Skip to content
| | | |
நாட்டையொரு | சொர்க்கமென | ஆக்கிச் | சேர்க்க |
நல்லவர்கள் | முயன்றால்தான் | முடியும்; | நெஞ்சக் |
கூட்டுக்குள், | நாடுமொழி | மக்கள் | வாழ |
கொள்கைவழி | கண்டால்தான் | செயல்கள் | ஓங்கும் |
தீட்டுகிற | திட்டங்கள் | வெற்றி | சேர்க்கும்! |
திசையெட்டும் | தமிழ்பரவி | செம்மை | பூக்கும்! |
வாட்டுகிற | பசிபஞ்சம் | வறுமை | நீங்க |
வழிவகுத்த | ஒருவருண்டு | அவர்தான் | யாரோ! |
உதயசூ | ரியன்போல | கலைஞர் | வந்தார்! |
ஒப்பற்ற | சாதனையால் | உயர்ந்து | நின்றார்! |
இதயத்தில் | என்நாளும் | வைக்கத் | தக்க |
எத்தனையோ | செய்திட்டர்! | மக்க | ளுக்கு |
புதையல்போல் | நற்பலன்கள் | குவித்துத | தந்தார்! |
பொன்னுலகில் | ஏழைகளை | வாழ | வைத்தார்! |
அதிசயமோ | எனஎண்ணத் | தக்க | திட்டம் |
ஆயிரமா | யிரம்தந்தார்! | வெற்றி | கண்டார்! |
கூரையிலே | வாழ்கின்ற | மக்கள் | கொண்ட |
குறையறிந்தார்! | அதைமாற்றத் | திட்டம் | போட்டார்! |
காரைவீ | டனைவர்க்கும் | கட்டித் | தந்தார்! |
கண்குளிர்ந்தார்! | மனங்குளிர்ந்தார்! | மக்கள்: | வாழ்த்தி |
நீரைக்கண் | ணால்சொரிந்து | மகிழ்தல் | கண்டார்! |
நித்தமுயிர் | வாட்டுகிற | பசியைப் | போக்க |
வோ,நீரை, | மரம்,பெறவே; | ஊட்டு | தல்போல் |
விலைரூபாய் | ஒன்றுகிலோ | அரிசி | தந்தார்! |
கொடுத்தார்திரு | மணஉதவி; | கருவில் | வாழும் |
குழந்தைக்கும் | தாய்க்கும்மென | மகப்பே | ருதவி! |
கொடுத்தார்பாட் | டன்பாட்டி | முதியோர்க் | கெல்லாம் |
குறைவில்லா | வாழ்வுதவி; | வேட்டி | சேலை |
கொடுத்தார்பள் | ளிக்கேகும் | சிறார்க்கு | எல்லாம் |
முட்டை,சத் | துணவு,சீ | ருடை,சைக் | கிள்கள் |
கொடுத்தார் | தொலைக் | காட்சியொடு | பஸ்பாஸ் |
கண்ணொளிகாற் | செருப்புமுதல் | கருணை | இல்லம்! |
வீட்டுக்கொரு | விளக்கெரிய | வழியே | தந்தார்! |
விசையடுப்பு | எரிவாயு | தந்தார்! | மற்றும் |
கூட்டுறவில் | எண்ணெய்முதல் | மளிகை, | மேலும் |
பருப்புடனே | அரிசிகோ | துமைகள் | தந்தார்! |
பாட்டுக்கொரு | பாரதியின் | பெண்மை | ஓங்க |
படைத்திட்டார் | சுயஉதவிக் | குழுவை; | நாட்டில் |
பாட்டாளி | ஏழைபொது | மக்கள் | நோய்வாய்ப் |
படாதிருக்க | உயிர்காக்கும் | திட்டம் | தந்தார்! |
விவசாய | நிலவரியைக் | குறைத்தார்! | கிணற்றுக் |
விவசாயி | கடன்ஏழா | யிரம்கோ | டியை |
கிலவசமின் | சாரமொடு | கடனும் | தந்தார்! |
தவிப்போர்க்கு | உதவிடவே | துவக்கி | வைத்தார்! |
தந்தார்காப் | பீடு, | உயிர், | பயிர், |
புவிபோற்ற | இமாம்உலமா | பூசா | ரிகட்கு |
போகவர | சைக்கிளொடு | நிதியும் | தந்தார்! |
வானார்திரு | வள்ளுவர்க்குக் | கோட்டம் | தந்தார்! |
வானுயரக் | குமரியிலே | சிலையைத் | தந்தார்! |
தேனார்க்கும் | சிலப்பதிகா | ரத்தைப் | போற்றி |
திசைபுகழும் | பத்தினிக்கோட் | டத்தைத் | தந்தார்! |
வான்முட்டும | எழுநிலைமா | டத்தைத் | தந்தார்! |
வளர்திரையில் | பூம்புகார் | பெருமை | சேர்த்தார்! |
தொன்மைமிகு | திருவாரூர்த் | தேரை | ஓட்டி |
திருவுடைய | பக்தரையும் | மகிழச் | செய்தார்! |
பைந்தமிழை | செம்மொழியாய் | உயர்த்தி | வைத்தார்! |
பார்புகழ | விழாவெடுத்தார்! | உலகே | போற்ற |
நைந்தவர்கள் | வாழ்வுயரத் | திட்டம் | தந்தார்! |
நாடெல்லாம் | கோயில்குட | முழுக்குச் | செய்தார்! |
முந்தியமா | நிலம்தமிழ்மா | நிலமே | என்று |
முழங்கினார்சோ | னியாகாந்தி; | வெற்றி | தன்னை |
விந்தியம்போல் | இமயம்போல | உயரச் | செய்த |
வித்தகர்யார்? | விரிகதிரோன் | கலைஞ | ரன்றோ! |
சட்டம்ஒழுங் | கைக்காத்தார்! | ஜாதி | பேத |
சச்சரவு | எழாவண்ணம் | ஆட்சி | செய்தார்! |
ஒட்டியுற | வாடிசம | உணர்வு | பொங்க |
உருவாக்கி | சமத்துவ | புரத்தைத் | தந்தார்! |
வீட்டுக்கு | மனைப்பட்டா | நிலப்பட் | டாக்கள் |
வின்னுயர்ந்த | அடுக்குமாடி | குடியி | ருப்பு |
நாட்டுக்கு | இதுபோன்ற | நன்மை | செய்த |
நாயகன்யார்? | நம்முதல்வர் | கலைஞர் | தானே! |
மாறாத | ஆட்சியெது? | தமிழ | கத்தை |
மறுமுறையும் | ஆளும்வகை | செய்வார்! | வெல்வார்! |
தீராத | காவிரிநீர் | தீர்வு | காண்பார்! |
திசையாட்சி | தமிழ்வெல்ல | டெல்லி | சேர்ப்பார்! |
பாராத | சேதுசமுத் | திரத்திட் | டத்தை |
பாங்குடனே | நிறைவேற்றி | நாடு | காப்பார்! |
கூராத | பலதிட்டம் | கூறிச் | செய்வார்! |
குன்றெழுந்த | விரிகதிரோன் | கலைஞர் | வாழ்க! |
Back to Top