Skip to content
| | | |
| | | |
| மூச்சை | யடக்கிநான் | மூழ்கி | எடுக்கவா |
| முத்துக் | கோர்க்கவா | கண்ணே! | |
| ஆழக் | கடலிலே | அமுத | கலசத்தின் |
| அழகை | ருசிக்கவா | பெண்ணே! | |
| காற்றுத் | திசையிலே | கடலின் | அலையிலே |
| கலத்தைச் | செலுத்தவா | கண்ணே! | |
| சேற்றுத் | தாமரை | சேர்சுரும் | பாகதேன் |
| ஊற்றில் | களிக்கவா | பெண்ணே! | |
| மந்த | மாலையில் | வந்த | தென்றலில் |
| சொந்தம் | கொண்டிடும் | சுகமே! | |
| சிந்து | பூந்தமிழ் | தந்த | சந்தமே |
| விந்தை | பூத்தபே | ரழகே! | |
| மோடி | இல்லைநீ | கோடி | மலர்கூடி |
| நாடி | உருவான | நங்கை! | |
| கோடி | சுகராகம் | பாடி | மயக்கும் நீ |
| தேடி | வளஞ்சேர்க்கும் | கங்கை! | |
| தங்க | நிலாவின் | தங்கை | நிலாநீ |
| தரையில் | மலர்ந்தபெண் | மாயம்! | |
| எங்கு | தழுவினும் | அங்கம் | சுகம்தரும் |
| அமுத | கலசநிறை | காயம்! | |
| தொடவும் | தொடருமே | தொடர | படருமே |
| விடவும் | சுடுமே | மோகம்! | |
| தொடவும் | முடியலே | விடவும் | முடியலே |
| அடடா | மீறுதே | தாகம்! | |
| மன்னவனே! | என்னுளத்தைக் | கொள்ளை | கொண்ட |
| மாதவனே! | காமனென | வந்த | தேவே! |
| சின்னவளைப் | பார்வைவலை | தன்னால் | சுற்றி |
| சிறைபடுத்தி | உன்வலையில் | போட்ட | கண்ணா! |
| பெண்னெனக்குப் | பெருநிதியாய்க் | கிடைத்த | தென்னா! |
| பேதையெனைச் | சீதையாக்க | வந்த | ராமா! |
| உன்னைநினைத் | துருகுவது | எந்தன் | வேலை |
| ஓடிவரக் | கூடாதா | இந்த | வேளை! |
| வரும்தென்றல் | காற்றுனது | பெருமை | சொல்லும் |
| வளர்பச்சை | தத்தையதும் | அதையே | சொல்லும் |
| பெரும் | ஒளிசேர் | கதிருமுந்தன் | புகழைச் |
| பிறைநிலவும் | மணமலரும் | அதையே | சொல்லும் |
| கரைபுரளும் | காட்டாற்று | வெள்ளம் | போலே |
| காரிகையென் | காதலுணர் | வெல்லை | தாண்டி |
| வருவதினை | அறியாயோ | வாவா | கண்ணா! |
| வாழ்வெனக்குத் | தரவேண்டும் | மன்னா | வாவா! |
| நீலநிற | கண்பார்த்துப் | பூத்துப் | போச்சு! |
| நின்றுஎதிர் | பார்த்துக்கால் | ஓய்ந்து | போச்சு! |
| மீளமுடி | யாதமனம் | தவித்துப் | போச்சு! |
| மெல்லியலென் | மேனிதுரும் | பாகிப் | போச்சு! |
| வாழநினைத் | திருந்துமனம் | ஏங்கிப் | போச்சு! |
| வரவிலையேல் | நின்றுவிடும் | உடலில் | மூச்சு! |
| பாழ்மனத்தைத் | தாங்கவுடன் | வந்தா | லாச்சு! |
| பதைத்திறந்து | உயிர்போனால் | உனக்கே | ஆச்சு! |
| உறவாட | வாகண்ணா | இரவோடும் | முன்னாலே |
| ஒருகோடி | இன்பம் | இங்கே! | |
| உறங்காமல் | விரகமொடு | உனக்காகக் | காத்திருப்பேன் |
| வரவேண்டும் | வாவா | கண்ணா! | |
| தரவேண்டும் | நீஇன்பம் | பெறவேண்டும் | நானதனை |
| வரம்,வேண்டிக் | கேட்கிறேன் | கண்ணா! | |
| பொறுப்பேனோ | மனமில்லை | மறுத்துநீ | போவாயோ |
| வெறுத்துயிரை | விடுவேன் | கண்ணா! | |
| கண்ணுக்குத் | தெரியாத | இமையாக | நீயிருப்பாய் |
| காத்திருப்பேன் | வாவா | கண்ணா! | |
| கருமைநிற | மானாலும் | காரிருளில் | நானறிவேன் |
| கண்மறைந்து | ஏய்க்காதே | கண்ணா! | |
| தென்றலெந்தன் | தோள்தொடவே | உனையெண்ணி | நான்மலர்ந்தேன் |
| திண்டாட | விடலாமா | கண்ணா! | |
| பெண்பாவம் | பொல்லாது | என்னைநீ | கொல்லாதே |
| பொறுமையெனக் | கிலையே | கண்ணா! | |
| அத்தானைத் | தேடிவந்த | மானே | -ஒன்றாய் |
| ஆலாலம் | பாடலாம்வா | தேனே | |
| முத்தாரப் | பல்வரிசை | காட்டி | -என்னை |
| பித்தாக்கி | னாய்காதல் | ஊட்டி | |
| | | |
| | | |
| தடையாரு | விடைகூறு | தமிழ்தாங்கி | வருவேன் |
| இடையூறு | இனியேது | வா | -இளங் |
| கொடிமுல்லை | இடைநெளிய | படைவெல்லும் | விழியோடு |
| விடிவெள்ளி | யொளிகூட்டி | வா | -என்னுடன் |
| விளையாட | உறவாட | வா | |
| | | |
| | | |
| மாஞ்சோலை | குயில்கூவ | மயில்கூடி | நடமாட |
| பூஞ்சோலை | இளங்காற்றே | வா | -அமுத |
| சாந்தத்தை | முகத்திலே | காந்தத்தைக் | கண்ணிலே |
| சேர்ந்திணைத்த | சிலையே நீ | வா | – எழில் |
| சித்திரப் | புதையலே | வா | |
| | | |
| | | |
| இருகனியில் | முக்கனியின் | சுவைகூட்டித் | தருமழகே |
| இன்பத்தேன் | சுவையூற்றே | வா | -அரும் |
| திருக்குறளின் | பொருளாக | கவிகம்பன் | பாட்டாக |
| சேர்ந்தசெந் | தமிழே நீ | வா | -என்னைச் |
| சேர்ந்தென்றும் | துணையிருக்க | வா. | |
| | | |
| காதல்வேகம் | கட்டுக்காவல் | மீறச்செய்யுது: | ஆசை |
| கனிவுகொண்டு | இனிமைகாணத் | துடித்து | நிற்குது: |
| ஈதல் | என்ற | தத்துவமே | இங்குவிளைந்தது! |
| இறைவனாகி | அருள்சுரந்து | வளரச்செய்யுது! | |
| மாலைவேளை | வந்ததுமே | மயக்கம்சேருது! | &இளமை |
| மானைப்போல | துள்ளியாடி | இன்பம்தேடுது! | |
| பாலைத்தேனை | சுவைகெடுத்து | நிலவுஇனிக்குது: | உணர்ச்சி |
| பாட்டுத்தாளம் | பூட்டுச்சாவி | யாகத்துடிக்குது. | |
| ஊரடங்கும் | வேளைகூட | விழித்திருக்குது: | கலப்பு |
| உறவுக்காக | உலகத்தையே | இழுக்கத்துணியுது! | |
| ஈரநெஞ்சில் | இளமைவேகம் | மின்னலாகுது! | தடுக்க |
| எவரினாலும் | முடிவதில்லை | எல்லைக்காணுது! | |
| கலந்துவிட்ட | உறவிலங்கு | அமைதிகாணுது! | வாய்கள் |
| கதவடைத்த | இதயத்தாலே | பேச்சை | மறக்குது! |
| எழுச்சிகொண்ட | உணர்ச்சியங்கு | உறைந்துவிட்டது! | காதல் |
| இன்பமென்ற | கடலின்எல்லை | அலைகள் | பாடுது! |
| | | |
| | | |
| காதல் | என்பது | மாயம் | – அது |
| கண்கண் | மோதிய | காயம்! | |
| மதுவை | மயக்கும் | மோகம் | -காதல் |
| மறைந்து | போகும் | மேகம்! | |
| வயது | கொடுத்த | தாகம் | – அது |
| வரம்பு | மீறினால் | சோகம்! | |
| விதியை | மாற்றும் | வேகம் | – காதல் |
| விடைதான் | உணர்ச்சிப் | போகம்! | |
| கண்பொருள் | நோக்காப் | பார்வை | – மறைக்கும் |
| காதல் | தரும்திரைப் | போர்வை! | |
| முன்படு | பொருளறி | யாது | – காதில் |
| இருக்கப் | பறக்கும் | எண்ணம் | – அன்பின் |
| இன்பம் | சுரக்கும் | கிண்ணம்! | |
| உருக்க | உருகாத | உறவு | – காதல் |
| உறவைத் | துறந்து | ஓடும் | – காதல் |
| உறவு | ஒன்றையே | நாடும்! | |
| சிறகு | ஒடிபடும் | துன்பம் | – ஏற்கும் |
| தீபடு | துயரிலும் | இன்பம்! | |
| உணர்ச்சி | உயிர்களின் | சொத்து | – அதில் |
| ஒழுக்கம் | அடக்கம் | முத்து! | |
| புணர்ச்சி | இறைவன் | வேதம் | – அதன்படி |
| புரிந்து | வாழ்வதே | நீதம்! | |
| சித்தாடை | கட்டிவந்த | சிட்டு | – அவள் |
| சீனாவிலேயே | நெய்துவந்த | பட்டு! | |
| வித்தாரம் | காட்டுகிற | மொட்டு | -அவள் |
| மோகினிக்குத் | தங்கை; | தேன் வட்டு! | |
| | | |
| | | |
| கட்டான | சிலையொத்த | மேனி | – அவள் |
| காமனுக்கு | ஊற்றுதரும் | கேணி! | |
| சுட்டாலும் | சுடர்வீசும் | சங்கம் | -வளர் |
| ஜோதிவடி | வானதிவள் | அங்கம்! | |
| | | |
| | | |
| துள்ளுவதில் | இவள்கண்ணோ | மீனு | -தூரத் |
| தோற்றத்தில் | இவள்சாயல் | மானு! | |
| சொல்வதென்ன | இவள்முகமோ | பானு | -வாய் |
| சொல்வடித்தால் | கள்வடியும் | தேனு! | |
| | | |
| | | |
| கண்ணிரண்டும் | கண்டவரைக் | கட்டும் | -அது |
| காரிகையின் | பூரிப்பினால் | கிட்டும்! | |
| எண்ணிரண்டு | வயதினையே | எட்டும் | -அவள் |
| எழிற்கோலம் | முனிவரையும் | தட்டும்! | |
| | | |
| | | |
| உரசும்போது | உணர்வு | வந்தது! | |
| உற்றுப்பார்க்க | போதை | வந்தது! | வந்தது! |
| திரைமறைந்த | காதல் | வந்தது! | |
| தெவிட்டிடாத | இன்பம் | வந்தது! | வந்தது! |
| காமம்வேலி | தாண்ட | வந்தது! | |
| கட்டுப்பாடு | குறுக்கே | வந்தது! | வந்தது! |
| நானம்மிஞ்சி | நழுவ | வந்தது! | |
| நாற்குணமதை | தடுக்க | வந்தது! | வந்தது! |
| தொட்டபோது | காந்தம் | வந்தது! | |
| சுவைத்துப்பார்க்க | எண்ணம் | வந்தது! | வந்தது! |
| கிட்டப்போக | அச்சம் | வந்தது! | |
| கிறுக்குப்போல | மயக்கம் | வந்தது! | வந்தது! |
| கட்டியணைக்க | ஆசை | வந்தது! | |
| காலன்போல | பயமும் | வந்தது! | வந்தது! |
| எட்டிப்போக | நிலைமை | வந்தது! | |
| இடைவிடாத | ஏக்கம் | வந்தது! | வந்தது! |
| | | | |
| | | | |
| அவள்:- | பார்த்து | ரசிக்கத்தான் | மேனி, | அள்ளிப் |
| பருகு; | காத்திருக்கு | கேணி; | |
| ஏங்கித் | தவிக்குதே | வாநீ! | என்னை |
| இருகை | தழுவுசுகம் | தாநீ! | |
| அவன்:- | உறிஞ்சிக் | குடிக்கவா | தேனை! | – உந்தன் |
| உதட்டி | லிருக்குது | வீணே! | |
| புரிஞ்சு | அள்ளித்தா | மானே! | உனக்குப் |
| புதுப்புது | கதைதரு | வேனே! | |
| அவள்:- | நடுங்கி | ஒடுங்குதே | மனது | – இது |
| நாலும் | தெரியாத | வயது! | |
| முடங்கிக் | கிடக்கமனம் | இல்லை | – ஒரு |
| முடிவு | காண்பதுதான் | எல்லை! | |
| அவன்:- | தடுக்க | முடியாத | வேகம்! | – இது |
| தணிக்க | தணியாத | தாகம்! | |
| எடுப்பதும் | கொடுப்பதும் | போகம் | – இது |
| இறைவன் | உயிர்க்களித்த | வேதம். | |
| அவன்:- | கட்டழகே | தென்றலுன்னைத் | தொட்டுவிட்டதா | – அந்த |
| காமன்மலர் | அம்புவந்து | பட்டுவிட்டதா? | |
| பேதையேநீ | போதைமீறி | ஏங்குவதென்ன | – அங்கே |
| பேதலித்த | நெஞ்சுகதை | கூறுவதென்ன | |
| அவள்:- | ஆணழகில் | நான்மயங்க | அச்சம்வந்தது | – அதை |
| அடைந்துவிட | துணிந்தபோது | நாணம் | வந்தது |
| தேன்ததும்பி | இன்பமிங்கே | பொங்கிநிற்குது | – இதன் |
| தேவைதன்னை | தேவன்கூட | அறியவில்லையே | |
| அவன்:- | அல்லிமலர் | வெண்மதிமேல் | ஆசைவைக்குது | – அந்த |
| ஆதவன்மேல் | தாமரையும் | பாசம் | வைக்குது |
| பூத்தமலர் | வண்டுக்காக | காத்திருக்குது | – இது |
| புதுக்கதையா | பழங்கதையா | முடிவு | இல்லையா |
| அவள்:- | கட்டுப்பாடு | தடுக்குதுமனம் | கலங்கிநிற்குது | – என்னைக் |
| காவல்மீறி | எல்லைதாண்ட | ஆசை | தூண்டுது |
| இச்சையெந்தன் | லெட்சியத்தை | இடித்துநொறுக்குது | – மனது |
| இருக்கிறதா | சாகிறதா | எனத்தவிக்குது. | |
| அவன்:- | பகலிரவும் | சேர்ந்தொருநாள் | ஆனதில்லையா | – நல்ல |
| பாலும் | தேனும் | கலந்துசுவை | சேர்த்ததில்லையா |
| ஆவதென்ன | போவதென்ன | முடிவுகாண்கிறேன் | – உணர்ச்சி |
| அணையுடைத்து | பெருக்கெடுக்குது | தயக்க | மேனடி. |
Back to Top