நெறிக் குறவர்

நரிபுடிச்சோம்முயல்புடிச்சோம்காடைபுடிச்சோம்ஆயாலோ!
காணாங்கோழிகூழக்கடாமான்புடிச்சோம்ஆயாலோ!
கொம்புநகம்பல்லுதோலுவாலுவிப்போம்ஆயாலோ!
வம்புவாதுசூதுபொய்யிபேசமாட்டோம்ஆயாலோ!
கூட்டம்கூடிடப்பாதாளம்ஆட்டம்போடுவோம்ஆயாலோ!
குடுத்தகஞ்சிகாசுவாங்கிகும்புடுவோம்ஆயாலோ!
இப்பஎங்கநெலமைவேறேஇதுதெரிமாஆயாலோ!
பாசிமணிகள்ஊசிவித்துப்பணம்குமிக்கிறோம்
அரசுதந்தகெட்டிவீட்டுலஅண்டிக்கிட்டோம்ஆயாலோ!
அங்கேநாலுவாழைதென்னைவச்சுப்புட்டோம்ஆயாலோ!
கரண்டுவௌக்குடிவிரேடியோகுடிநீரோடஆயாலோ!
கட்டித்தந்தார்பள்ளிக்கூடம்படிச்சுப்புட்டோம்ஆயாலோ!
பள்ளிப்படிப்பைநாங்கபடிச்சோம்பாட்டன்போலஇல்லீங்க
பக்குவமாஉலகத்தோடஒட்டிக்கிட்டோம்ஆயாலோ!
வேட்டிகட்டிசட்டைமாட்டிவெளியேவாரோம்ஆயாலோ!
வெட்டிப்புட்டோம்குடுமியைத்தான்குளிக்கிறொமைஆயாலோ!
கல்யாணவீடுபோறதில்லைஎலைஎடுக்கலேஆயாலோ!
எங்கவிட்டுலேகல்யாணத்திலேஎலைச்சாப்பாடுஆயாலோ!
சாமிசாமிநாங்கசொன்னோம்சிச்சியின்னிங்கஆயாலோ!
சமத்துவமாமதிக்கயிப்போஒசந்துபுட்டோம்ஆயாலோ!
கூட்டுறவுலேஅரிசிபருப்புகொடுக்கிறாகஆயாலோ!
ஓட்டுப்போடும்உரிமைகூடஇருக்குதுங்கஆயாலோ!
காட்டுநரிக்குறவர்இப்போநெறிக்குறவராஆயிட்டோம்!
கருணையோடஅரசாங்கந்தான்காத்துவருதுஆயாலோ!
காடுவேலைகழனிவேலைகளத்துமேட்டுலேஆயாலோ!
கருத்தைமாத்திஉழைக்கிறதைக்காணவாங்கஆயாலோ!
கூத்தாடிவயல்அறந்தாங்கியிலேதிருச்சிதேவராயநேரி
குடியிருக்குறோம்நாற்பதாண்டாபிழைத்திருக்கிறோம்ஆயாலோ!

சுனாமியே இனி வராதே

ஆக்குவதும்காப்பதுவும்அழிப்பதெல்லாம்
ஆண்டவனின்செயலென்றுஅன்றேசொன்னார்!
ஆக்குவதுஅவன்செயல்தான்;நம்மால்இல்லை
ஆக்கியநல்உயிர்,பொருளையார்காக்கின்றார்!
ஆக்கமுடன்உயிரினங்கள்உழைத்துழைத்து
அரும்பாடாய்உயிர்,பொருள்கள்காக்கக்கண்டோம்
நீக்கமறஇறையவனேகாப்பானென்றால்
நிறை,குறைகள்நிந்தனைஏன்?தீர்ப்புஉண்டா?
ஒருவன்மற்றொருவனுயிர்போக்கிவிட்டால்
ஊருலகம்கொலைகாரன்என்றேசொல்லும்!
ஒருகொலைக்கேசிறையுண்டு;தூக்குஉண்டு!
ஓருயிரா?ஜப்பானில்சென்டாய்மினாமி
பெருநகரேஅழிந்துபடசுனாமிதந்த
பெருந்துரயம்;இருபதினாயிரவர்மாண்டார்!
விரும்பித்தான்இறைவன்கொலைசெய்கின்றானா?
விடையிலையா?பொறுப்பாளிஇதற்கில்லையா?
வீடுமுதல்கார்கப்பல்ரயில்விமானம்
விரிவாக்கஅணுவுலைகள்பெட்ரோல்டீசல்
தேடறியவிஞ்ஞானசாதனங்கள்
திகைப்பூட்டும்தொழில்நுட்பம்;அனைத்தும்வீழ்த்தி
நாடழித்துப்போட்டசெயல்நன்றோ;தெய்வம்
நன்மைசெயத்தானுண்டு;இதுவோகொடுமை!
வாடிடுதேமக்கள்மனம்உலகமெங்கும்!
வடிக்கிறதேகண்ணீர்;இறைஅறிந்தாலென்ன?
போர்வெறிகொண்டமெரிக்காஜப்பான்நாட்டில்
போட்டஅணுகுண்டாலேமூன்றுலட்சம்
பேர்மாண்டார்;ஹிரோஷிமா,நாகசாஹி,
பெருந்துயரைக்கண்டது;பின்மீளலாச்சு!
வேரறுத்தஅமெரிக்காகுனியலாச்சு!
வீழ்ந்துபட்டஜப்பானோநிமிரலாச்சு!
சீரழித்தாய்சுனாமியேஜப்பான்மீளும்!
சீருபெரும்;பேருபெறும்;உலகம்காணும்!
போனவுயிர்மீண்டிடுமா?பால்குடித்த
பிஞ்சுமுதல்வயோதிகரைஅழிக்கலாமா?
நாணமிலாச்செயலன்றோ;தெய்வத்திற்கோ
நற்கருணைசிறிதில்லை;உலகேதூற்றும்
ஈனசெயல்;சுனாமியேதாக்கலாமா?
எங்கள்தமிழ்நாட்டோடுஇலங்கைசேர்த்து
போனமுறைநீயழித்தாய்;ஜப்பான்இன்று
புதைகுழியாய்மாறியதேஇனிவாராதே!
சாகாமல்வாழ்ந்தவர்கள்யாரும்இல்லை!
சாவுக்கும்விதிமுறைகள்வகுத்தாய்நீயே
சாவுக்குஅஞ்சியஞ்சும்காலம்போச்சு!
சாவுண்டு;இதையறிந்தேவாழுகின்றோம்!
தீவுமுழுதாய்அழித்தாய்;ஜப்பான்நாட்டார்
தீமையவர்செய்ததென்ன?கொடுமையன்றோ
சாதிக்கப்பிறந்தவர்கள்;ஜப்பான்நாட்டை
சாவுலகுஅனுப்பிடினும்மீண்டும்வெல்வார்!

ஆடு

ஒடிச்சுப்போட்டஇலையைத்தின்னு
ஊத்திவச்சகழனிகுடிச்சு
ஒங்கபின்னேசுத்திவந்தஆடுங்க–நாங்க
உண்மையிலேநம்பிவந்தோம்பாருங்க
கெடயைப்போட்டுவயல்வெளியிலே
புளுக்கைசிறுநீர்எருவாமாத்தி
விடிஞ்சதுமேதண்ணிகாட்டிவிட்டீங்க–எங்களை
விரட்டிநல்லாபுல்வெளியிலேவிட்டீங்க
ஆத்துஓரம்காட்டுஓரம்
அருகிருக்கும்செடியின்ஓரம்
மாத்திமாத்திமேயவிட்டீங்கஎங்களை–நாங்க
மறக்கமாட்டோம்உயிருள்ளவரைஉங்களை
நம்பிவந்தஎங்களுக்கு
நல்லதையேசெய்தநீங்க
அன்புகாட்டத்தவறினதுஎன்னங்க–கழுத்தை
அறுத்துயெங்கள்உயிர்பறிப்பதுஎன்னங்க
காலுநாலைக்கட்டிப்போட்டு
கழுத்தறுத்தபோதுமுங்கள்
கருணையைத்தான்நினைச்சிருப்போம்அய்யாவே–நாங்க
கதறுவதுஉங்கநினைப்பிலேமெய்யாவே
காந்திபுத்தர்மகாவீரர்
கருணைராமலிங்கஅடிகள்
சாந்திமார்க்கம்சத்தியத்தைச்சொன்னீங்க–எங்களைச்
சந்தைக்கடையில்கழுத்தறுத்துக்கொன்றீங்க.
உலகத்திற்கேசாமாதானம்
ஒற்றுமையோடிஹிம்சைகூறி
கலகமின்றிகொலைதடுத்ததுநீங்கதான்–எங்களை
கழுத்தறுத்துபோடுறதும்நீங்கதான்.
காட்டில்வாழும்மிருகங்களும்
ஓடிஒளிந்துபிழைக்குதுங்க
வீட்டில்உங்ககூடவாழ்ந்தோம்நாங்களே
வெட்டிப்பலிகொடுபபதுவோநீங்களே

தேனீ

ஆயிரமாயிரம்தேனீகாலைமாலை
அலைந்தலைந்துபூவமர்ந்துஎடுத்ததேனை
ஆயிரமாயிரம்அறைசேர்கூட்டுக்குள்ளே
அன்றாடம்சிறுசிறுகசேர்த்துவைக்கும்!
ஏழைசிறுஉண்டியலில்காசைப்போட்டு
எப்போதுநிறையுமெனக்காத்திருப்பான்!
ஏழையிவன்உண்டியலைத்திருடன்கொண்டால்
என்னாகும்;தேனியையும்இணைத்துப்பாரீர்!
தேன்கூட்டைக்கட்டியதற்கார்தான்தந்தார்!
தேனெடுத்துயாரதற்குச்சேர்த்துத்தந்தார்!
ஊனுறக்கமின்றிமலர்மலர்க்குத்தாவி
ஓய்வின்றிஉழைத்ததுவும்தேனீயன்றோ!
வான்மழையில்கடும்வெயிலில்வறட்டுக்காற்றில்
வகைதொகையாய்க்காத்திருந்ததெவரோசொல்வீர்!
மானமொடுஎவருதவிதயவும்இன்றி
மாண்புடனேவாழுவதும்தேனீயன்றோ!
மாடெருமைஆடுபசுகுருவிகோழி
மனிதனதற்குணவளித்துக்காப்பதுண்டு
பாடதற்குமனிதனவன்படுவதாலே
பலவகையில்பங்கெடுக்கும்உரிமை
கேடெவர்க்கும்எண்ணாமல்அடிமையின்றி
கிடைத்ததேன்உண்டுவாழ்கின்றதேனீ
கூடழித்தான்;தேனெடுத்தான்;மனிதன்உண்டான்
கொள்ளையிது!பெருங்கொடுமை!!மாற்றுகாண்பீர்!

 புற்று

பூமியிலேஅழகழகாய்ப்புற்றுதோன்றும்!
புனிதமிகும்கோபுரம்போல்உயர்ந்துகாணும்!
சாமியில்லைபுற்றுக்குள்;எறும்புக்கூட்டம்
சமத்துவத்தைஒற்றுமையைமனிதர்கட்கு
காமிக்கும்வகையாகவாழ்ந்துகாட்டி
கருத்துடனேகூட்டுறவின்உயர்வைநாட்டும்!
சேமிக்கும்பழக்கத்தைமனிதர்கட்டு
சொல்லியதேஎறும்புகளின்கூட்டம்தானே.
அலையலையாய்சுறுசுறுப்பாய்அங்கும்இங்கும்
அலைந்தலைந்துஉணவுகளைத்திரட்டிவந்து
வலைக்குள்ளேசேமித்துமழைக்காலத்தில்
வாழ்வதற்குவழிகண்டஎறும்புக்கூட்டம்
மலையளவுஅறிவுரையைமனிதனுக்கு
மணிமணியாய்த்தந்ததுவும்;கூட்டுவாழ்க்கை
குலையாமல்வாழ்ந்துகாட்டிஒரேபுற்றுக்குள்
குறைவின்றிவாழ்வதுவும்எறும்புதானே!
புற்றதற்குக்கட்டுதற்குக்கற்றுத்தந்த
பொறியாளர்எவருண்டு;போர்க்காலத்துப்
பற்றுடையவீரன்போல்பரபரத்துப்
பாங்குடனேசிறுவாயில்மண்சுமந்து
பொற்கொல்லர்நகைசெய்தல்போலேஅந்தப்
புற்றுதனைக்கட்டுவதுஅடடா!அந்தப்
பொற்புடையசாதனைகள்மனிதனுக்குப்
பொறுமைக்கும்திறமைக்கும்சவாலேயன்றோ!
மன்னன்தன்நாட்டிலுள்ளமக்கள்காக்க
மகத்தானகோட்டையதைகட்டிஆங்கே
எண்ணற்றதானியங்கள்களஞ்சியத்தில்
எப்போதும்வைத்திருப்பான்;பசிபஞ்சங்கள்
தன்னாட்டுமக்களினைத்தாக்காவாறு
தடுத்தாள்வான்போர்க்காலம்காப்பான்.இந்த
பொன்னரியதத்துவத்தைமனிதனுக்குப்
புகட்டியதுபுற்றுகளும்எறும்பும்தானே!
போரில்லாஓருலகம்புற்றுக்குள்ளே
புரிந்துசெயல்படுகின்றதலைமைஅங்கே
நீருக்கும்நிலத்திற்கும்சண்டைஇல்லை!
நீபெரியன்&நான்பெரியன்&
யாருணவையார்பறித்தல்பதுக்கல்இல்லை!
யாவருக்கும்சமச்சீர்தான்புதுமைஆட்சி
ஊருலகைக்கட்டியாளும்மனிதன்;இந்த
ஒப்புமைஇல்லாச்செயலைப்போற்றவேண்டும்!

வேர்வைக்குத்தான் வெற்றி

முன்னேற்றம்வேண்டுமென்றமுனைப்புக்கொள்ளு!
மூவுலகும்துணைநிற்கும்விழித்துக்கொள்ளு!
உன்னேற்றம்உன்எழுச்சிமுயற்சியாலே
உலகையேதுயிலெழுப்பு;செயல்கள்செய்நீ!
கண்ணோட்டம்கருத்தோட்டம்புதுமையாக்கு!
காலடியில்உலகமேசுழலும்காண்பாய்!
முன்னோட்டப்படிக்கட்டில்முந்திநில்லு!
முப்பிறப்பின்பலனிப்போஉன்னைத்தேடும்!
விலைகொடுத்தும்வினைமுடிக்கும்துணிவுவேண்டும்!
வீராப்புவெறும்பேச்சுவென்றிடாது!
மலையேறவேண்டுமெனில்வலிமைவேண்டும்!
மனத்துணிவுநம்பிக்கைஉறுதிவேண்டும்!
நிலைஉயரவேண்டுமெனில்உழைக்கவேண்டும்!
நெறிதவறாக்குறிதவறாமுயற்சிவேண்டும்!
அலையைப்போல்முன்னோக்கும்ஆற்றல்வேண்டும்!
அதுஉனக்குத்தரும்வெற்றி!தோல்வி
நேர்மையுடன்உழைத்துப்பார்!நெஞ்சுதூக்கி
நித்தம்நீபாடுபடு!வெற்றிஉன்னை
ஓர்மையுடன்தேடிவரும்!உலகம்உன்னை
உத்தமனாய்அடையாளம்காட்டும்!காண்பாய்!
சீர்மைக்குச்சிறுமையேஇல்லை;நீயும்
சிந்தித்துச்செயத்தக்கசெய்துபாரு!
வேர்வைக்குத்தான்வெற்றி!ஏய்ப்போர்க்கல்ல!
வியந்துயர்த்தும்உலகம்உனைப்போற்றிப்பாடும்!

சமுதாயம் நிமிர வேண்டும்!

ஆண்சாதிபெண்சாதிஇரண்டேயன்றி
அடுக்கடுக்காய்ச்சாதிகள்ஏன்?ஒழிந்தாலென்ன?
தான்சாதிதானுயர்வுமற்றசாதி
தாழ்ந்ததெனும்நிலையழிந்துபோனாலென்ன?
வீண்சாதிபேசுவதால்மோதல்சாதல்
விடிவில்லாபாழிருட்டேசேர்க்கும்;இந்த
தான்தோன்றிசாதிமுறைவேண்டாம்;நாட்டில்
சமத்துவத்தைப்பயிர்செய்வோம்;அமைதிசேர்ப்போம்!
எத்தனையோநூற்றாண்டாய்சாதிபேசி
இப்புனிதமனிதத்தைச்சீரழித்தார்!
வித்தகமாய்நால்வருணகுலஆச்சாரம்
வேரூன்றமனிதகுலம்வீழ்த்திச்சாய்த்தார்!
கொத்தடிமைஏற்றத்தாழ்விகழ்ச்சிபேசி
கொடுஞ்செயலாம்தீண்டாமைதூண்டிவிட்டார்!
சத்துணவில்“சமத்துவபுரத்தில்”“பஸ்ஸில்
சந்தையினில்”சமச்சீரில்”உண்டோசாதி
கடைபோட்டுசாதிவெறிவளர்க்கலாமோ
கண்மூடித்தனம்விட்டுவிழித்தாலென்ன?
நடைபோட்டுச்சட்டத்தின்துணையினோடு
நாளுமதைக்காப்பதுவும்நீதிதானா?
விடைகண்டபலதலைவர்சாதிவாரி
வியூகங்கள்ஆய்கின்றார்ஞாயம்தானா?
தடைவேண்டும்;இனம்ஒன்றேஆக்கல்வேண்டும்!
தப்பேதுசமுதாயம்நிமிரவேண்டும்!
மனிதமுண்டுசாதியில்லைஎன்றேகூறும்
மகத்தானநாள்வரும்நாள்எந்தநாளோ?
அணிதிரண்டுசாதிவாரிபோர்கள்செய்வோர்
அதைமறந்துஓரணியில்திரள்வதெந்நாள்?
பிணியொத்தசாதிசதிஒழிந்ததென்றே
பிரகடணப்படுத்தும்நாள்எந்தநாளோ?
கனியிருக்கக்காய்கவர்தல்தீர்வதெந்நாள்?
கருமுதலேசாதியின்றிப்பிறப்பதெந்நாள்?

துடிப்போடு முன்னேறு!

மூடப்பழக்கத்தைமூடு– வாழ்வின்
முன்னேற்றவழித்தடத்தைநாடு!
ஓடிப்பொருள்புகழ்தேடு– அயரா
உழைப்புதான்உயர்வென்றுபாடு!
எவரெவரும்சமமென்றுஆக்கு– நாட்டில்
ஏழைபணக்காரன்நிலைநீக்கு!
தவறாதுகல்விதொழில்ஊக்கு– ஆய்ந்து
தளிர்க்கட்டும்இளைஞர்மனப்போக்கு!
வளரவிடுபுதுமைகளைப்பற்றி– அது
வழிதிறந்தால்உலகுபெறும்வெற்றி!
புலரட்டுஅறிவுலகம்பெற்றி– ஆங்கே
போய்மறையும்பேதமைகள்வற்றி!
பஞ்சமினியில்லெயெனச்சொல்லு– ஆன்ற
பகுத்தறிவால்உலகத்தைவெல்லு!
துஞ்சுவதைகெஞ்சுவதைக்கொல்லு– எதிலும்
துடிப்போடுமுன்னேறிநில்லு!
நம்பிக்கைகொண்டுநீவாழு– அறிவு
நன்மைதரும்இன்பமெலாம்சூழும்!
தெம்புகொள்உறுதியுனைஆளும்– எட்டுத்
திசைமுழுதும்புகழ்பரவிநீளும்!

யார் ஆண்டாலும்!

இனிஎவரும்அணிமாறிஆட்சிக்கட்டில்
ஏறிடலாம்;தமிழ்நாட்டில்ஏழைபெற்ற
கனிபோன்றதிட்டத்தைநிறுத்திடாமல்
கண்டிப்பாய்தொடர்ந்ததனைசெயத்தான்வேண்டும்!
நனிமிக்கசாணக்யன்அர்த்தசாஸ்த்ரம்
நவிலுகிறஆட்சிமுறைஇதையேசொல்லும்!
எனக்கென்னஎன்றிருந்தால்;ஆட்சி;வீழ்ச்சி
எவ்வழியோநடந்திடலாம்;வரலாறுண்டு!
கொலைகளவு;கற்பழிப்பு;ஜாதிமோதல்
கட்டப்பஞ்சாயத்து;கந்துவட்டி
தலைமுறையைஅழித்தொழிக்கும்குடிப்பழக்கம்!
தனைமறக்கும்அபின்கஞ்சாபோதைப்பாதை
நிலைகுலைக்கும்கடத்தல்கலப்படப்பதுக்கல்
நெறிதவறும்நீதிமுறைகள்ளநோட்டு
விலைபோடும்கொத்தடிமைசிறார்கொடுமை!
வறுமையினைப்பஞ்சத்தைஒழிக்கவேண்டும்!
மத்தியிலேஆட்சிமொழி!நீதிமன்றில்
வழங்குமொழிதமிழ்வேண்டும்!சென்னைதன்னைச்
சுற்றிலுமேதுணைநகரம்அமைக்கவேண்டும்!
திருக்குறள்தேசியநூலாய்ஆக்கவேண்டும்!
வற்றாதநதிகளையேஒன்றாய்ஆக்கி
வளம்மிகுந்ததமிழகமாய்உயர்த்தவேண்டும்!
வெற்றுரைஏன்மெட்ரோரயில்சேதுத்திட்டம்
வியக்கும்வகைசெயல்படுத்திஆளவேண்டும்!
மின்சாரம்பெருக்கிடவேதிட்டம்வேண்டும்!
மிகுமின்சாரரம்பிறர்க்குவிற்கவேண்டும்!
தென்சாரல்மலையோரம்காற்றாலைகள்
திசையெங்கும்அனல்புனல்சூரியமின்சாரம்
தன்சாரம்பார்க்காமல்பெருக்கவேண்டும்!
தகுதிமிகுபெருந்தொழிலின்அதிபர்;மற்றும்
பொன்சாரம்கோபுரத்தில்போர்த்தும்தக்கார்
போன்றவரைமுதலீட்டார்ஆக்கவேண்டும்!
காவிரிநீர்த்தாவாவைத்தீர்க்கவேண்டும்!
கல்வியில்சமச்சீர்தான்ஓங்கவேண்டும்
மேவிய”தை”முதலேதமிழ்ஆண்டு
மேலும்பலகாட்டாற்றில்அணைகள்வேண்டும்!
தாவிவரும்மழைநீரைஏரிகுளத்தில்
தடுத்தாளக்கரையுயர்த்தவேண்டும்;மேற்கே
பாய்நதியைக்கீழ்திசையில்திருப்பவேண்டும்!
பரிந்துரையால்பெரியார்அணைத்தீர்வுவேண்டும்!
கடற்கரையில்நதிக்கரையில்கூவம்ஓரம்
காலமெலாம்வாழ்வோரின்நிலையுயர்த்தி
இடர்பாடுஇலாநிலையில்வாழுதற்கு
ஏற்றதொருவழிகாணவேண்டும்;உழவர்
தொடர்வருவாய்பெற்றுயர்ந்துவாழத்தக்க
திட்டங்கள்வகுத்திடவும்வேண்டும்;நாட்டை
அடர்வருவாய்மாநிலமாய்த்தொழில்கள்கூட்டி
ஆண்டிடவும்வேண்டும்என்வேண்டுகோளே!
அதிகாரம்“அதி”“காரம்”ஆய்வி
அகங்காரம்ஆணவங்கள்ஓங்கிடாமல்
விதிமீறல்,லஞ்சமொடு,ஊழல்தன்னை
விளைக்காமல்அரசுவழிதொடரவேண்டும்!
விதிப்பயனேஎன்றிருந்தகாலம்போச்சு
விம்முகிறநிலை;ஏழைபெறுவா
கொதிப்படக்கவல்லவர்கள்எவரும்இல்லை!
குறியிடுவார்!வாக்களிப்பார்!ஆட்சிமாறும்!
வேண்டுதல்வேண்டாநிலையைஏற்றிடாமல்
விருப்புவெறுப்பிலாநிலையைபோற்றிடாமல்
தூண்டுதல்செய்அறநெறியைஅறிஞர்கூற்றைத்
துச்சமெனஇகழ்ந்ததனால்;இடிப்பாறின்றி
மாண்டழிந்தஆட்சிபலஉண்டு;இதுதான்
வரலாறு;ஆள்பவர்கள்உணரவேண்டும்!
ஆண்டழிந்தான்இராவணனே!விபீசனன்தன்
அறிவுரைகள்ஏற்கவில்லை;முடிவுஎன்னே?

உயிர்தந்து காத்த தமிழ்

நெல்லொன்றுமுளைக்குமே;கிளைஏழுவிரிக்குமே
கதிரொன்றில்நூறுநெல்;கிளைஏழும்விளைக்குமே!
சொல்லொன்றுவிரியுமே;பொருள்நூறுசிரிக்குமே!
செம்மொழியாம்நம்தமிழின்சிறப்பதிலேஇருக்குமே!
எள்ளியொருகுப்பையிலேஎடுத்தெரிந்தகொட்டையுமே
தளிர்த்தங்குவளர்ந்தொருநாள்மாங்கனிகள்தருதல்போல்
நல்லிதயமில்லாதநரிக்கூட்டம்நம்தமிழை
அள்ளியெறிந்தழித்தார்கள்இதுதானேவரலாறு!
ஆரியர்கள்களப்பிரர்கள்வடுகரொடுமராட்டியர்கள்
அடுத்தடுத்துஇசுலாமியர்ஆங்கிலேயர்தொடர்கதைபோல்
சீரியநம்தமிழழித்துஅவரவர்கள்மொழிதனையே
சிம்மாசனம்ஏற்றியுமேசெந்தமிழைப்புறக்கணித்தார்!
மாறியதுஅவர்களதுஆட்சியதிகாரங்கள்
மாறவில்லை;மாற்றமில்லை;அழிவில்லைதமிழுக்கு
தேறியது;செந்தமிழும்செம்மொழியாய்உலகறிய
செழித்ததுவும்;வளர்ந்ததுவும்;தழைத்ததுவும்தமிழ்தானே!
தொல்காப்பியர்இளங்கோமுதல்ஈரடியார்நாலடியார்
நாயன்மார்சித்தர்முதல்நற்சங்கப்புலவர்களும்!
ஒல்காப்புகழ்கம்பரம்பிகாபதியொட்டக்கூத்தர்
வில்லியோடுநக்கீரர்புகழேந்திஅவ்வையார்
திரிவடராசப்பர்சுப்ரதீபக்கவிபோல்வார்
அரிதானதமிழ்காத்துஅரியணையில்ஏற்றினார்கள்!
தென்னாட்டுமன்னர்பலர்புலவர்களின்புரவலராய்
எந்நாளும்காத்ததனால்செந்தமிழும்செழித்ததன்றோ!
காற்றடித்தால்நாணலதுகண்டிப்பாய்ஒடியாது!
கயவர்கள்சூழச்சியினால்கன்னித்தமிழ்அழியாது!
சீற்றமிகு“கடற்கோளில்”சிக்கிப்பின்மீண்டதுவே
முடத்திருமாறன்மூலம்கடைச்சங்கம்கண்டதுவே!
முதற்சங்கம்இடைச்சங்கம்மூழ்கினும்தமிழ்மட்டும்
வாழ்கிறதுகன்னியாகவற்றாதஇளமையோடு
மொழியடிமைகொள்ளுதற்குமுனைந்தார்அறுபத்தைந்தில்
முழுமூச்சில்பலபேர்கள்உயிர்தந்துதமிழ்காத்தார்!
சங்கத்தில்வளர்ந்ததமிழ்!தாய்மடியில்தவழ்ந்ததமிழ்!
சிங்கத்தின்நடைபோட்டுச்சிம்மாசனமிருந்த
பொடுங்கருவிஎனப்புலவர்பொன்னாவில்தழைத்ததமிழ்!
புதுமையெழில்கன்னியெனப்பூத்திருக்கும்இனிய
மங்காதசெம்பொன்னாய்மணிமுத்தாய்ஒளிகாட்டி
எங்களதுவாழ்வோடுஇணைந்திட்டசடர்மணியே!
திங்களிளம்பருதிகாற்றுவானமொடுபூமிபோல
செந்தமிழேநீவாழ்க!செம்மொழியே
Back to Top