Skip to content
| | | |
பண்அம் | பலப்படுத்தும் | பாட்டரங்கம் | வந்திருக்கும் |
என்அன்பிற் | குறியோரே! | ஏற்றமிகு | தமிழறிஞர் |
பாகற்காக் | கவிஞன்நான் | பாவாடை | நானறியேன்! |
(“பா” கற்காக் | கவிஞன்நான் | “பா”வாடை | நானறியேன்!) |
மேகக் | கருக்கல்போல் | மென்துளிகள் | நான்தெளிப்பேன் |
| | | |
தொடையுண்டு | இலக்கணத்தில் | தொட்டதில்லை | நானதனை |
அடியுண்டு | இலக்கணத்தில் | அடிபட்டுப் | பழக்கமில்லை |
நேருண்டு | நிறையுண்டு | நெருங்கிநான் | சென்றதில்லை |
காயுண்டு | கனியுண்டு | கடித்ததனைப் | பார்த்ததில்லை |
| | | |
கருவிளத்தைக் | கூவிளத்தைக் | காசுமலர் | நாள்பிறப்பைக் |
காரிகை | அலங்காரம் | கண்டதில்லை | கேட்டதில்லை! |
எழுத்தசையைச் | சீர்தளையை | எதுகையொடு | மோனைகளை |
அழுத்தமுடன் | கற்றறியேன்; | ஆனாலும் | அவைப்பெரியீர்! |
| | | |
அழுத்தமுடன் | பாப்பாட | அரங்கேறி | வந்துவிட்டேன் |
பழுத்தவனோ, | காயோ, | பார்த்தறிவ | துங்கள்கடன் |
வெண்பா | கலிப்பா | விருத்தப்பா | சந்தப்பா |
எந்தப்பா | வையும்நான் | ஏறிட்டுப் | பார்த்ததில்லை! |
| | | |
அப்பாவிற் | கப்பா | அருங்கவிதை | பாடியதால் |
இப்போநான் | கவியரங்கில் | இயல்பாகப் | பாடவந்தேன் |
குற்றங் | குறையிருந்தால் | கூறுங்கள் | திருந்துகிறேன் |
கொற்றவனின் | முன்னே | குடிமகனாய் | வணங்குகிறேன்! |
Back to Top