கோதை தரும் போதை

சிந்துதாளம்தரும்சந்தம்மேவுநடை
தண்டகால்கள்தனையுடையாள்– அவள்
அந்திமாலைவரும்மந்தமாருதத்தின்
விந்தைமேவுசுகமுடையாள்– பல
கந்தமாமலர்கள்சிந்தும்நறுமணத்தின்
சொந்தம்கூறும்செவ்வுடலாள்– அவள்
முந்துதென்றல்குளிர்தந்ததமிழ்மொழியின்
சந்தம்ஏழெனும்மென்குரலாள்
வெல்லும்சிரிப்பிலவள்முல்லைமுத்தடுக்கி
சொல்லிச்செதுக்கியவெண்பல்லினாள்– அவள்
தேனுகற்கண்டுமலைவாழைநல்மாபலா
சேர்த்துப்பிழிந்ததனிச்சொல்லினாள்– அவள்
கடலைக்கடைந்தநல்அமுதம்எடுத்தபோல்
கனிந்தபக்குவநற்பருவத்தாள்– அவள்
காமன்இந்திரனைக்ககனச்சந்திரனை
கலங்கித்தவிக்கவிடும்உருவத்தாள்
மஞ்சம்தந்திடும்நல்விஞ்சும்சுகமனைத்தும்
கொஞ்சித்தந்திடுநற்கோதையாள்– இவள்
பஞ்சுமலரடியில்அஞ்சுபுலத்தின்வழி
மிஞ்சத்தரும்சுகப்போதையாள்
வஞ்சிஇவளுடையஎஞ்சும்உடலழகால்
நஞ்சைத்தேனாக்கும்செயலினாள்– முனிவர்
அஞ்சித்தடுமாறிஅலைந்துநிலைமாறி
துஞ்சும்நிலைக்காக்கும்மயலினாள்
Back to Top