Skip to content
சிந்து | தாளம்தரும் | சந்தம் | மேவுநடை |
தண்ட | கால்கள்தனை | யுடையாள் | – அவள் |
அந்தி | மாலைவரும் | மந்த | மாருதத்தின் |
விந்தை | மேவுசுக | முடையாள் | – பல |
கந்த | மாமலர்கள் | சிந்தும் | நறுமணத்தின் |
சொந்தம் | கூறும்செவ் | வுடலாள் | – அவள் |
முந்து | தென்றல்குளிர் | தந்ததமிழ் | மொழியின் |
சந்தம் | ஏழெனும் | மென் | குரலாள் |
வெல்லும் | சிரிப்பிலவள் | முல்லை | முத்தடுக்கி |
சொல்லிச் | செதுக்கியவெண் | பல்லினாள் | – அவள் |
தேனுகற் | கண்டுமலை | வாழை | நல்மாபலா |
சேர்த்துப் | பிழிந்ததனிச் | சொல்லினாள் | – அவள் |
கடலைக் | கடைந்தநல் | அமுதம் | எடுத்தபோல் |
கனிந்த | பக்குவநற் | பருவத்தாள் | – அவள் |
காமன் | இந்திரனைக் | ககனச் | சந்திரனை |
கலங்கித் | தவிக்க | விடும் | உருவத்தாள் |
மஞ்சம் | தந்திடும்நல் | விஞ்சும் | சுகமனைத்தும் |
கொஞ்சித் | தந்திடுநற் | கோதையாள் | – இவள் |
பஞ்சு | மலரடியில் | அஞ்சு | புலத்தின்வழி |
மிஞ்சத் | தரும் | சுகப் | போதையாள் |
வஞ்சி | இவளுடைய | எஞ்சும் | உடலழகால் |
நஞ்சைத் | தேனாக்கும் | செயலினாள் | – முனிவர் |
அஞ்சித் | தடுமாறி | அலைந்து | நிலைமாறி |
துஞ்சும் | நிலைக் | காக்கும் | மயலினாள் |
Back to Top