Skip to content
| | | |
பெண்ணோ அவள் | மின்னோசுடர் | பொன்னோஒளிர் | தேகம்! |
கண்ணோசுகக் | காந்தம் தரும் | கதிரோ அவள் | பார்வை! |
மானோமறி | தானோஅவள் | துள்ளும்நடை | அழகு! |
தேனோகற் | கண்டோஅமிழ் | தூற்றோஅவள் | பேச்சு! |
வண்ணம்பல | கண்ணக்கவர் | வான்வில்அவள் | புருவம்! |
தின்னத்திகட் | டாமுக்கனி | தினைதேன் | அவள் பருவம்! |
எண்ணங்கவர் | கொற்கைத்தனி | எழில்முத்தவள் | பற்கள்! |
பண்ணோடொரு | பரதம்சதிர் | பயிர்க்கும்அவள் | கால்கள்! |
தென்றல்இளம் | காற்றில்அசைந் | தாடும்இவள் | இடைதான்! |
தினமேநறு | மணமேதரு | மலர்தான்அவள் | உள்ளம்! |
நிலவேதவழ் | கருமேகமோ | நீளும்அவள் | கூந்தல்! |
நினைக்குந்தொரும் | மணக்குஞ்சந் | தனமோஅவள் | உறவு! |
வரவும்அவள் | தரவும்அவள் | உறவும்அவள் | தானே! |
நிறைவைத்தரும் | நினைவைத்தரும் | உருவம்அவள் | தானே! |
பாதைதடு | மாற்றும்முனி | வர்க்கும்;இவள் | அங்கம் |
போதையினித் | தேவையிலை | பாவைஇவள் | சங்கம்! |
ஓரம்துளும் | பார்வையதற் | குலகைப்பரி | சிடலாம்! |
வீரர்தனை | வீழ்த்தும்புன் | சிரிப்பிற்கெதைத் | தரலாம்! |
Back to Top