்லையா? |
கருப்பும்-வெறுப்பும்
| காக்கையொடு | குயிலினமும் | யானை | மற்றும் |
| கருப்பாடு | கருங்குரங்கு | கரடி | தானும் |
| பார்க்கும்விழி | நெருப்பான் | கருஞ்சி | றுத்தை |
| பால்கொடுக்கும் | எருமைமுதல் | கரிச்சான் | எல்லாம் |
| நோக்குநிறம் | கடுங்கருப்பு | ஆன | தாலே |
| நொந்துமனம் | வெந்ததுண்டா? | மனிதன் | மட்டும் |
| தீக்குள்விரல் | வைத்ததைப்போல் | கருப்புப் | பெண்ணை |
| தீண்டாப்பொரு | ளாக்கியதை | ஒதுக்க | லாமா? |
| சந்தனத்தைத் | தரும்மரமும் | அழகோ; | முத்தைத் |
| தருகின்ற | சிப்பியென்ன | அழகோ; | தங்கம் |
| தந்தசுரங் | கம்என்ன | அழகோ; | பூத்த |
| தாமரைவாழ் | சேறென்ன | அழகோ; | வைரம் |
| எந்தவிதம் | அழகாகும் | பட்டை | இன்றி |
| இனியதேன் | அழகோ; ஈ | மொய்த்த | தன்றோ! |
| பந்தங்கள் | தொடர்கதையாய் | வளர்த்துக் | காக்கும் |
| பாசமலர் | கருப்பென்றால் | குறையோ | சொல்வீர்! |
| கருப்பாக | குயிலிருந்தும் | குரலி | லினிமை |
| காட்டாமல் | போனதுண்டோ? | தங்கம் | மண்ணில் |
| இருந்தாலும் | வைரமொடு | ஒளிகூட் | டாதோ? |
| எழில்முத்து | அதன்மதிப்பு | குறைவ | துண்டோ? |
| மருந்துக்கும், | விருந்துக்கும் | தேனே | யன்றோ! |
| மணங்கமழச் | சந்தனந்தான் | மறுத்த | துண்டோ? |
| கருப்பாக | இருக்கும்பெண் | சமுதா | யத்தைக் |
| காக்கின்ற | குலமகள்தான் | வெறுக்க | லாமோ? |
| படைப்பினிலே | கருப்பென்ன, | சிவப்பு | என்ன? |
| பண்பு | “குண நலன்” | மாறிப் | போவ துண்டோ? |
| எடைபோட்டுப் | பார்க்கின்றீர்! | அவளும் | தாய்மை |
| எய்திப்பின் | சந்ததியை | வளர்த்தல் | காண்பீர்! |
| தடைபோடும் | மணப்புழுக்கம் | தாண்டி | வாரீர்! |
| தளிருடலாள் | இரத்தம்அது | சிவப்பு | காண்பீர்! |
| கடையோரம் | மனதிலிதை | ஏற்றுக் | கொண்டு |
| கருணையுடன் | வாழ்வளிப்பீர்! | பெருமை | சேரும்! |
அவையடக்க வணக்கம்
| பண்அம் | பலப்படுத்தும் | பாட்டரங்கம் | வந்திருக்கும் |
| என்அன்பிற் | குறியோரே! | ஏற்றமிகு | தமிழறிஞர் |
| பாகற்காக் | கவிஞன்நான் | பாவாடை | நானறியேன்! |
| (“பா” கற்காக் | கவிஞன்நான் | “பா”வாடை | நானறியேன்!) |
| மேகக் | கருக்கல்போல் | மென்துளிகள் | நான்தெளிப்பேன் |
| தொடையுண்டு | இலக்கணத்தில் | தொட்டதில்லை | நானதனை |
| அடியுண்டு | இலக்கணத்தில் | அடிபட்டுப் | பழக்கமில்லை |
| நேருண்டு | நிறையுண்டு | நெருங்கிநான் | சென்றதில்லை |
| காயுண்டு | கனியுண்டு | கடித்ததனைப் | பார்த்ததில்லை |
| கருவிளத்தைக் | கூவிளத்தைக் | காசுமலர் | நாள்பிறப்பைக் |
| காரிகை | அலங்காரம் | கண்டதில்லை | கேட்டதில்லை! |
| எழுத்தசையைச் | சீர்தளையை | எதுகையொடு | மோனைகளை |
| அழுத்தமுடன் | கற்றறியேன்; | ஆனாலும் | அவைப்பெரியீர்! |
| அழுத்தமுடன் | பாப்பாட | அரங்கேறி | வந்துவிட்டேன் |
| பழுத்தவனோ, | காயோ, | பார்த்தறிவ | துங்கள்கடன் |
| வெண்பா | கலிப்பா | விருத்தப்பா | சந்தப்பா |
| எந்தப்பா | வையும்நான் | ஏறிட்டுப் | பார்த்ததில்லை! |
| அப்பாவிற் | கப்பா | அருங்கவிதை | பாடியதால் |
| இப்போநான் | கவியரங்கில் | இயல்பாகப் | பாடவந்தேன் |
| குற்றங் | குறையிருந்தால் | கூறுங்கள் | திருந்துகிறேன் |
| கொற்றவனின் | முன்னே | குடிமகனாய் | வணங்குகிறேன்! |
கவியரங்கத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
| ஆண்ட | மொழிச்சிறப்பை | அழகுதமிழ் | மரபுதனை |
| மீண்டும் | நிலைநிறுத்த | மேடைக்கு | வந்தவரே! |
| வில்லெடுத்துப் | போர்தொடுக்கும் | வீர | மறவர்போல் |
| சொல்லெடுத்துப் | போர்தொடுக்கும் | சுழிமுனையைக் | கற்றவரே! |
| மாவரங்கம் | பலகண்ட | மாத்தமிழின் | சீர்கொண்ட |
| பாவரங்கத் | தின்தலைமைப் | பாங்குதனை | ஏற்றவரே! |
| இமைத்தவிழி | திறப்பதற்குள் | ஏழாயிரம் | கவிதை |
| அருந்தமிழி | லியற்றுமாற்றல் | அத்தனையும் | பெற்றவரே! |
| விட்டிழுத்த | மூச்சு | வெளியேறும் | முன்னாலே |
| கொட்டிக் | குவித்திடுவீர் | கோடிக் | கவிதைகளே! |
| தட்டி | எழுப்புவதில் | தமிழுணர்வை | ஊட்டுவதில் |
| திட்டமிட்டுப் | பாடுவதில் | திறன்மிகுந்த | பெருங்கவிக்கோ |
| முப்பழத்தின் | சுவைத்திறல்கள் | வாமுசே | துராமன்தன் |
| செப்பும் | கவிதையிலே | செரிந்திருக்கும் | காண்போமே! |
| மன்றத்தில் | மணியோசை | இவரின் | பேச்சு! |
| மணிமுடிதான் | தமிழுக்கு | இவரின் | ஆற்றல்! |
| குன்றத்து | விளக்காக | இலக்கி | யத்தேன் |
| குடங்குடமாய் | வார்த்தளிக்கும் | தமிழின் | வள்ளல்! |
| என்றைக்கும் | இவர்தொண்டு | தமிழுக் | குண்டு! |
| இவரறியா | நூலில்லை | தேர்ந்த | தேனீ! |
| கன்றுக்குத் | தாய்மடிதான் | சொர்க்கம், | இங்கே |
| கவிப்பெருங்கோ | தான் எங்கள் | கவிதை | சொர்க்கம்! |
கவிஅவைக் கவிஞர்கள்
| பொங்குமெழில் | கவியரங்கை | ஆள | வந்த |
| புகழ்க்கவிஞர் | கணக்காயன் | கண்ம | தியன் |
| சங்கம்வளர் | தமிழ்மார்சல் | முருகன் | காரைக் |
| கிழாரோடு | அசோக்ராசு | தியாக | ராசன் |
| மங்காத | தமிழிலக்கு | வனாரின் | மைந்தர் |
| மானமிகு | திருவள்ளுவர் | சென்னை | ஆண்ட |
| தங்குபுகழ் | சாகணேசன் | ஆண்டவ | ரோடு |
| சவகர்லால் | ராஜேந்திரன் | டான்ஸ்ரீ | குமரன் |
| டத்தோஸ்ரீ | சாமிவேலு | செங்குட் | டுவன் |
| இரபியுதீன் | அயூப்போடு | சேக்அப் | துல்லா |
| டத்தோஆம் | நடராஜா | அருளின் | தந்தை |
| பேராயர் | எஸ்றாசற் | குணம்போன் | றோர்கள் |
| இத்தேசம் | எத்தேசம் | தமிழி | ருக்கோ |
| இவர்களங்கே | சிறந்திருப்பர் | பசீரலி | அப்பாஸ் |
| உத்தேசம் | பலநண்பர் | பெயரைச் | சொல்லி |
| உவந்துரைக்க | மனமுன்டு | நேரம் | இல்லை! |
களிப்புரை

| கவிமாமணி – உனது |
| கவி “மா” மணி! |
| அறந்தைத்திருமாறா! நீ என்ன |
| அன்னைத் தமிழின் ஆணிவேரா! |
| அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு |
| வரந்தாங்கி நிற்கிறது! |
| சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு |
| ஏற்றம் பாட்டிலுண்டு! |
| மரபுக் கவிதை – உனக்கு |
| உறவுக் கவிதையோ! |
| காவியத் தமிழோ – உன்கவிதை |
| ஓவியத் தமிழோ! |
| உன்னை வரவேற்கும் – வருங்கால |
| சென்னைத் திரையுலகம்! |
| வாழ்கநீ பல்லாண்டு – |
| வளமானதமிழ்ச் சொல்லாண்டு! |
| நிமிர்ந்து |
| நெஞ்சுயர்த்தி வாழ்த்தும் |
கவிஞர். காசி முத்துமாணிக்கம்






