Skip to content
நெல்லொன்று | முளைக்குமே; | கிளைஏழு | விரிக்குமே |
கதிரொன்றில் | நூறுநெல்; | கிளைஏழும் | விளைக்குமே! |
சொல்லொன்று | விரியுமே; | பொருள்நூறு | சிரிக்குமே! |
செம்மொழியாம் | நம்தமிழின் | சிறப்பதிலே | இருக்குமே! |
எள்ளியொரு | குப்பையிலே | எடுத்தெரிந்த | கொட்டையுமே |
தளிர்த்தங்கு | வளர்ந்தொருநாள் | மாங்கனிகள் | தருதல்போல் |
நல்லிதய | மில்லாத | நரிக்கூட்டம் | நம்தமிழை |
அள்ளியெறிந் | தழித்தார்கள் | இதுதானே | வரலாறு! |
ஆரியர்கள் | களப்பிரர்கள் | வடுகரொடு | மராட்டியர்கள் |
அடுத்தடுத்து | இசுலாமியர் | ஆங்கிலேயர் | தொடர்கதைபோல் |
சீரியநம் | தமிழழித்து | அவரவர்கள் | மொழிதனையே |
சிம்மாசனம் | ஏற்றியுமே | செந்தமிழைப் | புறக்கணித்தார்! |
மாறியது | அவர்களது | ஆட்சியதி | காரங்கள் |
மாறவில்லை; | மாற்றமில்லை; | அழிவில்லை | தமிழுக்கு |
தேறியது; | செந்தமிழும் | செம்மொழியாய் | உலகறிய |
செழித்ததுவும்; | வளர்ந்ததுவும்; | தழைத்ததுவும் | தமிழ்தானே! |
தொல்காப்பியர் | இளங்கோமுதல் | ஈரடியார் | நாலடியார் |
நாயன்மார் | சித்தர்முதல் | நற்சங்கப் | புலவர்களும்! |
ஒல்காப்புகழ் | கம்பரம்பி | காபதியொட்டக் | கூத்தர் |
வில்லியோடு | நக்கீரர் | புகழேந்தி | அவ்வையார் |
திரிவட | ராசப்பர் | சுப்ரதீபக் | கவிபோல்வார் |
அரிதான | தமிழ்காத்து | அரியணையில் | ஏற்றினார்கள்! |
தென்னாட்டு | மன்னர்பலர் | புலவர்களின் | புரவலராய் |
எந்நாளும் | காத்ததனால் | செந்தமிழும் | செழித்ததன்றோ! |
காற்றடித்தால் | நாணலது | கண்டிப்பாய் | ஒடியாது! |
கயவர்கள் | சூழச்சியினால் | கன்னித்தமிழ் | அழியாது! |
சீற்றமிகு | “கடற்கோளில்” | சிக்கிப்பின் | மீண்டதுவே |
முடத்திருமா | றன்மூலம் | கடைச்சங்கம் | கண்டதுவே! |
முதற்சங்கம் | இடைச்சங்கம் | மூழ்கினும் | தமிழ்மட்டும் |
வாழ்கிறது | கன்னியாக | வற்றாத | இளமையோடு |
மொழியடிமை | கொள்ளுதற்கு | முனைந்தார்அறு | பத்தைந்தில் |
முழுமூச்சில் | பலபேர்கள் | உயிர்தந்து | தமிழ்காத்தார்! |
சங்கத்தில் | வளர்ந்ததமிழ்! | தாய்மடியில் | தவழ்ந்ததமிழ்! |
சிங்கத்தின் | நடைபோட்டுச் | சிம்மாசன | மிருந்த |
பொடுங்கருவி | எனப்புலவர் | பொன்னாவில் | தழைத்ததமிழ்! |
புதுமையெழில் | கன்னியெனப் | பூத்திருக்கும் | இனிய |
மங்காத | செம்பொன்னாய் | மணிமுத்தாய் | ஒளிகாட்டி |
எங்களது | வாழ்வோடு | இணைந்திட்ட | சடர்மணியே! |
திங்களிளம் | பருதிகாற்று | வானமொடு | பூமிபோல |
செந்தமிழே | நீ | வாழ்க! | செம்மொழியே |
Back to Top