முல்லைக்கு தேர் வேண்டாம்

கொடு;இல்லாதவர்க்குநீகொடு!
குடும்பத்தைவாழ்விக்கக்கொடு!
வடு,எவரும்படாதிருக்கக்கொடு:-
வடிக்குமுன்காத்தவரைவாழ்விக்கக்கொடு!
பசித்துயரைநீக்கிவிடக்கொடு!
பார்வையிலேஅதையறிந்துகொடு!நீயும்
புசிக்கும்போதும்பிறர்க்குக்கொடு!
பூத்திருக்கும்இறைமனமும்பூத்திருக்கும்கொடு!
பிறவியிலேகண்ணில்லார்காலில்லார்உழைக்கக்
கையில்லார்நிலையறிந்துகருணையொடுகொடு
உறவிழந்துவயதிழந்துநடைதளர்ந்தபேர்க்கு
உன்னாலேஅவர்க்கியன்றஉதவிகளைக்கொடு!
கையில்லாமயிலுக்குப்போர்வைதரவேண்டாம்
கையாலாகாநிலைபேர்கண்டறிந்துகொடு!
கொடிமுல்லைபடரவொருகொம்பின்றிதேர்
குடிசையிலேவறுமையிலேகுமுறுவோர்க்குக்கொடு!
படிப்பதற்குப்பணமின்றிதவிப்பவர்க்குக்கொடு!
பரதேசிநிலைமாறதுணிவகைகள்கொடு!
நொடிப்பொழுதில்இரத்தம்அவர்இறக்குமுன்கொடு!
நோய்நொடியில்தவிப்போர்க்குஅதுநீங்ககொடு!
கொடுப்பார்க்குச்செல்வங்கள்குறையாதுகொடு!
கொடுஉனக்குஇறைவனள்ளிக்கொடுத்தபொருள்கொடு!
கொண்டுவந்ததேதுஅவன்கொடுக்காதபோது
கொண்டுநீபோவதெங்கேகொடுத்துவிடுஇங்கே!
Back to Top