மேகமே தூது போ

மேகமே “வா” என்
வேதனை கேளு!
மோகமோ “தீ” ப்போல்
மூள்வதைப் பாரு!
தாகமோ மீறுது!
தனிமை தகிக்கிது!
சோகமே சூழுது!
சொல்அவ ரிடத்தில்!
பொங்குது ஆசை!
புழுங்குது உள்ளம்!
திங்குது வேட்கை!
திகைக்குது மனது!
எங்கிருப் பாரோ
என்னுயிர் அவரிடம்!
தங்கிடத் தாங்கிடத்
தயக்கமேன் வரச்சொல்!
பறந்து திரிகிறாய்!
பலஊர்அலைகிறாய்!
மறந்திடாதே
மதிதவழ்முகிலே!
பிறந்தேன்அவர்க்கென
பிரியமுடியுமோ!
இறந்துபடுமுன்
என்னிடம்வரச்சொல்!
தாகமோ விரகமோ!
தாக்கிடும் புயலோ!
வேகமோ நாகமோ!
வில்விடு வினையோ!
தேகமும்எரியுது!
ஏகமும்எரியுது!
நோகவோசாகவோ!
நிம்மதிதரச்சொல்!
கண்டேன்அவரை!
உண்டேன்அழகை!
கொண்டேன்மையல்!
குலநலன்இழந்தேன்!
பண்டுநாள்;சிறுமிநான்
பழகிய பாங்கினை
எண்ணிப்பார்த்து
என்னிடம்வரச்சொல்!
காவியம்படைத்திட
களிநடம்பூத்திட
மேவியஉணர்வால்
மெலிந்தேன்உடலும்!
ஓவியமாயென்
உளம் ஒளிர்பவரை!
ஆவிபோய்சாகுமுன்
மேகமேவரச்சொல்!
தூவியமலர்விரி
துயில்கொளுமஞ்சம்
தேவியென்உடல்பட
சேர்வதுஎந்நாள்?
நாவினில்இன்சொல்
நவிலுமேகமே!
பூவினில்தேன்பெற
புசித்திடவரச்சொல்!
கண்” அவர்எனக்கவர்!
காத்திடவரச்சொல்!
பெண்” உயிர்அவரிடம்
பேணிடவரச்சொல்
மென்மைமேனியை
மேவிடவரச்சொல்!
தண்” குளிர்மேகமே
தாங்கேன்தூதுபோ!
Back to Top