Skip to content
முந்தானை | மறைக்குதே | என்ன | என்ன! |
மூடிவைத்த | திரைக்குள்ளே | என்ன | என்ன! |
கொத்தான | செங்கனியா | என்ன | என்ன! |
குலுங்கிடும் | கோபுரமா | என்ன | என்ன! |
கள்ளிருக்கும் | தேன்குடுவை | ஆடுவ | தென்ன! |
கற்கண்டு | ரசக்கலவை | கூடுவ | தென்ன! |
உள்ளிருக்கும் | மெல்லுணர்வு | சிரிப்ப | தென்ன! |
ஒய்யாரம் | நாணமிட்டுத் | தவிப்ப | தென்ன! |
வில்லெடுத்த | மலர்மன்னன் | மன்ம | தனையும் |
விழியம்பு | புருவவில் | வீழ்த்திய | தென்ன |
மல்பிடிக்க | வந்தரதி | மயங்கிய | தென்ன |
மதியுமந்தக் | காட்சிகண்டு | தயங்கிய | தென்ன |
முன்னழகைப் | பின்னழகு | முந்தின | தென்ன! |
முக்கனியும் | சர்க்கரையும் | பிந்தின | தென்ன! |
வானவரும் | காணவந்த | கட்டழ | கென்ன! |
வார்த்தைதரக் | கண்ணதாசன் | வந்ததும் | என்ன! |
Back to Top