Skip to content
மாலையிலே | அன்றொருநாள் | தென்றல் | தேடி |
மயக்குகிற | தங்கநிற | வெயிலும் | நாடி |
சாலையிலே | நான்சென்றேன்; | ஊருக் | கப்பால் |
தனிமையிலே | உலாவுதற்கே; | ஆங்கோர் | வீட்டில் |
பாளையிலே | மொட்டடுக்கி | வைத்த | பல்லின் |
பாங்கான | இளநகையைச் | சிந்து | கின்ற |
சோலையிலே | அன்றலர்ந்த | மலரைப் | போன்ற |
சொல்லுக்குள் | அடங்காத | ஒருத்தி | நின்றாள்! |
பருவத்தில் | பதினாறு | வயது | கொண்டாள்! |
பார்வையிலே | காந்தத்தைக் | கண்ணில் | கொண்டாள்! |
உருவத்தில் | பொற்பதுமை | உவமை | கொண்டாள்! |
உள்ளத்தில் | காதலெனும் | வேட்கை | கொண்டாள்! |
அறுபத்து | நாற்கலையின் | மாயம் | கொண்டாள்! |
அடுத்தெவர்க்கும் | இல்லாத | அழகு | கொண்டாள்! |
பருவத்தை | உருவத்தை | யார்பார்த் | தாலும் |
பார்த்தவிழி | பார்த்ததுதான் | அடிமை | கொள்வாள்! |
மான்நின்றாள்; | நான்சென்றேன்; | விழிவீச் | சாலே |
மதிமறந்து | நான்நின்றேன்; | இதழ்வி | ரித்தாள்! |
ஏன்சென்றேன் | ஏன்நின்றேன் | அறியா | னாகி |
ஈதேனில் | வீழ்ந்ததுபோல் | நிலைமை | கொண்டேன்! |
தேன்வென்ற | சொல்லாலே | அழைத்த | தைப்போல் |
தீர்மானம் | நான் | கொண்டேன்: | அவளோ |
தான் | ஒதுக்கி | சரிசெய்தாள்! | இன்ப |
தனைக் | கடந்து | கால்பின்ன | தவித்து |
வீட்டினிலே | அவள்தவிர | எவரும் | இல்லை! |
வீதியிலோ | சந்தடிகள் | அதிகம் | இல்லை! |
கூட்டினிலே | தனித்திருக்கும் | பெண்புறாவைக் | |
கொஞ்சுதற்கு | நான் | துணிந்தேன்; | அவளும் |
பாட்டினிலே | எனக்குஒரு | அழைப்பு | விட்டாள்! |
பசியார | வரலாமே | என்பதைப் | போல் |
கேட்டுவிட்டு | நெருங்காமல் | நானி | ருந்தால் |
கிறுக்கனுக்கும் | எனக்கும்வே | றுவமை | உண்டோ! |
கரைஉடைத்து | காட்டாறு | புகுந்த | தைப்போல் |
கதவடுத்து | உட்சென்றேன்; | நிமிடம் | தன்னில் |
அறையடுத்து | அவள்சென்றாள்; | நெருங்கி | விட்டேன் |
அப்போது | அவள்சொன்னாள்; | அப்பா | அம்மா |
வருகின்ற | நேரமென்றாள்; | அப்பா | அம்மா |
வந்திடட்டும் | தலையறுத்து | வீழ்த்து | வாரோ! |
நிறைமதியுன் | கன்னத்தில் | முத்தம் | தந்த |
நீங்காத | நினைவோடு | சாவேன் | என்றேன். |
மற்கட்டு | நடந்ததுவா? | அதுதான் | இல்லை! |
மாமழையில் | நனைந்தோமா? | அதுவும் | இல்லை! |
சொற்கட்டு | இருந்ததுவா? | ஏதும் | இல்லை! |
சுகங்கண்டு | திளைத்திட்டோம் | இதுதான் | உண்மை! |
கற்கண்டு | தொண்டைவரை | இனிக்கும்; | ஆனால் |
கன்னியிவள் | அணுவணுவாய் | உடல்பூ | ராவும் |
சொற்கொண்டு | விளக்கவொண்ணா | இன்பம் | தந்தாள்! |
சொன்னாலும் | சுவைகுன்றும் | அதனால் | விட்டேன். |
Back to Top