Skip to content
ஆண்ட | மொழிச்சிறப்பை | அழகுதமிழ் | மரபுதனை |
மீண்டும் | நிலைநிறுத்த | மேடைக்கு | வந்தவரே! |
வில்லெடுத்துப் | போர்தொடுக்கும் | வீர | மறவர்போல் |
சொல்லெடுத்துப் | போர்தொடுக்கும் | சுழிமுனையைக் | கற்றவரே! |
மாவரங்கம் | பலகண்ட | மாத்தமிழின் | சீர்கொண்ட |
பாவரங்கத் | தின்தலைமைப் | பாங்குதனை | ஏற்றவரே! |
இமைத்தவிழி | திறப்பதற்குள் | ஏழாயிரம் | கவிதை |
அருந்தமிழி | லியற்றுமாற்றல் | அத்தனையும் | பெற்றவரே! |
விட்டிழுத்த | மூச்சு | வெளியேறும் | முன்னாலே |
கொட்டிக் | குவித்திடுவீர் | கோடிக் | கவிதைகளே! |
தட்டி | எழுப்புவதில் | தமிழுணர்வை | ஊட்டுவதில் |
திட்டமிட்டுப் | பாடுவதில் | திறன்மிகுந்த | பெருங்கவிக்கோ |
முப்பழத்தின் | சுவைத்திறல்கள் | வாமுசே | துராமன்தன் |
செப்பும் | கவிதையிலே | செரிந்திருக்கும் | காண்போமே! |
மன்றத்தில் | மணியோசை | இவரின் | பேச்சு! |
மணிமுடிதான் | தமிழுக்கு | இவரின் | ஆற்றல்! |
குன்றத்து | விளக்காக | இலக்கி | யத்தேன் |
குடங்குடமாய் | வார்த்தளிக்கும் | தமிழின் | வள்ளல்! |
என்றைக்கும் | இவர்தொண்டு | தமிழுக் | குண்டு! |
இவரறியா | நூலில்லை | தேர்ந்த | தேனீ! |
கன்றுக்குத் | தாய்மடிதான் | சொர்க்கம், | இங்கே |
கவிப்பெருங்கோ | தான் எங்கள் | கவிதை | சொர்க்கம்! |
| | | |
Back to Top