Skip to content
மூடப் | பழக்கத்தை | மூடு | – வாழ்வின் |
முன்னேற்ற | வழித்தடத்தை | நாடு! | |
ஓடிப் | பொருள்புகழ் | தேடு | – அயரா |
உழைப்புதான் | உயர்வென்று | பாடு! | |
| | | |
எவரெவரும் | சமமென்று | ஆக்கு | – நாட்டில் |
ஏழைபணக் | காரன்நிலை | நீக்கு! | |
தவறாது | கல்விதொழில் | ஊக்கு | – ஆய்ந்து |
தளிர்க்கட்டும் | இளைஞர்மனப் | போக்கு! | |
| | | |
வளரவிடு | புதுமைகளைப் | பற்றி | – அது |
வழிதிறந்தால் | உலகுபெறும் | வெற்றி! | |
புலரட்டு | அறிவுலகம் | பெற்றி | – ஆங்கே |
போய்மறையும் | பேதமைகள் | வற்றி! | |
| | | |
பஞ்சமினி | யில்லெயெனச் | சொல்லு | – ஆன்ற |
பகுத்தறிவால் | உலகத்தை | வெல்லு! | |
துஞ்சுவதை | கெஞ்சுவதைக் | கொல்லு | – எதிலும் |
துடிப்போடு | முன்னேறி | நில்லு! | |
| | | |
நம்பிக்கை | கொண்டு | நீவாழு | – அறிவு |
நன்மைதரும் | இன்பமெலாம் | சூழும்! | |
தெம்புகொள் | உறுதியுனை | ஆளும் | – எட்டுத் |
திசைமுழுதும் | புகழ்பரவி | நீளும்! | |
Back to Top