உனக்கொரு காலம்வரும்

உனக்கொருகாலம்உண்டடாமனிதா
கவலையைவிட்டுவிடு–உன்னை
இகழ்ந்தவர்புகழ்ந்திடவாழ்ந்துகாட்டிடு
தலையைநிமிர்த்திவிடு
தாழ்ந்தவன்உயர்வதும்உயர்ந்தவன்தாழ்வதும்
தலைவிதிஇல்லையடா– அறிவு
தன்னைவளர்த்திடு;உழைப்பில்நிலைத்திடு
தழைத்திடும்வாழ்க்கையடா!
விழியைத்திறந்திடு;விதியைமறந்திடு
விடிந்திடும்வாழ்க்கையடா– உனக்குள்
உறுதியும்இருக்குது;உணர்வும்இருக்குது
உயர்த்திடும்உன்னையடா!
படிப்படியாகவேநீஉயர்அதுதரும்
வெற்றித்திலகமடா– உன்னைப்
பழித்துநகைத்தவர்வியந்துஅடங்குவார்
பகட்டுஉலகமடா!
தூண்டில்போடு;கண்மிதவை
மீனைப்பிடித்திடடா- கொஞ்சம்
பாதைமாறினால்தேடியகோடியும்
பாழாய்ப்போகுமடா!
செல்வம்சேர்ந்ததும்செருக்கும்சேர்ந்திடும்
தூரத்துரத்திடடா– அதுஉன்
சீரையும்கெடுக்கும்பேரையும்கெடுக்கும்
சிந்தனைசெய்திடடா!
அடக்கம்வள்ளுவர்குறள்நெறிகூறும்
அதுதான்வாழ்க்கையடா– இதை
அறிந்தேவாழ்ந்திடு;அறியாமூடர்கள்
அழிவார்உண்மையடா!
பணமும்குணமும்பலருக்குதவனும்
பசிப்பிணிபோக்கிடடா– ஏழைகள்
பலன்பெறநலம்பெறபாங்குடன்வாழ்ந்திடப்
பாதைதிறந்திடடா!!
புத்தரேசுநபிகாந்திவள்ளலார்
போதனைஏற்றிடடா– உனது
முத்திரைஉழைப்பின்அமுதசுரபியால்
முடவர்க்கும்உதவிடடா!
Back to Top