ஆற்றை அடக்கும் கடல்!

பெண்:- காவியத்தலைவா!கவிதரவாவா
காதல்பூத்ததுவாவா– என்னை
தாவிஅணைத்துத்தளிருடல்தழுவி
ஓவியம்எழுதிடவாவா– உனையென்
உயிரில்கலந்திடவாவா!
ஆண்:- தங்கச்சிலையேதளிர்முகநிலவே
பொங்கும்அமுதேவாவா– அழகு
பூக்கும்கண்விழிபுகுந்துஎன்னைத்
தாக்கும்கணையேவாவா– தேன்குடம்
தந்திடுவந்திடுவாவா!
பெண்:- வாளும்வேலும்ஆளும்திறமே
வீரமேவெற்றியேவாவா– ஆசை
சூழும்மன்மதசுகம்தரவாவா
சொர்க்கம்பகிர்ந்திடவாவா– இதயம்
வாங்கிடத்தாங்கிவிடவாவா!
ஆண்:- குமுதமேமலரேஅமுதக்கலசமே
குங்குமப்பூவேவாவா– வளஞ்சேர்
செம்மொழித்தமிழின்தேன்சுவைநீயே
சிரிக்கும்முல்லையேவாவா– மனதுள்
பறக்கும்கிள்ளையேவாவா!
பெண்:- கோபுரகலசமேகுறையிலாத்தேரே
குன்றினில்ஒளிதரும்விளக்கே– சுக
மன்மதக்கணையேரதியெனக்கிணையே
பெண்மனம்சிலிர்க்குதுவாவா– காதல்
போதைமீறுதேவாவா!
ஆண்:- ஆற்றைஅடக்கும்கடலேவருகிறேன்
அன்பைஅடக்கும்உயிரேவருகிறேன்
போற்றும்பெண்மைப்புதுமையேவருகிறேன்
பெருமைதரவரும்உறவேவருகிறேன்
ஏற்றதுதருகிறேன்இன்றேவருகிறேன்
Back to Top