கோயிலுக்குப் போனாள் கோதை!

பன்னீரில்குளித்தாள்!பஞ்சுதுகிலால்தலையை
தண்ணீர்சுவடகலத்தாட்டினாள்!குழல்மணக்கப்
புகைகாட்டினாள்;கந்தப்பொடியூட்டினாள்;நூறு
வகைகாட்டிஆடிமுன்வடிவழகைமெருகிட்டாள்!
கொடிமுல்லைப்பூச்சரத்தைக்கொத்தாகக்குழல்சொருகி
விடிவெள்ளிகார்குழலில்விழித்திருக்கப்பூரித்தாள்!
பொட்டிட்டாள்!மையிட்டாள்!பொற்பதுமைசிரித்துத்தன்
மொட்டுப்பல்சீர்பார்த்தாள்!முகப்பளிங்குக்கன்னத்தில்
தன்னழகைமேலுயர்த்தத்தளிர்க்கரத்தால்கருப்பிட்டாள்!
முன்னழகைப்பின்னழகைமுடியழகைரசித்திட்டாள்!
நேர்வகிடுதானெடுத்தாள்!நெத்திப்பிறையிட்டாள்!
வார்குழலில்ஒன்றிரண்டைவரிபிரித்துத்தொங்கவிட்டாள்!
பதட்டமுடன்வாலிபர்கள்பார்த்துக்களிகொள்ளும்
உதட்டுக்குச்சாயமிட்டாள்!உடுத்திடவேவிதவிதமாய்
கட்டழகைக்கூட்டும்காஞ்சிபுரம்பட்டு
தொட்டஇடம்வழுக்கும்தோகைமயில்வண்ணத்தில்
மைசூருபெங்களூருபனாரஸ்கொல்லேகால்
கைசோரும்மட்டும்கலைத்துப்பின்மனம்விரும்பும்
திருப்புவனம்பட்டைத்தேர்ந்துஎடுத்திட்டாள்!
இருப்பாளே!பறப்பாளோ!எனவியக்கஅணிந்திட்டாள்!
திருப்பிநின்றுள்ளாடைசீர்திருத்திபூச்செண்டை
அரும்பும்தன்பேரழகின்அணிமாடம்ஆக்கிட்டாள்!
காதணிகள்,கையணிகள்,கம்மலொடுகழுத்துநகை
போதுமட்டும்அணிந்தாள்!பொன்பட்டுஆடைமேல்
கந்தங்கள்தெளித்தாள்!காமனுக்கேமயக்கம்வரும்!
சித்திரப்பூப்போட்டசிறுகைக்குட்டையினை
முத்திரைமோதிரம்போல்முன்கொசுவம்சொருகிட்டாள்
இந்தவிதமாகஎழிலரசிபுறப்பட்டாள்!
வீடுவிட்டாள்,வாசல்விட்டாள்.வீதிதொட்டாள்.முகில்கண்டு
கூடும்,மயில்மெய்சிலிர்த்துக்குலுங்குவது
விண்ணிருந்தநிலவிறங்கிவீதிக்குவந்ததுவோ!
பெண்ணணங்கோ!மாயையோ!பேரழகோ!அடடா
மேனகையோ!ரம்பையோ!திலோத்தமையோ!ஊர்வசியோ
மோகினியோ!ரதிதானோ!மெல்லியலாள்அபரஞ்சி
தானோ!என்றாடவர்கள்தடுமாறப்
மானோ!இவளென்னமண்ணுலவும்தாரகையோ!
என்றஞ்சிவியத்தார்கள்!இளவட்டக்காளையர்கள்
பட்டாடைகட்டிப்பார்ப்போரைமயக்குமிச்
சிட்டாள்,யார்?என்றறியச்சென்றார்பின்
மொட்டவிழ்ந்துமணம்பரப்பும்மோகினியைத்தொட்டுவிட
கிட்டவந்தோர்பலருண்டு!கிறுக்குப்பிடித்தவராய்
வட்டமிடும்வயோதிகவாலிபர்கள்நிறையப்பேர்!
ஊர்வலமோ!உற்சவமூர்த்தியின்அலங்காரத்
தேர்வலமோ!என்றென்னதேவதைகோயில்வந்தாள்!
காற்செருப்புக்கழற்றினாள்!காவலர்பாதுகைவாங்கி
மேற்செருப்பாய்வைத்தார்கள்மிகப்பரிந்துஉள்ளழைத்தார்!
துண்டிப்புக்கட்டிதிருநீருமெய்க்கணிந்த‘
சிண்டாளர்,சிகையாளர்,சீர்மிக்கபூநூலார்
கொண்டாடிவரவேற்றார்!கோலமென்ன?யாரிவளோ?
திண்டாடினார்பக்தர்!திகைத்துத்தவித்தார்கள்?
ஊதுவார்,கொட்டுவார்,உற்றுற்றுப்பார்த்தார்கள்!
ஓதுவார்,பாடுவார்,ஒன்றறியாமல்விழித்தார்!
இட்டஅடிபெயர்த்தாள்!இங்குகம்பன்மகனிருந்தால்
விட்டஇடம்தொட்டுமேலுமொருகாவியத்தை
கொட்டிக்குவித்திருப்பான்!கோயிலிதைமறைந்திருப்பான்!
அட்டியின்றிஅம்பிகாபதிக்கோவைஇரண்டிருக்கும்!
தட்டொன்றுவாங்கத்தன்கண்ணோட்டத்தை
விட்டாள்,கடைமீது!வேதசாஸ்த்திரப்படிக்கு
தேங்காய்,ஊதுபத்தி,திருநீரு,சூரணங்கள்.
பாங்காய்வெற்றிலைபழத்தோடுகற்பூரம்
பலரெடுத்துநீட்டினார்கள்!பாவையோமனம்போல
மலரும்அதிலிருக்கமகிழ்ந்தவளாய்ஓர்தட்டு
விலைகொடுத்துவாங்கினாள்!விழிதரையைப்பார்க்க
தலைகுனிந்து,தட்டேந்தி,தளிர்நடையுடன்வந்தாள்!
காணிக்கைச்செலுத்தினாள்!கைகுவித்துவணங்கினாள்!
மேனிக்கைக்கரம்உயர்த்திவேண்டினாள்;பக்தியுடன்
கற்பூரம்தொட்டாள்;கண்ணொற்றிமெய்மறந்தாள்
பொற்பூரும்மேனிபுல்லரிக்கமவுனியாய்
வினைமறந்துநின்றாள்!விழிதிறந்துமூலவரை
மீண்டுமொருமுறைவணங்கிமேனகைபுறப்பட்டாள்!
ஆண்டவன்அருள்பெற்றாள்ஆங்கு!
Back to Top