Skip to content
ஏழைகள் | வாழ்ந்திடப் | பிறந்தவரு! |
இருப்பதை | அள்ளிக் | கொடுத்தவரு! |
நாளையும் | நிலைத்து | வாழ்பவரு! |
நல்லபொன் | மனத்தைக் | கொண்டவரு! |
வறுமையை | நன்றாய் | உணர்ந்தவரு! |
வாட்டத்தைப் | போக்கிட | வந்தவரு! |
சிறுமையை | விரட்டிடத் | துடித்தவரு! |
சிறுவர்க்குச் | சத்துணவு | தந்தவரு! |
அண்ணா | வழியிலே | நடந்தவரு! |
அரசு | நடத்துவதில் | வல்லவரு! |
கண்ணாய்த் | தாய்குலம் | காத்தவரு! |
கலைஞர்கள் | போற்றிய | நல்லவரு! |
கொள்கை | நெறியிலே | நின்றவரு! |
குறுக்கிடும் | நரிகளை | வென்றவரு! |
எல்லையில் | லாப்புகழ் | கொண்டவரு! |
எம்.ஜி.ஆர். | எனப்பெயர் | பெற்றவரு! |
செத்துப் | பிழைத்து | எழுந்தவரு! |
சிகரத்தின் | உச்சியைத் | தொட்டவரு |
கடையெழு | வள்ளலை | மிஞ்சினவர்! |
கடற்கரை | மெரினாவில் | துஞ்சினவர்! |
Back to Top