Skip to content
| | | |
| | | |
காதல் | என்பது | மாயம் | – அது |
கண்கண் | மோதிய | காயம்! | |
மதுவை | மயக்கும் | மோகம் | -காதல் |
மறைந்து | போகும் | மேகம்! | |
வயது | கொடுத்த | தாகம் | – அது |
வரம்பு | மீறினால் | சோகம்! | |
விதியை | மாற்றும் | வேகம் | – காதல் |
விடைதான் | உணர்ச்சிப் | போகம்! | |
கண்பொருள் | நோக்காப் | பார்வை | – மறைக்கும் |
காதல் | தரும்திரைப் | போர்வை! | |
முன்படு | பொருளறி | யாது | – காதில் |
இருக்கப் | பறக்கும் | எண்ணம் | – அன்பின் |
இன்பம் | சுரக்கும் | கிண்ணம்! | |
உருக்க | உருகாத | உறவு | – காதல் |
உறவைத் | துறந்து | ஓடும் | – காதல் |
உறவு | ஒன்றையே | நாடும்! | |
சிறகு | ஒடிபடும் | துன்பம் | – ஏற்கும் |
தீபடு | துயரிலும் | இன்பம்! | |
உணர்ச்சி | உயிர்களின் | சொத்து | – அதில் |
ஒழுக்கம் | அடக்கம் | முத்து! | |
புணர்ச்சி | இறைவன் | வேதம் | – அதன்படி |
புரிந்து | வாழ்வதே | நீதம்! | |
Back to Top