வண்ணக்கிளியே!

மூழ்கிமூழ்கி முத்தெடுத்து
முதிர்ந்தமுத்தைத் தேர்ந்தெடுத்து
முத்துப்பல்லுக்காரி உனக்கு
அள்ளித்தருவேன் – உன்னை
முத்துப்பல்லாக்கேற்றிவைத்துச்
சுற்றி வருவேன்!
கட்டுக்கட்டாகரும்பெடுத்து
கணுக்கணுவாவெட்டியதில்
நடுக்கரும்பைநானெடுத்து
உனக்குத் தருவேன் – என்
நாடிநரம்பில் நீமட்டும்தான்
நல்லாப்பாரடி!
மொட்டுமொட்டாஅரும்பெடுத்து
முல்லைமலர்சரந்தொடுத்து
கட்டுக்குழல்சூட்டுவேன்நான்
கண்ணேகற்கண்டே– உன்
கழுத்தில்தாலிகட்டுவேன்நான்
பெண்ணேபூச்செண்டே!
மாடுமனைதோட்டமிருக்கு
மஞ்சள்கடலைகரும்புக்காட்டில்
பஞ்சடியைப்பதிக்கவாடி
பச்சைக்கிளியே – எனக்குப்
பாலும்தேனும் அழுதும்தாடி
இச்சைக் கிளியே!
தட்டித்தட்டிதங்கத்திலே
தட்டுப்பாடுஇல்லாமலே
தட்டான்தந்தான் நகைவகைகள்
தங்கரெத்தினமே – உனக்கு
தாலிகூடசெய்துவிட்டேன்
பொண்ணுரெத்தினமே
பட்டுப்பட்டாகாஞ்சிப்பட்டு
பலகடையிலேதேடிஉனக்குக்
கட்டுக்கட்டாசேலைவாங்கிக்
காத்திருக்கேன்டீ –என்னை
காக்கவைக்கலாகுமோஎதிர்
பார்த்திருக்கேன்டீ!
சுத்திச்சுத்தி திலோத்தமைகள்
ஊர்வசிகள்மேனகைகள்
மோகினிகள்மயக்குறாங்க
அன்னக் கிளியே – என்னை
அடைந்துசுகம்தந்திடடீ
வண்ணக்கிளியே!
தைதையின்னுதைவருது
தாளமேளம்நாதஸ்வரம்
வைத்துனக்குமாலையிடுவேன்
வண்ணவண்ணமா –ஊரார்
வாழ்த்துவார்கள் நீயும்நானும்
வாழ்வோம் திண்ணமா!
Back to Top