அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதை 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு – 2009 மலேசியா தமிழ்ப்பல்கலைக்கழக அரங்ககோலாலம்பூர், மலேசியா
வெடிக்கின்ற | எரிமலையை; | பாய்ந்து | சீறி |
விரிகின்ற | நெடுநதியை; | நாளும் | ஓயா(து) |
அடிக்கின்ற | கடலலையை; | மேகத் | துள்ளே |
அலறுகிற | இடியொலிகள் | அனைத்தும் | பேச்சில் |
வடிக்கின்ற | ஆற்றலர்யார்; | கருத்தை | யள்ளி |
வழங்குகொடை | வள்ளல்யார்; | மடமை | கண்டு |
துடிக்கின்ற | உளத்தவர்யார்; | புரட்சி | யாளர் |
தொடருக்கே | ஒளிவிளக்கு | அண்ணா | வன்றோ! |
மாண்டதுவோ | முன்பிருந்த | வீர | மெல்லாம்! |
மடிந்ததுவோ | புறம்கண்ட | வரலா | றெல்லாம்! |
தீண்டவரும் | கொடுநாக | இந்தி | யென்றால்! |
தீர்த்துவிடு! | ஏன் | தயக்கம் | எடுநீ வாளை! |
பூண்டறுத்து | எருவாக்கித் | தமிழ்நன் | செய்யில் |
பூக்கவிடு! | புதுப்பரணி | தொடுநீ | போரே! |
ஆண்டயின | வழிவந்த | அரிமா | வேநீ |
ஆர்த்தெழுவாய் | என்றவர்யார் | அண்ணா | வன்றோ! |
பாட்டுநடைப் | பேச்சுக்கு | மன்னன்; | ஒன்றிப் |
பழகுவதில் | கன்னலெனும் | அண்ணன்; | காளை |
மாட்டுநடை | சாய்த்திட்ட | வண்ணன்; | இந்தி |
மறித்திடவே | படைகொண்ட | தென்னன்; | தேர்தல் |
கூட்டுநடை | போடுவதில் | கண்ணன்; | தமிழர் |
குடிப்பெருமை | காத்ததிலே | முன்னோன்; | மாற்றார் |
கேட்டுநடை | செயலழிக்கும் | எண்ணன்; | முற்றல் |
கிழவர்க்கும் | அண்ணன்ஆம் | அண்ணா | அன்றோ! |
இருள்போக்கும் | ஒளிமூட்டம்! | எழுச்சிக் | கோட்டம்! |
இளந்தமிழர் | படைகூட்டும் | செயலின் | தோட்டம்! |
மருள்நீக்கும் | அறிவாக்கம்! | மாண்புத் | தேக்கம்! |
மனந்தளராச் | செயலூக்கம்! | மங்கா | நோக்கம்! |
அருள்சுரக்கும் | பகுத்தறிவின் | கூட்டம்! | நாட்டோர் |
அன்பிணைந்து | இனிதுவக்கும் | தேட்டம்! | ஆற்றல் |
விறல்சேர்க்கும் | பொருந்தாணைத் | தலைமைத் | தங்கம்! |
வீணான | மடமைகளைச் | சாய்த்த | சிங்கம்! |
அறந்தாங்கி | நெறிதாங்கி | கொள்கை | தாங்கி |
அன்பறிவைத் | தான்தாங்கி | மக்கள் | போற்ற |
புறந்தாங்கும் | அகந்தாங்கும் | இலக்கி | யத்தை |
பூதாங்கும் | தேன்தாங்கி | சுவையாய்த் | தந்தே |
திறந்தாங்கி | உரந்தாங்கி | எழுச்சி | யோடு |
தேன்தமிழை | வாழ்விக்க | இந்தி | மாய்க்க |
மறந்தாங்கி | ஆர்த்தெழுவீர்! | மானங் | காப்பீர்! |
மாத்தமிழீர்! | என்றவர்யார் | அண்ணா | வன்றோ! |
தம்பிமார் | பலபேர்க்கு | அண்ண | னானார்! |
தமிழ்காக்கப் | படைதிரட்டும் | தலைவ | ரானார்! |
வம்பிழுக்கும் | மாற்றார்க்கும் | நண்ப | ரானார்! |
வளரும்நல் | புதுக்கலைக்குத் | தந்தை | யானார்! |
வெம்புகிற | மக்களுக்கு | வழிகள் | காட்டி |
வேற்றுமொழி | தடுக்கின்ற | கோட்டை | யானார்! |
தெம்புதரும் | மாமருந்தாய் | தமிழர் | வாழ்வில் |
திருப்பத்தைத் | தந்ததனால் | இமயம் | என்பேன்! |
அறநெறியில் | வாழ்ந்ததனால்; | கல்வி | கேள்வி |
ஆற்றலிலே | தேர்ந்ததனால்; | தமிழைத் | தாங்கி, |
வரலாறு | படைத்ததனால்; | மாற்றான் | தோட்ட |
மல்லிகையை | மதித்ததனால்; | போராட் | டத்தில் |
அறமுறையைப் | புகுத்தியதால்; | தொண்டார் | தன்னை |
அன்பதனால் | கட்டியதால்; | கையைத் | தூக்கி |
ஒருவிரலால் | உன்னைத்தான் | தம்பி | என்றே |
ஒப்பரிய | செய்ததனால் | இமயம் | என்பேன்! |
நின்றாலோ | பொதுக்கூட்டம்! | நடந்தா | லாங்கே |
நீண்டதொரு | ஊர்வலந்தான்; | பொதுக்கூட் | டங்கள் |
என்றாலோ | மாநாடு; | தேனீ | போலே |
எழுச்சிமிகு | தம்பிகளின் | கூட்டம் | கூடும்! |
வென்றாளும் | இப்படையா | தோற்கும்; | வேறு |
எப்படைதான் | வென்றுவிடும்; | வரட்டும் | என்பார்! |
குன்றாத | உளத்தோடு | எதையும் | தாங்கும் |
இதயத்தைப் | பெற்றதனால் | இமயம் | என்பேன்! |
மூஞ்சியைப்பார் | முகரையைப்பார் | என்றே | மாற்றார் |
முறைகேடாய்த் | திட்டியதை; | பிறப்பைப் | பற்றி |
காஞ்சிநகர் | வீதியிலே | பலகை | தன்னில் |
கடுஞ்சொல்லால் | எழுதியதை; | அய்யா | கூட |
வாஞ்சையொடு | கண்ணீர்த்துளி | பசங்க | ளென்று |
வடுச்சொற்கள் | வீசியதை; | அகழ்வார் | தாங்கும் |
பூஞ்சோலை | நிலம்போல | தாங்கிக் | கொண்ட |
புனிதரதனால் | அரசியலில் | இமயம் | என்பேன்! |
நாடெல்லாம் | தமிழன்போய் | வாழு | கின்றான் |
நாடில்லை | தமிழனுக்கு | தமிழ்நா | டென்று |
நாட்டிற்குச் | சென்னையென | இருந்த | பேரை |
நயமுடனே | தமிழ்நாடென் | றாக்கித் | தந்தார்! |
வேட்டுமுறை | ஓட்டுமுறை | இரண்டில் | ஆட்சி |
வேரூன்ற | ஓட்டுமுறை | தேர்ந்த | மேதை |
நாட்டிலுள்ள | ஏழைகளின் | சிரிப்பில் | அண்ணா |
இறைவனையே | கண்டதனால் | இமயம் | என்பேன்! |
பேச்சாளர், | எழுத்தாளர், | ஆய்ந்து | தேர்ந்த |
பிழையறியாப் | பேரறிஞர்; | கதையா | சிரியர்! |
ஆச்சரியம் | வேண்டாமிவர் | நடிகர்; | நல்ல |
ஆசிரியர் | பத்திரிகை | உலகில்; | மேலும் |
மூச்சிருக்கும் | வரைமாறாக் | கொள்கை | கொண்ட |
முன்னோடி; | தனித்தலைவர்; | புதுமைச் | சிற்பி |
மாச்சரியம் | கடந்தெவரும் | போற்றும் | பண்பின் |
மாண்புடைய | அண்ணாவை | இமயம் | என்பேன்! |
அரசியலில் | அண்ணாஓர் | இமயம் | என்பேன்! |
அவருக்கு | நிகர்அவரே! | அதனால் | சொன்னேன்! |
முரசறைவார்; | உன்னைத்தான் | தம்பி | என்பார்! |
மூள்பகையை | ஒடுக்கிடவா | வாவா | என்றே |
அறைகூவ | லும்விடுவார்! | ஆர்த்துப் | பாயும் |
அடலேறை | யும்அடக்கி | அமைதி | காப்பார்! |
விரைந்தோடும் | காட்டாற்றின் | திசையை | மாற்றி |
வீரத்தில் | விவேகத்தைப் | பயிரே | செய்வார்! |
அடக்குமுறை | ஒடுக்குமுறை | சிறைக்கூ | டங்கள் |
அச்சுறுத்தும் | போர்ப்பரணி | ஆர்ப்பாட் | டங்கள் |
இடக்குமுறை | கெடுக்குமுறை | எதிர்ப்பு | காய்ப்பு |
இழிமொழிகள் | பழிவழிகள் | மிரட்டல் | எல்லாம் |
தடுக்கும்முறை | கற்றிருந்தார்! | புத்தர் | காந்தி |
தத்துவத்தை | அஹிம்சைதனைப் | பெற்றி | ருந்தார்! |
அடுக்கும்முறை | செய்திட்டார்! | அதனால் | சொல்வேன்! |
அரசியலில் | அண்ணாஓர் | இமயம் | என்பேன்! |
படியரிசி | போட்டதனால்: | பஞ்சம் | தன்னைப் |
பறந்தோடச் | செய்ததனால்; | லஞ்சம் | தன்னை |
அடிகொடுத்து | விரட்டியதால்; | ஊழல் | தன்னை |
அண்டவிடா | தாக்கியதால்; | அதிகா | ரத்தை |
பிடித்தொடித்துத் | தனதாக்கிக் | கொள்ளா | ததால் |
பின்பாட்டுப் | பாடிடஆள் | வைக்கா | ததால் |
படிப்படியாய் | பொதுப்பணத்தில் | பங்க | ளாக்கள் |
படகுக்கார் | வாங்காததால் | இமயம் | என்பேன்! |
ஒட்டித்தான் | பிறந்தோமா | இல்லை; | இன்னும் |
ஒருதாய்தான் | பெற்றாளா; | அதுவும் | இல்லை! |
எட்டியெட்டி | தனித்தனித்தாய் | பெற்றுங் | கூட |
எல்லோரும் | ஓர்குடும்பம் | ஆக்கி | வைத்தார்! |
கட்டிவிட்டார் | பாசமெனும் | மாயத் | தாலே |
கழகமே | குடும்பமென | ஆக்கிப் | பார்த்தார்! |
சுட்டுவிரல் | நீட்டுகிற | அண்ணா | சொல்லில் |
சொக்காதார் | யாரதனால் | இமயம் | என்பேன்! |
கடல்மடையோ | திறந்ததென | மாற்றார் | போற்றும் |
கருத்துநிறை | பேச்சுக்கு | நாக்கைத் | தந்தார்! |
மடமைகளை | வேரறுத்துச் | சீர்தி | ருத்த |
மாப்பணிகள் | புரிவதற்கு | அறிவைத் | தந்தார்! |
விடமனைய | இந்தியினை | மறிப்ப | தற்கு |
வியக்கின்ற | வகையினிலே | எதிர்ப்பைத் | தந்தார்! |
கொடுவாளும் | கடுஞ்சிறையும் | கண்டு | அஞ்சாக் |
குணக்குன்று | புற்றுநோய்க்கு | உடலைத் | தந்தார்! |
பிறப்பென்பார் | இறப்பென்பார் | அதனை | வென்று |
பெருவாழ்வு | வாழ்கிறவர் | அண்ணா | வன்றோ! |
இறப்புலகு | சென்றாலும் | தமிழ்நாட் | டாரின் |
இதயத்தில் | வாழ்கிறவர் | அண்ணா | வன்றோ! |
சிறப்பாகச் | சொல்வதெனில் | அண்ணா | இன்னும் |
சாகவில்லை | வாழ்கின்றார் | நூற்றாண் | டாக |
சுரக்கின்ற | கவிதையது | பொங்கப் | பொங்க |
சூழ்நிலையால் | முடிக்கின்றேன் | வணக்கம்! | நன்றி!! |
.