Skip to content
ஆண்சாதி | பெண்சாதி | இரண்டே | யன்றி |
அடுக்கடுக்காய்ச் | சாதிகள்ஏன்? | ஒழிந்தா | லென்ன? |
தான்சாதி | தானுயர்வு | மற்ற | சாதி |
தாழ்ந்ததெனும் | நிலையழிந்து | போனா | லென்ன? |
வீண்சாதி | பேசுவதால் | மோதல் | சாதல் |
விடிவில்லா | பாழிருட்டே | சேர்க்கும்; | இந்த |
தான்தோன்றி | சாதிமுறை | வேண்டாம்; | நாட்டில் |
சமத்துவத்தைப் | பயிர்செய்வோம்; | அமைதி | சேர்ப்போம்! |
| | | |
எத்தனையோ | நூற்றாண்டாய் | சாதி | பேசி |
இப்புனித | மனிதத்தைச் | சீர | ழித்தார்! |
வித்தகமாய் | நால்வருண | குலஆச் | சாரம் |
வேரூன்ற | மனிதகுலம் | வீழ்த்திச் | சாய்த்தார்! |
கொத்தடிமை | ஏற்றத்தாழ் | விகழ்ச்சி | பேசி |
கொடுஞ்செயலாம் | தீண்டாமை | தூண்டி | விட்டார்! |
சத்துணவில் | “சமத்துவ | புரத்தில்” | “பஸ்ஸில் |
சந்தையினில்” | சமச்சீரில்” | உண்டோ | சாதி |
| | | |
கடைபோட்டு | சாதிவெறி | வளர்க்க | லாமோ |
கண்மூடித் | தனம்விட்டு | விழித்தா | லென்ன? |
நடைபோட்டுச் | சட்டத்தின் | துணையி | னோடு |
நாளுமதைக் | காப்பதுவும் | நீதி | தானா? |
விடைகண்ட | பலதலைவர் | சாதி | வாரி |
வியூகங்கள் | ஆய்கின்றார் | ஞாயம் | தானா? |
தடைவேண்டும்; | இனம்ஒன்றே | ஆக்கல் | வேண்டும்! |
தப்பேது | சமுதாயம் | நிமிர | வேண்டும்! |
| | | |
மனிதமுண்டு | சாதியில்லை | என்றே | கூறும் |
மகத்தான | நாள்வரும்நாள் | எந்த | நாளோ? |
அணிதிரண்டு | சாதிவாரி | போர்கள் | செய்வோர் |
அதைமறந்து | ஓரணியில் | திரள்வ | தெந்நாள்? |
பிணியொத்த | சாதிசதி | ஒழிந்த | தென்றே |
பிரகடணப் | படுத்தும்நாள் | எந்த | நாளோ? |
கனியிருக்கக் | காய்கவர்தல் | தீர்வ | தெந்நாள்? |
கருமுதலே | சாதியின்றிப் | பிறப்ப | தெந்நாள்? |
Back to Top