Skip to content
சாராயத்தைக் | குடிக்காதேடா | சம்பந்தம் | –அதுஉன் |
சரித்திரத்தை | அழிக்குமடா | சம்பந்தம்! | |
ஓராயிரம் | தடவைசொல்றேன் | சம்பந்தம் | –அதுஏன் |
உனக்குப்புரிய | வில்லையடா | சம்பந்தம்! | |
குடிச்சிப்புட்டு | புலம்புறியே | கோபாலு | –அந்தக் |
குடி&குடியைக் | கெடுக்குமடா | கோபாலு! | |
படிச்சுப்படிச்சுச் | சொல்லுறேனே | கோபாலு | –உனது |
பாதையைநீ | மாத்தலையே | கோபாலு! | |
அழிஞ்சுபோச்சு | குடும்பம்பாரு | ஆனந்தா | -அவுங்க |
அழுதுதவிக்கும் | அவதிபாரு | ஆனந்தா! | |
ஒழிஞ்சுபோன | பலரைப்பாரு | ஆனந்தா | -நீஏன் |
உணர்ந்துபார்க்க | மறுக்குறியே | ஆனந்தா! | |
கண்ணுகெடுது | புத்திகெடுது | கண்ணையா | –அது |
கல்லீரலைக் | குடல்கெடுக்குது | கண்ணையா! | |
பொன்னுபொருள் | புகழ்அழியுது | கண்ணையா | -இதை |
புரிஞ்சுதிருந்தி | வாழ்ந்துபாரு | கண்ணையா! | |
நாலுபேரு | நகைக்கிறாகளே | நல்லையா | –உனக்கு |
நாணம்வெட்கம் | வீரமில்லையா | நல்லையா! | |
காலுபின்னுது | வேட்டிநழுவுது | நல்லையா | –உன்னைக் |
கழுதைகூட | மதிக்கலையே | நல்லையா! | |
குடிச்சவன்தான் | உருளுரானே | குப்பண்ணா | –அவள் |
குடும்பம்தெருவில் | அலையதுபார் | குப்பண்ணா! | |
குடிக்காதநீ | பார்த்தியேயிதை | குப்பண்ணா | -நீயும் |
குடிக்கலாமோ | வெட்கக்கேடு | குப்பண்ணா! | |
காந்திபெரியார் | அண்ணாசொன்னார் | கந்தையா | -நீயும் |
கைதொடாதே | மதுவகையைக் | கந்தையா! | |
வாந்திமயக்கம் | வறுமையிழிவு | கந்தையா | -உனக்கும் |
வராதிருக்கத் | திருந்திக்கடா | கந்தையா! | |
மாடுமனை | தாலிவித்தியே | மன்னாரு | –குடிச்சு |
மானம்மரி | யாதைகெட்டியே | மன்னாரு! | |
கேடுகெட்ட | குடியைவிடுடா | மன்னாரு | –சொன்னா |
கேட்டுக்கடா | திருந்திக்கடா | மன்னாரு! | |
Back to Top