தூங்கிவிட்ட | தமிழர்களை | விழிக்கச் | செய்தார் |
சூடேற்றி | நரம்புகளை | முறுக்கி | விட்டார்! |
வீழ்ந்துபட்ட | தாழ்நிலையை | விளக்கிச் | சொன்னார்! |
வீறுகொண்டு | எழுவதற்கு | எழுச்சி | தந்தார்! |
அஞ்சுவதைக் | கெஞ்சுவதை | தகர்த்தெ | றிந்தார்! |
ஆர்ப்பாட்டப் | போர்ப்பாட்டு | அதிரச் | செய்தார்! |
அடக்குமுறை | ஒடுக்குமுறை | நொறுக்கிப் | போட்டார்! |
அவனியிலே | தமிழர்தலை | நிமிரச் | செய்தார்! |
மடமையிருள் | போக்குகிற | ஒளியாய் | வந்தார்! |
மாதருக்குச் | சமஉரிமை | மதிப்பைத் | தந்தார்! |
கடமையிலே | கண்ணியத்தைக் | கட்டுப் | பாட்டைக் |
காக்கின்ற | மனவலிமை | ஆற்றல் | தந்தார்! |
உன்னைத்தான் | தம்பிஎன்று | விரலைக் | காட்டி |
ஒப்பரிய | சாதனைகள் | நிகழ்த்தி | வைத்தார்! |
அன்பிணைந்த | பாசத்தை | இதயம் | தேக்கி |
அதைநமது | கழகம் ஒரு | குடும்பம் | என்றார்! |
| | | |
கூன்விழுந்த | தமிழகத்தை | நிமிரச் | செய்தார்! |
குருட்டுமுறை | ஐதிகத்தைக் | கொளுத்திப் | போட்டார்! |
ஊன்ஒடுங்கி | உயிர்ஒடுங்கி | அடிமைப் | பட்டு |
ஓலமிட்டு | வாழ்ந்தவரை | உயர்த்தி | வைத்தார்! |
தீப்பொறியைப் | பெருநெருப்பாய் | ஆக்கிக் | காட்டி |
தீண்டாமைத் | தீமைகளை | அதிலே | போட்டார்! |
பூப்பறித்த | கைகளிலே | போர்வாள் | தந்தார்! |
பெண்ணடிமை | ஒழித்திட்டார் | பெருமை | சேர்த்தார்! |
| | | |
இங்கர்சால | என்றிவரைச் | சொல்வே | னானால் |
இப்ஸனுடன் | பெர்னாட்சா | வருந்து | வார்கள்! |
தங்கம் நிகர் | ஆப்ரகாம் | மாக்ய | வல்லி |
தனைச்சொல்வேன் | சாணக்கியர் | கோபம் | கொள்வார்! |
மங்காத | தென்னாட்டுக் | காந்தி | என்பேன் |
மனம்நோவார் | புத்தர்பிரான் | அதனால் | விட்டேன்! |
எங்கெங்கே | தமிழரினம் | வாழ்ந்தா | லென்ன |
இவரங்கே | முடிமன்னர் | அவர்தான் | அண்ணா! |
(தமிழ்நாடு அரசு 2009 பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலரில் 202ஆம் பக்கத்தில் வெளிவந்த கவிதை)